6 ஹைகோர்ட் நீதிபதிகளுக்கு பகிரங்க கொலை மிரட்டல்.. வைச்ச டிமாண்டை கேட்டா.. ஆடிபோயிடுவீங்க!
பெங்களூரு: கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகள் 6 பேருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மிரட்டல் விடுத்த நபர், பாகிஸ்தான் வங்கியில் 50 லட்சம் டெபாசிட் செய்ய வேண்டும் என்றும், இல்லாவிட்டால் குறிப்பிட்ட 6 நீதிபதிகளை கொல்வேன் என்று உயர்நீதிமன்ற ஊழியருக்கு வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பி மிரட்டி உள்ளார்.
கர்நாடகா உயர்நீதிமன்றம் பெங்களூருவில் இருக்கிறது. இங்கு நீதிபதிகளாக உள்ள 6 பேருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.,
இதுபற்றி சைபர் கிரைம் போலீசார் தரப்பில் கூறுகையில், அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர், கர்நாடக உயர் நீதிமன்ற ஊழியர் ஒருவருக்கு, நீதிமன்றத்தின் 6 நீதிபதிகளைக் கொன்றுவிடுவதாக மிரட்டல் விடுத்திருந்தார். இதனை அடிப்படையாக கொண்டு வழக்கு பதிவு செய்துள்ளோம்.

உயர் நீதிமன்றத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி கே.முரளிதருக்கு ஜூலை 12 ஆம் தேதி இரவு 7 மணியளவில் முரளிதரின் அதிகாரப்பூர்வ மொபைல் எண்ணுக்கு ஒரு வாட்ஸ் அப் மெசேஜ் வந்தது.
அதில் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகள் முகமது நவாஸ், எச்.டி. நரேந்திர பிரசாத், அசோக் ஜி நிஜகன்னவர், எச்.பி.சந்தேஷ், கே.நடராஜன் மற்றும் பி.வீரப்பா ஆகிய 6 நீதிபதிகளைக் கொன்றுவிடுவேன் என்று மெசேஜை அனுப்பிய நபர் மிரட்டி இருந்தார்.
தாங்கள் துபாய் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்றும், பாகிஸ்தானில் உள்ள "ABL Allied Bank Limited" கணக்கில் 50 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் 6 நீதிபதிகளையும் நிச்சயம் கொன்றுவிடுவோம் என்று கூறியிருந்தார். இது தொடர்பாக பெங்களுரு சைபர் கிரைம் போலீசிடம் முரளிதர் புகார் அளித்தார்.
இந்த புகாரை அடுத்து கடந்த ஜூலை 14 அன்று, சைபர் கிரைம் காவல்துறையினர், தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவுகள் 75 (இந்தியாவிற்கு வெளியே செய்யப்பட்ட குற்றம் அல்லது மீறல்) மற்றும் 66F (சைபர் குற்றம்) மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 506 (கொலை மிரட்டல் விடுவது), 507 (அமைதியை கெடுக்கும் நோக்கில் செயல்படுவது) மற்றும் 504 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.இந்த மெசேஜ் எங்கிருந்தது வந்தது யார், அனுப்பினார்கள், அனுப்பியவர்களின் ஐபி முகவரி என்ன என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள்.
இந்த விவகாரத்தில் போலீஸ் இன்னும் யாரையும் கைது செய்யவில்லை என்று சைபர் கிரைம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆறு பேருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து? மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications