கர்நாடகா காங்கிரஸ் அரசை கவிழ்க்க 5 பன்றிகள், 42 ஆடுகள், 3 மாடுகளை பலியிட்டு சூனியம் வைத்ததா பாஜக?
பெங்களூர்: கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பாஜகவினர் கேரளாவில் பில்லி சூனிய பூஜை நடத்தி இருப்பதாக அம்மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவரும் துணை முதல்வருமான டிகே சிவகுமார் பகீர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசு விரைவில் கவிழப் போகிறது என தொடர்ந்து பாஜக தலைவர்கள் பேசி வருகின்றனர். அண்மையில் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கர்நாடகா வருகை தந்தார். அப்போதும் இதே கருத்தை ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தது பெரும் சர்ச்சையானது.

அதேநேரத்தில் கர்நாடகா காங்கிரஸில் உட்கட்சி மோதல் உச்சகட்டத்தில் இருக்கிறது; நாங்கள் ஏன் ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும்? கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு தானாகவே கவிழ்ந்துவிடும் எனவும் கர்நாடகா பாஜக தலைவர்கள் பேசி வந்தனர்.
இந்த நிலையில் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க பில்லி சூனிய பூஜை செய்யப்பட்டிருப்பதாக துணை முதல்வர் டிகே சிவகுமார் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக டிகே சிவகுமார் கூறியிருப்பதாவது: முதல்வர் சித்தராமையா, நான் உள்ளிட்டோருக்கு எதிராகவும் காங்கிரஸ் அரசுக்கு எதிராகவும் சிலர் சத்ரு பைரவி யாகம் நடத்துகின்றனர். இந்த யாகம் கேரளாவில் நடத்தப்பட்டிருக்கிறது.
கேரளாவின் ராஜராஜேஸ்வரி கோவிலில்தான் இந்த யாகம் நடத்தப்பட்டது. இதை யார் நடத்தியது, எதற்காக நடத்தினர்? யார் யார் இந்த யாகத்தில் பங்கேற்றனர்? என்பது எல்லாம் எனக்கும் தெரியும்.
கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசை ஒழித்துக் கட்டவே இந்த யாகம் நடத்தப்பட்டது. மொத்தம் 5 பன்றிகள், 21 வெள்ளாடுகள், 21 செம்மறி ஆடுகள், 5 எருமை மாடுகளைப் பலியிட்டு இந்த யாகம் நடத்தப்பட்டது. இதனை அகோரிகளே நடத்தி இருக்கின்றனர்.
பில்லி சூனியம், யாகம் நடத்துகிறவர்கள் நடத்தி சதி செய்யப்பட்டும். எங்களுக்கு கடவுளின் துணை இருக்கிறது. எங்களுக்கு கடவுளின் ஆசி இருக்கிறது. எனக்கு கடவுளின் பாதுகாப்பு இருப்பதால் எந்த பிரச்சனையும் இல்லை. இவ்வாறு டிகே சிவகுமார் கூறினார். கர்நாடகாவில் காங்கிரஸ் அரசுக்கு எதிராக பில்லி சூனியம் வைத்திருப்பதாக டிகே சிவகுமார் பேசியிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications