எம்பி சீட்டை மேடையில் உதறிய நடிகர் சிவராஜ் குமார்! டிகே சிவக்குமார் கூறியும் கேட்கலையே! காங்., ஷாக்
பெங்களூர்: மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமாரின் மூத்த மகனும், நடிகருமான சிவராஜ்குமாருக்கு காங்கிரஸ் சார்பில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் சீட் தருவதாக இன்று கர்நாடகா துணை முதல்வரும், அம்மாநில காங்கிரஸ் தலைவருமான டிகே சிவக்குமார் அறிவித்தார். இதை கேட்ட சிவராஜ்குமார் மேடையிலேயே எம்பி சீட் எனக்கு வேண்டாம் என கூறி உதறி தள்ளியது பரபரப்பை ஏற்படுத்தியது.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக அம்மாநில காங்கிரஸ் தலைவரான டிகே சிவக்குமாரும் உள்ளனர். இந்நிலையில் தான் பெங்களூர் அரண்மனை மைதானத்தில் கர்நாடகா மாநில ஆர்ய இடிகா சங்க விழா நடந்தது.

இந்த விழாவில் துணை முதல்வர் டிகே சிவக்குமார், மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மகனும், நடிகருமான சிவராஜ்குமார் பங்கேற்றார். இந்த விழாவில் டிகே சிவக்குமார் பேசினார். அப்போது அவர் நடிகர் சிவராஜ்குமாருக்கு நாடாளுமன்றத்தில் சீட் தருவதாக கூறினார்.
அதாவது மேடையில் இருந்த நடிகர் சிவ்ராஜ் குமாரை பார்த்து டிகே சிவக்குமார் பேசுகையில், ‛‛நீங்கள் அரசியலுக்கு தயாராக வேண்டும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி உங்களுக்கு சீட் தரும். எந்த தொகுதியில் சீட் கேட்டாலும் நான் தருகிறேன் என சிவராஜ்குமாரிடம் நான் கூறினேன். ஆனால் அவர் நான் 5 முதல் 6 சினிமாக்களில் நடிக்க ஒப்புக்கொண்டதாக தெரிவித்தார்.
இதையடுத்து நான் சினிமா எப்போது வேண்டுமானாலும் நடிக்கலாம். ஆனால் நாடாளுமன்றத்துக்கு செல்வதற்கு யாருக்கும் அதிர்ஷ்டம் என்பது கிடைக்காது. ஆனால் உங்களுக்கு அந்த யோகம் வந்துள்ளது. உங்களின் வீடு தேடி அந்த அதிர்ஷ்டம் வந்துள்ளது. இதனை மிஸ் செய்ய வேண்டாம். காங்கிரஸ் அரசு எப்போதும் உங்களுடன் இருக்கும்’’ என்றார்.
செம.. தெலுங்கானாவில் காங்கிரஸ் வென்றது இப்படித்தான்! கேசிஆரை வீழ்த்திய கர்நாடகா தலைவர்கள்! எப்படி?
இதையடுத்து நடிகர் சிவராஜ்குமார் மேடையில் பேசினார். அப்போது அவர் டிகே சிவக்குமாருக்கு பதிலளித்தார். இதுதொடர்பாக சிவராஜ் குமார் கூறுகையில், ‛‛என் தந்தையின் வழி நான் நடந்து வருகிறேன். எங்களின் பணி என்பது நடனம் ஆடுவது. சினிமாவில் நடிப்பது. நான் என்றைக்கும் அரசியலுக்கு வரமாட்டேன். தந்தை கற்றுதந்த வழியில் நடக்க இருக்கிறேன். எனக்கு அரசியல் என்பது வேண்டாம்.
ஆனால் எனது மனைவி கீதா முன்னாள் முதல்வர் பங்காரப்பாவின் மகள். அவருக்கு அரசியலில் ஆர்வம் இரந்தால் தாராளமாக அரசியலில் இறங்கலாம். இது நடந்தால் அவருக்கு எனது முழு ஆதரவு கொடுப்பது என் வேலையாக இருக்கும். மனைவி கீதா தேர்தலில் போட்டியிட விரும்பினால் நான் தடுக்க மாட்டேன். அவருக்கு நிச்சயம் ஆதரவு வழங்குவேன்’’ என்றார்.
இதன்மூலம் நடிகர் சிவராஜ்குமார் காங்கிரஸ் சார்பில் நாடாளுமன்ற தேர்தலுக்கு வழங்கிய சீட்டை உதறி தள்ளியுள்ளார். இருப்பினும் அவரது மனைவி கீதா கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட தொடங்கினார். முன்னதாக அவர் முன்னாள் முதல்வர் குமாரசாமியின் ஜேடிஎஸ் கட்சியில் இருந்த நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு தாவினார்.
கீதாவின் தந்தை பங்காரப்பா காங்கிரஸ் கட்சியில் இருந்த நிலையில் கர்நாடகா முதல்வராக 1990 முதல் 1992 வரை இருந்தார். அதோடு கீதாவின் சகோதரர்களான குமார் பங்காரப்பா, மதுபங்காரப்பா ஆகியோர் தீவிர அரசியலில் உள்ளனர். இதில் மதுபங்காரப்பா தற்போது கர்நாடகா அரசில் பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருக்கிறார். இவர் சிவமொக்கா மாவட்டம் சொரபா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் மதுபங்காரப்பா தனது அண்ணனும், சிட்டிங் எம்எல்ஏவாகவும் இருந்த பாஜகவின் குமார் பங்காரப்பாவை தோற்கடித்தார்.
சிவராஜ்குமாரின் மனைவி கீதாவை பொறுத்தமட்டில் அவர் தனது தம்பி மதுபங்காரப்பாவை தான் அரசியலில் பின்பற்றி வருகிறார். இதற்கு முன்பு மதுபங்காரப்பா, கீதா ஆகியோர் ஜேடிஎஸ் கட்சியில் இருந்தனர். அதன்பிறகு மதுபங்காரப்பா காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவரை பின்பற்றி கீதாவும் காங்கிரஸில் ஐக்கியமானார். மேலும் கடந்த மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட மதுபங்காரப்பாவுக்கு ஆதரவாக கீதா தனது கணவர் சிவராஜ்குமாருடன் சேர்ந்து தீவிர பிரசாரம் செய்து வெற்றி பெற வைத்தார்.
இந்நிலையில் தான் அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் சிவராஜ்குமாரை காங்கிரஸ் சார்பில் போட்டியிட வைத்தால் அது காங்கிரஸ் கட்சிக்கு பூஸ்ட்டாக அமையும். அதாவது நடிகர் சிவராஜ்குமாருக்கு மாநிலத்தில் அதிகமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் மறைந்த அவரது தந்தையும் நடிகருமான ராஜ்குமார் ரசிகர்கள், மறைந்த தம்பி நடிகர் புனித் ராஜ்குமார் ரசிகர்களின் ஓட்டுகளும் காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால் தான் சிவராஜ்குமாருக்கு நாடாளுமன்ற தேர்தலில் சீட் வழங்க காங்கிரஸ் ஆர்வம் காட்டியது. இருப்பினும் அவர் அரசியல் வேண்டாம் என பின்வாங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications