பல ஆண் நண்பர்கள்.. மகாலட்சுமிக்கு ஒரே சிரிப்பு.. டக்குனு வந்து நின்ற பெங்களூர் காதலன்.. உடனே 59 பீஸ்
பெங்களூர்: பெங்களூர் பெண்ணின் கொலையில் அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகி பதற வைத்து வருகிறது. இளம்பெண்ணை கொலை செய்தவரை தேடி போனால், அவரது சடலம் கிடப்பதை பார்த்து போலீசார் அதிர்ந்தனர்.. என்ன தான் நடந்தது?
பெங்களூருவின் வயலிக்காவல் பகுதியை சேர்ந்த 27 வயது மகாலட்சுமி, கணவரை பிரிந்து வாழ்கிறார். 4 வயதில் ஒரு மகன் உள்ள நிலையில், 9 மாதங்களுக்கு முன்பு பெங்களூரு வயாலிகாவல் அருகே உள்ள பசப்பா கார்டன் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.. ஆனால், மகாலட்சுமியின் குடும்பம் நேபாளத்தில் உள்ளது.

ரத்தக்கறைகள்: கடந்த சில தினங்களுக்கு முன்பு, மகாலட்சுமி தன்னுடைய வீட்டில் பிணமாக கிடந்தார். வீடு முழுவதும் ரத்தக் கரைகள் இருந்தன.. அவரது சடலம் துண்டு துண்டாக வெட்டப்பட்டு, பிரிட்ஜில் வைக்கப்பட்டிருந்தது.. ஃபிரிட்ஜ் முழுக்க, சடலத்தில் புழுக்கள் நெளிந்திருந்தன. மகாலட்சுமியின் தலையை மட்டுமே 3 பகுதிகளாக வெட்டப்பட்டிருந்தது. அவரது கால்கள் துண்டிக்கப்பட்டிருந்தது. குடல், தலைமுடி உள்ளிட்ட பிற பாகங்கள் பிளாஸ்டிக் கவரில் தனியாக கட்டப்பட்டிருந்தது.
இதையடுத்து போலீசாரின் விசாரணை தீவிரமானது. அப்போதுதான், மகாலட்சுமிக்கு மேற்கு வங்க இளைஞர் முக்தி ரஞ்சன் ரே என்பவருடன் நெருக்கம் ஏற்பட்டதாகவும், இதனாலேயே தம்பதிக்குள் தகராறு வந்து, மகாலட்சுமியின் கணவர் பிரிந்து சென்றதாகவும் கூறப்படுகிறது. அதற்கேற்றவாறு, மகாலட்சுமியின் செல்போனை ஆராய்ந்ததிலும், ரஞ்சனுக்கே செல்போனில் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசியிருப்பது உறுதியானது.. மகாலட்சுமியின் கணவரும் இதையே உறுதி செய்திருந்தார்..
சடலம்: எனவே, மேற்கு வங்கத்தில் ரஞ்சனை கைது செய்ய போலீசார் தயாரானபோது, ஒடிசா பத்ராக் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் ரஞ்சன் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இது போலீசாருக்கு அதிர்ச்சியை தந்த நிலையில், ரஞ்சனின் மரணம் தற்கொலையா? கொலையா? என்ற விசாரணையில் இறங்கினர்.
அப்போதுதான், இந்த விவகாரத்தில் பல பகீர் தகவல்கள் வெளியாகின.. ரஞ்சன் போலீசுக்கு பயந்து தற்கொலைதான் செய்து கொண்டுள்ளார்.. ஆனால், தற்கொலை செய்வதற்கு முன்பு, டைரியில் சில விஷயங்களை எழுதி வைத்துள்ளார்.. அந்த குறிப்புகளை போலீசார் கண்டெடுத்துள்ளனர்.
விவாதம் : அந்த டைரியில், "என்னுடைய காதலி மகாலட்சுமியை செப்டம்பர் 3-ந்தேதி கொலை செய்தேன்.. சம்பவத்தன்று மகாலட்சுமி வீட்டுக்கு சென்றுள்ளார்.. அங்கு போனபோதுதான், அவளது நடத்தையை கண்டு அதிர்ச்சி அடைந்துவிட்டேன்.. விரக்தியடைந்தும் விட்டேன்.. இது தொடர்பாக நான் அவளுடன் சண்டை போட்டேன். அப்போது மகாலட்சுமி என்னை தாக்கி விட்டார். இதனால் ஆத்திரமடைந்த நான், அவளை கொலை செய்து விட்டேன்.
கொலை செய்த பிறகு, உடலை 59 துண்டுகளாக்கி பிரிட்ஜில் வைத்து விட்டேன்... அவளுடைய நடத்தையால் எரிச்சலடைந்தே, இப்படி கொலை செய்தேன்" என்று எழுதி வைத்துள்ளார். இதையடுத்து, ரஞ்சனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, முக்தி, சசிதர் மற்றும் சுனில் ஆகிய சக பணியாளர்கள் 3 பேருடன், மகாலட்சுமி தகராறில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. எனவே, சஞ்சய் தவிர, மற்ற 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்..
அஷ்ரப்: அதேபோல, அஷ்ரப் என்பவருடன் மகாலட்சுமி நெருங்கி பழகியிருக்கிறார். அவரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நிறைய ஆண் நண்பர்களுடன் மகாலட்சுமி பழகி வந்துள்ளதால், வழக்கின் விசாரணை இனியும் தொடரும் என்றே நம்பப்படுகிறது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications