இஸ்லாமியர்களின் கேப், டிராவல்ஸை பயன்படுத்தாதீங்க! இந்துத்துவா அமைப்பு கர்நாடகாவில் புது பிரச்சாரம்
பெங்களூர்: கர்நாடகாவில் இஸ்லாமியர்களின் கேப்கள், வாகனங்கள், டிராவல்ஸ் நிறுவனங்களை புறக்கணிக்க வேண்டும் என்று இந்துத்துவா அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
கர்நாடகாவில் மத ரீதியான பிளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. உடுப்பில் உள்ள ஹொஸா மார்குடி கோவிலில் நடக்கும் விழாவில் இஸ்லாமியர்கள் கடை போட தடை விதிக்கப்பட்டது.
இஸ்லாமியர்களுக்கு எதிராக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

தடை மேல் தடை
அதேபோல் மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களில் லவுட் ஸ்பீக்கர் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களின் கடைகளை புறக்கணிக்க வேண்டும் என்று கடுமையாக பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் கர்நாடகாவில் ஹலால் பொருட்களை வாங்க கூடாது என்றும் இந்துக்கள் இடையே பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் மொத்தம் உள்ள 7 கோடி மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 13 சதவிகிதம் பேர் இஸ்லாமியர்கள்.

இஸ்லாமியர்
இந்த நிலையில் அங்கு இஸ்லாமியர்களின் பிஸ்னஸ்கள், கடைகளை குறி வைத்து பொருளாதார ரீதியான எதிர்ப்புக்களை இந்துத்துவா அமைப்பு கொடுத்து வருகிறது. பொருளாதார ரீதியாக இஸ்லாமியர்களின் பிஸ்னஸ்களை முடக்கும் வகையில் இது போன்ற எதிர்ப்புகளை இந்துத்துவா அமைப்புகள் தொடுத்து வருகின்றன. இது இஸ்லாமியர்களை பெரிய அளவில் பாதிக்க தொடங்கி உள்ளது.

கர்நாடகா
தற்போது இதில் புது வரவாக கர்நாடகாவில் இஸ்லாமியர்களின் கேப்கள், வாகனங்கள், டிராவல்ஸ் நிறுவனங்களை புறக்கணிக்கும் முடிவை இந்துக்கள் எடுக்க வேண்டும் என்று இந்துத்துவா அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. பாரத ரக்சானா வேதிகா என்ற இந்துத்துவா அமைப்பு இந்த அழைப்பை விடுத்து இருக்கிறது. இந்த அமைப்பை சேர்ந்த உறுப்பினர்கள் கர்நாடகாவின் பல பகுதிகளுக்கு சென்று மக்களிடம் இது தொடர்பான கோரிக்கைகளை வைத்துள்ளனர்.

பெங்களூர்
முக்கியமாக பெங்களூரில் பல்வேறு இடங்களுக்கு சென்று இது தொடர்பாக மக்களிடம் கோரிக்கை வைத்துள்ளனர். அதில் நீங்கள் பெங்களூரில் கேப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், அதில் இஸ்லாமிய டிரைவர் உங்களுக்கு வந்தால் அவரின் காரில் பயணம் செய்யாதீர்கள் என்று குறிப்பிட்டுள்ளனர். அதோடு இந்து கோவில்கள், பயணங்களை மேற்கொண்டால் இஸ்லாமியர்களின் பேருந்துகளை பயன்படுத்தாதீர்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாமிசம்
நாம் மாமிசம் சாப்பிட மாட்டோம். ஆனால் அவர்கள் மாட்டுக்கறி சாப்பிடுவார்கள். நமது கலாச்சாரத்திற்கு எதிரானவர்கள் அவர்கள். அதனால் அவர்களின் காரில் நாம் பயணிக்க கூடாது. அவர்கள் நம்மை காப்ரீஸ் என்று அழைப்பார்கள். அவர்களுக்கு நாம் பாவம் செய்தவர்கள். அவர்களின் காரில் நாம் ஏன் பயணிக்க வேண்டும் என்று பாரத ரக்சானா வேதிகா அமைப்பின் தலைவர் பாரத் ஷெட்டி தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications