பெங்களூர் மசாஜ் சென்டர் காதலி.. 25 முறை கத்தியால் குத்திய டிரைவர்... திடுக்கிடும் தகவல்
பெங்களூர்: பெங்களூர் ஜெயநகரில் உள்ள மசாஜ் சென்டரில் வேலை செய்த கணவனை இழந்த 42 வயது பெண்ணை 25 முறை கத்தியால் குத்தி கொன்ற கார் டிரைவர் போலீசில் சரண் அடைந்தார். அதற்காக கொலை செய்தார் என்பது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
பெங்களூர் எடியூர் பகுதியைச் சேர்ந்த 35 வயதாகம் கிரீஷ் என்ற ரியான் கான், பெங்களூர் நகரில் கார் ஓட்டி வேலை செய்து வருகிறார். பெங்களூர் மாநகரம் ஜெயநகரில் உள்ள மசாஜ் சென்டரில் மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த 42 வயதாகும் பரிதா கானம் வேலை செய்து வந்தார். இந்நிலையில் டிரைவர் கிரீஷ்க்கும், மசாஜ் சென்டர் பணியாளரான பரிதா கானுக்கும் கடந்த 2022-ம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.

பரிதா கானத்திற்கு திருமணமாகி 2 பிள்ளைகள் இருக்கிறார்கள். முதல் மகள் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். பரிதா கானம் தனது கணவரை விவாகரத்து செய்துவிட்ட பிரிந்து வாழ்ந்து வந்தார். இதனிடையே அவரது கணவர் இறந்து விட்ட நிலையில், கொல்கத்தாவில் இருந்து பெங்களூர் நகருக்கு வந்து தனது பிள்ளைகளுடன் குடிபெயர்ந்து வசித்து வந்தார். மசாஜ் சென்டரில் வேலை கிடைத்ததை வைத்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார் பரிதா கானம் .
இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு மசாஜ் சென்டருக்கு சென்றபோது, பரிதா கானத்துடன் கிரீசுக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் காதலாக மாறியிருக்கிறது. பரிதா கானத்தை திருமணம் செய்ய கிரீஷ் முடிவு செய்துள்ளார். நேற்று முன்தினம் இரவு ஜெயநகரில் உள்ள ஷாலினி பூங்காவில் வைத்து கிரீஷ் மற்றும் பரிதா கானம் பேசியிருக்கிறார்கள். அப்போது மசாஜ் சென்டர் வேலையை விட்டுவிட்டு தன்னை கல்யாணம் செய்து கொள்ளும்படி கிரீஷ் கூறினாராம். இதற்கு பரிதா கானம் மறுத்துவிட்டாராம்..
இதுதொடர்பாக 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறதாம். அப்போது திடீரென்று ஆத்திரமடைந்த கிரீஷ் தன்னிடம் இருந்த கத்தியால் பரிதா கானத்தை சரமாரியாக குத்தி உள்ளார். இதில் பூங்காவிலேயே பரிதா கானம் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். ஆத்திரத்தில் கொலை செய்த கிரீஷ் என்ற ரியாஸ் கான், நடந்த சம்பவங்களை கூறி ஜெயநகர் போலீசில் சரண் அடைந்தார்.
உடனே ஷாலினி பூங்காவுக்கு ஜெயநகர் போலீசார் விரைந்து வந்து பார்த்தனர். அங்கு பிணமாக கிடந்த பரிதா கானத்தின் உடலை கைப்பற்றி பிரே பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சரண் அடைந்த கிரீசிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சில தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதன்படி பெங்களூர் எடியூரில் வசித்து வரும் 35 வயதாகும் கிரீசுக்கு இன்னமும் கல்யாணம் ஆகவில்லை.. இந்து மதத்தை சேர்ந்த அவர் கடந்த 2011-ம் ஆண்டு முஸ்லிம் மதத்திற்கு மாறி இருந்தார். தனது பெயரையும் ரியான் கான் என்று மாற்றி உள்ளார். கிரீசுக்கும், அவரது தங்கைக்கும் திருமணத்துக்கு வரன் கிடைக்காமல் தள்ளி போனதாம். இதனால் மீண்டும் இந்து மதத்திற்கு கிரீஷ் மாறி உள்ளார்.
இதற்கிடையில், கடந்த 2022-ம் ஆண்டு கிரீசுக்கு பரிதா கானத்துடன் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறி இருக்கிறது. அவரை திருமணம் செய்து வாழலாம் என்று கிரீஷ் முடிவு செய்திருக்கிறார். மேலும் பரிதா கானம் மசாஜ் சென்டரில் வேலை பார்ப்பது அவருக்கு பிடிக்கவில்லை. இதனிடையே கடந்த மாதம் பெங்களூர் நகரில் இருந்து பரிதா கானம் கொல்கத்தாவுக்கு சென்றுள்ளார்.
அங்கேயே தங்கி இருந்த அவர், கடந்த மாதம் 28-ந் தேதி கிரீசுக்கு பிறந்தநாள் என்பதால், பெங்களூர் வந்துள்ளார். பின்னர் ஜே.பி.நகரில் உள்ள ஓட்டலில் அறை எடுத்து 2 பேரும் தங்கி சந்தோஷமாக இருந்தனராம். இதனிடையே நேற்று முன்தினம் ஓட்டல் அறையில் வைத்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கிரீஷ் கேட்டாராம். ஆனால் தனக்கு 2 பிள்ளைகள் இருப்பதால் பரிதா கானம் திருமணத்துக்கு மறுத்துள்ளார். இதனால், ஓட்டலில் இருந்து கிரீஷ் வெளியே புறப்பட்டு சென்றுவிட்டார்.
பின்னர் மாலையில் ஓட்டலுக்கு வந்த அவர், பரிதா கானத்தை ஜெயநகரில் உள்ள ஷாலினி பூங்காவுக்கு அழைத்து சென்று பேசியிருக்கிறார். இரவு 7 மணிக்கு மேல் ஆனதால் பூங்காவில் 2 பேர் மட்டுமே இருந்துள்ளார்கள். அப்போது திருமணத்திற்கு
பரிதா கானம் மறுத்ததால், கிரீஷ் பரிதாவின் கழுத்தை அறுத்ததுடன், அவரை 25 முறை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்தாராம். இந்த தகவலை போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications