இந்திய செயற்கை கோளை ஏவ எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ்சை நாடும் இஸ்ரோ.. என்னாச்சு! பின்னணி இதுதான்
பெங்களூர்: இஸ்ரோவின் தொலைத்தொடர்பு செயற்கை கோளான GSAT-N2 வரும் செவ்வாய்க்கிழமை எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன பால்கான் ராக்கெட் மூலமாக விண்ணில் ஏவப்பட உள்ளது. இஸ்ரோ தனது செயற்கைக் கோளை எலான் மாஸ்க் நிறுவனத்தின் உதவியுடன் ஏவுவது ஏன் என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
விண்வெளி ஆய்வில் வல்லரசு நாடுகளுக்கு இணையாக இந்தியாவின் இஸ்ரோ செயல்பட்டு வருகிறது. விண்வெளித்துறையில் பல சாதனைகளை செய்து வரும் இஸ்ரோ, நமது நாட்டிற்கு தேவையான தொலைத்தொடர்பு செயற்கை கோள் உள்ளிட்டவற்றையும் விண்ணில் ஏவி வருகிறது. சர்வதேச அளவில் இஸ்ரோவின் மீதான நம்பகத்தன்மை அதிகரித்து இருப்பதால் பல உலக நாடுகளும் தங்கள் நாட்டு செயற்கை கோள்களை, இஸ்ரோ மூலமாக விண்ணில் செலுத்து வருகிறது.

இந்த நிலையில்தான் இந்தியாவின் தொலைத்தொடர்பு செயற்கை கோளான ஜி சாட் 20 செயற்கை கோளை விண்ணில் ஏவ எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் உதவியை இஸ்ரோ நாடியுள்ளது. வரும் 19 ஆம் தேதி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பல்கான் 9 ராக்கெட் மூலமாக புளோரிடவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து இந்தியாவின் ஜி சாட் 20 செயற்கை கோள் விண்ணில் ஏவப்படுகிறது. நாட்டின் தொலைத்தொடர்பு உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் விதமாக இந்த செயற்கைக்கோள் ஏவப்பட உள்ளது. இந்த செயற்கை கோளின் ஆயுள் காலம் 14 ஆண்டுகள் ஆகும்.
இந்த செயற்கை கோள் ஏவுவதற்கு ஏன் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உதவியை இந்தியா நாடியது என்ற கேள்வி எழலாம். அதற்கு காரணம் என்னவென்றால், இஸ்ரோவின் GSAT-N2- செயற்கை கோல் 4,700 கிலோ எடை கொண்டது ஆகும். இஸ்ரோ வசம் உள்ள ராக்கெட்டுகள் முலம் 4 ஆயிரம் கிலோ எடையிலான ராக்கெட்டுகளை விண்ணில் ஏவ முடியும். இது எடை அதிகம் என்பதால் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலமாக இந்தியா தனது ராக்கெட்டை ஏவ உள்ளது.
எனவே 4,700 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோளை இந்திய ராக்கெட்டுகள் கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது. இதற்கு காரணம் அதன் பிரமாண்ட எடை தான். இது வரை எடை அதிகமான செயற்கை கோள்களுக்கு இஸ்ரோ ஐரோப்பிய விண்வெளியை நம்பியிருந்தது. முதல் முறையாக தற்போதுதான் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் வணிக ரீதியிலான ஒப்பந்தத்தை மேற்கோண்டுள்ளது.
புவிசார் அரசியல் பதற்றம் மற்றும் சர்வதேச அரசியல் சூழல் ஆகியவற்றால் ரஷ்யா மற்றும் சீனாவுக்கு பதிலாக எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தை இஸ்ரோ நாடியுள்ளதாக சர்வதேச நோக்கர்கள் கூறுகிறார்கள். இஸ்ரோவின் GSAT-N2 செயற்கை கோளில் 32 பயனர் கற்றைகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த செயற்கைக் கோள் பயன்பட தொடங்கியதும் நாடு முழுவதும் இணைய தொலைதொடர்பில் முக்கிய பங்காற்றும்.
ரிமோட் பகுதிகள் மற்றும் விமான இணைய சேவைக்கு இந்த செயற்கைக் கோள் பயன்பாடு மிக முக்கியமானதாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த செயற்கைக் கோள் வரும் 19 ஆம் தேதி 1.31 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இந்திய நேரப்படி வரும் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12.01 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications