"மதுர" விஜய்க்கு ஜோடியாக நடித்த சாணக்கியா பாட்டு புகழ் நடிகையா இது? மிரண்டுபோன ரசிகர்கள்.. வீடியோ!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: விஜய் நடிப்பில் வெளியான மதுர படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த ரக்‌ஷிதாவின் தற்போதைய வீடியோ ஒன்று வெளியாகி சோசியல் மீடியாவையே அதிர வைத்துள்ளது. சாணக்கியா சாணக்கியா பாடலுக்கு நடனமாடிய நாயகியா இவர் என்று ரக்‌ஷிதாவின் தற்போதைய வீடியோவை பகிர்ந்து அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

வழக்கமாக சினிமா துறையில் இருக்கு நாயகர்கள், நாயகிகள் எப்போதும் ஃபிட்னஸில் தீவிர கவனம் செலுத்துவார்கள். ஆனால் சினிமாவை விட்டு விலகினால் டயட், சாப்பாடு கட்டுப்பாடு, உடற்பயிற்சி உள்ளிட்டவை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவிடும். இதனால் வழக்கத்திற்கும் அதிகமாக உடல் எடை கூடி ரசிகர்களின் கிண்டலுக்கு ஆளாகிவிடுவார்கள்.

Vijay Madura film Rakshitha

நடிகர் நஸ்ரியா கூட திருமணத்திற்கு பின் படங்களில் நடிக்காமல் இருந்த போது எடை அதிகரித்து காணப்பட்டார். ஆனாலும் சினிமாவுக்கு கம்பேக் கொடுத்த பின் மீண்டும் ஃபிட்னஸை பராமரித்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் விஜய் உடன் நடித்த நாயகி ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி இருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாயகியாக இருந்த போது கொண்டிருந்த தோற்றத்திற்கும், தற்போதைய தோற்றத்திற்கும் ஒரு சதவிகிதம் கூட சம்பந்தம் இல்லாமல் இருப்பதாக ரசிகர்கள் கூறி அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். நடிகர் சிம்புவுடன் தம் படத்தில் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை ரக்‌ஷிதா. இதன்பின் நடிகர் விஜய் உடன் மதுர படத்தில் ரக்‌ஷிதா நடித்திருந்தார்.

அந்த படத்தில் இடம்பெற்ற ஐஸ் கட்டி ஐஸ் கட்டி, இலந்த பழம் போன்ற பாடல்களில் ரக்‌ஷிதாவின் கவர்ச்சி மற்றும் நடனம் இன்றளவும் விஜய் ரசிகர்களால் கவனிக்கப்படும். அதேபோல் தம் படத்தில் சாணக்கியா பாடலில் ரக்‌ஷிதாவுக்காக ரசிகர்கள் பலரும் பார்ப்பார்கள். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னட படங்களிலும் அதிகப் படங்களில் நடித்துள்ளார்.

இவரின் தாய் மம்தா ராவ் பிரபலமான நடிகை என்பதால், ரக்‌ஷிதாவுக்கு எளிதாக சினிமா வாய்ப்புகள் கிடைத்தது. இருந்தாலும் ஒரு கட்டத்தில் சினிமா வாய்ப்புகள் குறைய, அரசியலிலும் களமிறங்கினார். இதனிடையே இயக்குநர் பிரேம் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது ஒரு மகன் உள்ளார்.

இந்த நிலையில் ரக்‌ஷிதா உடல் எடை அதிகரித்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி இருக்கிறார். விருந்து நிகழ்ச்சி ஒன்றில் மஞ்சள் புடவை அணிந்து சாப்பிடும் ரக்‌ஷிதாவையும், சாணக்கியா பாடலில் ஆடிய ரக்‌ஷிதாவையும் இணைத்து, இவரா அவர்? என்ற ரசிகர்கள் சந்தேகத்துடன் அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அதேபோல் ரக்‌ஷிதாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கும் சென்று ரசிகர்கள் ரக்‌ஷிதா தானா என்று உறுதி செய்து சோகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதேபோல் 42 வயதாகும் ரக்‌ஷிதா உடல் எடை அதிகரிப்பதில் எந்த தவறும் இல்லை என்றும் சில ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+