பெங்களூரில் கணவனை தோழிகளுடன் உல்லாசமாக இருக்க வற்புறுத்திய பெண் ஐடி ஊழியர்.. பெரிய ட்விஸ்ட்
பெங்களூர்: பெங்களூருவில் ஆண் ஐடி ஊழியர்கள் மட்டுமல்ல சில பெண் ஐடி ஊழியர்கள் கூட தினமும் மது அருந்துகிறார்கள். வாழ்வியல் முறையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக பலர் குடிப்பழக்கத்தில் இருக்கிறார்கள். இந்நிலையில் தினமும் மதுகுடித்துவிட்டு வந்து தொல்லை கொடுப்பதோடு, அந்த வீடியோக்களை காண்பித்து அதுபோலவே தனது தோழிகளுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று பெண் என்ஜினியர் ஒருவர் தனது கணவனை வற்புறுத்துவதாகவும் கூறப்படுகிறது. போலீசிடம் இளைஞர் நீதி கேட்டு முறையிட்டிருக்கிறார்.
இந்தியாவின் சிலிக்கான் வேலி என்று போற்றப்படும் பெங்களூர். கர்நாடகா மாநிலத்தின் தலைநகரம் ஆகும். அதேநேரம் இது பன்மொழி, பல கலாச்சாரம் கொண்ட மிகப்பெரிய இந்திய நகரங்களில் ஒன்றாக உள்ளது. இங்கு பல்வேறு வகையான மக்கள், பல மொழி பேசும் மக்கள் வசிக்கும் நகரம் என்பதால் விதவிதமான கலாச்சாரங்கள், பழக்க வழங்ககளை சர்வ சாதாரணமாக பார்க்க முடியும். அதேநேரம் அங்கு ஆண், பெண் மது அருந்துவது என்பது சர்வ சாதாரணமான ஒன்றாக மாறிவிட்டது. மது அருந்துவதை தாண்டி சில சிக்கலான சம்பவங்களும், விநோதமான சம்பவங்களும் அவ்வப்போது நடக்கின்றன. அப்படியான ஒரு சம்பவம் பற்றி பார்ப்போம்.

பெண்ணுக்கு மது அருந்தும் பழக்கம்
பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வரும் ஒரு இளைஞருக்கும். பிரபல ஐடி நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்க்கும் ஒரு பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கல்யாணம் நடந்தது. திருமணமான சில காலங்கள் தம்பதி சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் தனது மனைவிக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. அதை தனியார் நிறுவன ஊழியர் அறிந்தார்.
கேளிக்கை விடுதி
வேலைக்கு செல்லும் அந்த பெண் தினமும் நண்பர்கள் மற்றும் தோழிகளுடன் சேர்ந்து பப் உள்ளிட்ட கேளிக்கை விடுதி போன்ற இடங்களுக்கு சென்று மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதனை அறிந்த அந்த தனியார் நிறுவன ஊழியர் தனது மனைவியிடம், மதுப்பழக்கம் குறித்து கேட்டு கண்டித்தாராம். அதற்கு அந்த பெண் மது அருந்துவது, நண்பர்களுடன் வெளியில் செல்வது சாதாரணமான ஒன்று என பதில் அளித்துள்ளார். மேலும் இதுபற்றி எல்லாம் கேட்கக்கூடாது என்று கண்டித்தாராம்.
இந்தியா முழுக்க பேசுபொருளான கோவை பஸ்.. கர்நாடகாவில் உண்மையில் என்ன நடந்தது.. போலீசார் வார்னிங்
நெருங்கிய தொடர்பு
மேலும் அந்த பெண் ஐடி ஊழியர் தனது கடந்த கால வாழ்க்கை குறித்தும் தன்னுடைய கணவரிடம் கூறி விளக்கி உள்ளார். தான் யார், யாருடன் எல்லாம் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தேன், தன்னுடைய உல்லாச வாழ்க்கை எப்படி இருந்தது என்பது குறித்தும் பகிர்ந்தாராம். இதனால் மனவேதனையும், ஆத்திரமும் அடைந்த அந்த தனியார் நிறுவன ஊழியர், தனது மனைவியுடன் தகராறு செய்தாராம். இதுகுறித்து அறிந்த பெண்ணின் பெற்றோர், அவர்கள் 2 பேருக்கும் சமரசம் செய்து வைத்துள்ளனர்.
கட்டாயப்படுத்திய மனைவி
இனி உன் மனைவி பொறுப்பாக நடந்து கொள்வார் என்று கூறி சமாதானம் செய்து வைத்துள்ளனர்.. பின்னர் சில மாதங்கள் சரியாக இருந்த அந்த பெண் மீண்டும் குடித்துவிட்டு, ஆண் நண்பர்களுடன் உல்லாசமாக இருந்தாராம், அதை தனது கணவரிடமும் கூறினாராம். நம்பும்படியாக இல்லை என்றாலும் அப்படித்தான் கணவர் குற்றம்சாட்டுகிறார். அத்துடன் தவறான படங்களை கணவருக்கு காண்பித்து, தனது தோழிகளுடன் கணவரை உல்லாசமாக இருக்க கட்டாயப்படுத்தி இருக்கிறார். அதற்கு மறுத்த கணவரை மீண்டும், மீண்டும் பாலியல் ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்தினாராம். இதை போலீசாருக்கு நம்ப முடியாத குற்றச்சாட்டாக இருந்தாலும் புகார் வந்திருக்கிறது.
மனைவியிடம் இருந்து தனியார் நிறுவன ஊழியர் பிரிந்து வாழ முடிவு செய்தார். ஆகையால் தனது மனைவியிடம், தான் வாங்கி கொடுத்த நகைகளை கேட்டாராம். ஆனால் நகைகளை அந்த பெண் கொடுக்க மறுத்துள்ளார். இதன்காரணமாக தனக்கு நீதிகேட்டு அந்த தனியார் நிறுவன ஊழியர் போலீசாரிடம் கூறியுள்ளார். அதன் புகாரின்பேரில் பெங்களூர் அம்ருதஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அவரின் மனைவியை நேரில் அழைத்து விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications