பெங்களூரு எச்.ஏ.எல். நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து
Subscribe to Oneindia Tamil
பெங்களூரு: மத்திய அரசின் விமான தயாரிப்பு நிறுவனமான பெங்களூருவில் உள்ள ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தில் (எச்.ஏ.எல்) இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இத்தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
பெங்களூரு எச்.எல்.ஏ. நிறுவனத்தில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் உடனடியாக வரவழைக்கப்பட்டனர்.

8 தீயணைப்பு வண்டிகளில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டனர். ஆனால் தீயை தண்ணீர் பீய்ச்சி அணைக்க முடியவில்லை.

இதனையடுத்து ரசாயன நுரையை பீய்ச்சி தீயை அணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளன. தொடர்ந்து தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications