சூப்பர்! தலித் மற்றும் பழங்குடி மக்களுக்கு 75 யூனிட் வரை இலவச மின்சாரம்! கர்நாடக முதல்வர் அறிவிப்பு
பெங்களூர்: ‛‛கிராமப்புற ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களுக்கு 75 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை ஒரு வாரத்தில் பிறப்பிக்கப்படும்'' என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறினார்.
கர்நாடகத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக பசவராஜ் பொம்மை செயல்பட்டு வருகிறார். மறைந்த முன்னாள் துணை பிரதமர் பாபுஜெகஜீவன்ராம் பிறந்த நாளையொட்டி அவரது பெயரில் விருது வழங்கும் விழா பெங்களூருவில் நடந்தது.
இந்த விழாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை பங்கேற்று விருதுகள் வழங்கினார். அதன்பின் அவர் பேசியதாவது:

வீடு கட்டும் மானியம் உயர்வு
கர்நாடகத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களுக்கு வீடு கட்ட மானியம் வழங்கப்பட்டு வருகிறது. ஒருவருக்கு வீட்டு மானியமாக ரூ.1.75 லட்சம் வழங்கப்படுகிறது. இந்த தொகை ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும். சுயதொழில் செய்யும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் பிரிவை சேர்ந்தவர்களுக்கு உதவி செய்ய வசதியாக ஒவ்வொரு தாலுகாவிலும் பாபுஜெகஜீவன்ராம் சுயதொழில் திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டம் ஒரு மாதத்தில் அமலுக்கு கொண்டு வரப்படும். புதிதாக தொழில் தொடங்கும் ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.

இலவச மின்சாரம்
குடீர திட்டத்தின் கீழ் கிராமப்புற ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களுக்கு 75 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை ஒரு வாரத்தில் பிறப்பிக்கப்படும். அரசு விடுதிகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

ரூ.20 லட்சமாக உயர்வு
பாபுஜெகஜீவன்ராம் என்பவர் விஸ்வாசம், நேர்மையின் சின்னமாக விளங்கினார். கிராமப்புறங்களில் நில உரிமை உள்ளவர்களுக்கு சமூக மரியாதை கிடைக்கிறது. ஆதிதிராவிடர், பழங்குடியின சமுதாயத்தினரின் நலனுக்காக நில சீர்திருத்த சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அமல்படுத்தப்படும் நில உரிமை திட்டத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு இதுவரை ரூ.15 லட்சம் மானியம் வழங்கப்பட்டு வந்தது. இந்த மானியத்தை ரூ.20 லட்சமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாடு வளர்ச்சி பெறும்
இதன்மூலம் அந்த சமூகத்தினருக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொருவருக்கும் கல்வி, வேலை, சமூக மரியாதை கிடைத்தால் மட்டுமே அனைவரும் முன்னுக்கு வர முடியும். அப்போது தான் நாடு முழுமையான வளர்ச்சி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications