பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஹிஜாபை அடுத்து ஹலால் இறைச்சிக்கு குறி... பெங்களூரு மாநகராட்சிக்கு கர்நாடக அரசு பரபர உத்தரவு

Google Oneindia Tamil News

பெங்களூரு: கர்நாடகாவில் ஹலால் இறைச்சியை இஸ்லாமிய வியாபாரிகள் விற்பனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து பஜ்ரங்தள் அமைப்பினர் மிரட்டல் விடுத்த நிலையில், கறிக்கடைகளில் கால்நடைகள் முறையாக வெட்டப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய அம்மாநில கால்நடைத் துறை பெங்களூரு அரசுக்கு உத்தரவிட்டு இருக்கிறது.

கர்நாடகாவில் ஹிஜாப் தடை தொடரும் என்ற கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து அம்மாநிலத்தில் ஹலால் இறைச்சி பிரச்சனையை இந்துத்துவ அமைப்புகள் குறிவைத்து உள்ளனர்.

கோயில் திருவிழாவில் இஸ்லாமிய வியாபாரிகள் கடை நடத்தக்கூடாது என இந்துத்துவ அமைப்புகள் மிரட்டல் விடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதான் தமிழ்நாடு! தேவாலய வளாகத்தில் தொழுத இஸ்லாமியர்கள்.. திண்டுக்கல் ஹிஜாப் மாநாட்டில் நெகிழ்ச்சிஇதுதான் தமிழ்நாடு! தேவாலய வளாகத்தில் தொழுத இஸ்லாமியர்கள்.. திண்டுக்கல் ஹிஜாப் மாநாட்டில் நெகிழ்ச்சி

 ஹலால் பிரச்சனையை கையில் எடுத்த பஜ்ரங்தள்

ஹலால் பிரச்சனையை கையில் எடுத்த பஜ்ரங்தள்

இந்த நிலையில், அடுத்ததாக ஹலால் பிரச்சனையை பஜ்ரங்தள் உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் கையில் எடுத்து இருக்கின்றன. அண்மையில் இஸ்லாமியர்கள் நடத்தி வரும் கடைகளில் ஹலால் இறைச்சிகளை வாங்க வேண்டாம் என பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்தவர்கள் நோட்டீஸ் விநியோகித்தனர்.

 பஜ்ரங்தள் நிர்வாகிகள் 5 பேர் கைது

பஜ்ரங்தள் நிர்வாகிகள் 5 பேர் கைது

பத்ராவதி பகுதியில் ஹலால் இறைச்சிக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபட்ட பஜ்ரங்தள் அமைப்பினர் அங்கு கறிக்கடை நடத்தி வந்த இஸ்லாமிய வியாபாரி ஒருவரிடம் கடுமையாக வாக்குவாதம் செய்தனர். அப்போது அவரை காவித்துண்டு அணிந்த பஜ்ரங்தள் அமைப்பினர் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

 விலங்குகள் நல ஆர்வலர்கள் முறையீடு

விலங்குகள் நல ஆர்வலர்கள் முறையீடு

ஷிவ்மோகா மாவட்டத்தில் உணவக உரிமையாளர் ஒருவருக்கு பஜ்ரங்தள் அமைப்பினர் பகிரங்க மிரட்டல் விடுத்ததாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் 5 பேரை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஹலால் இறைச்சிக்கு எதிர்ப்பு எழுந்து இருப்பது தொடர்பாக அரசு தீவிர ஆய்வு மேற்கொள்ளும் என கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்து உள்ளார்.

 கர்நாடக கால்நடைத்துறை உத்தரவு

கர்நாடக கால்நடைத்துறை உத்தரவு

பஜ்ரங்தள் அமைப்பினரின் போராட்டத்தை தொடர்ந்து விலங்குகள் வதை தடுப்பு அமைப்பின் அதிகாரிகளை சந்தித்த விலங்குகள் நல ஆர்வலர்கள், மாநிலம் முழுவதும் கறிக்கடைகளில் விலங்குகள் வதை சட்டத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டும் என மனு அளித்தனர். 2021 ஆம் ஆண்டு மத்திய அரசு பிறப்பித்த விதிகள் முறையாக பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என பெங்களூரு மாவட்ட அதிகாரிகளிடமும் அவர்கள் வலியுறுத்தினர்.

English summary
The Karnataka Animal Husbandry Department has ordered the Bangalore government to inspect whether cattle are being slaughtered with the PCA act after the Bajrang Dal organization threatened to sell halal meat to Islamic traders.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X