கொரோனா பீதி ஓய்வதற்குள்.. பெங்களூரில் பரவுகிறது பன்றிக்காய்ச்சல்.. 2000 பேரை பலிவாங்கிய கொடிய நோய்
Recommended Video
பெங்களூர்: ஜெர்மனியை சேர்ந்த நிறுவனம் SAP. இதன் கிளைகள், மும்பை, பெங்களூர் மற்றும் குர்கான் நகரங்களில் செயல்பட்டு வருகிறது. ஆனால், அதில்தான் ஒரு சிக்கல். பெங்களூர் அலுவலகத்தில் பணியாற்றும் இரு ஊழியர்களுக்கு கட்டுப்படுத்த முடியாத காய்ச்சல் திடீரென ஏற்பட்டது.
அவர்கள் சாதாரண காய்ச்சல் மாத்திரை எடுத்துக்கொண்டும் காய்ச்சல் விடுவதாக இல்லை. இதையடுத்து, அவர்கள், ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்து பார்க்கப்பட்டன.
அப்போதுதான், அவர்களுக்கு பன்றிக் காய்ச்சல் என்று பொதுவாக அழைக்கப்படக் கூடிய H1N1 வைரஸ் பாதிப்பு இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து தங்கள் ஆபீசுக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர்.

ஆபீஸ் மூடல்
இந்த வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு பரவக்கூடியது என்பதால், அலுவலக நிர்வாகம் அதிரச்சியடைந்தது. ஒருத்தரும் ஆபீசுக்கு வர வேண்டாம்ப்பா. வீட்டில் இருந்து ஒர்க் பிரம் ஹோம் பார்த்தாலே போதும் என கூறிவிட்டதாம். பிப்ரவரி 20 முதல் 28ம் தேதிவரை, ஊழியர்கள் ஆபீஸ் வர வேண்டாம் என அறிவுறுத்தியதோடு, ஆபீஸ் முழுக்க, சுத்தப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறதாம்.

அறிகுறி
பெங்களூர் மட்டுமல்ல, மும்பை மற்றும் குர்கான் நகரங்களில் உள்ள அலுவலகங்களிலும் சுத்தப்படுத்தும் பணி நடக்கிறது. அனைத்து ஊழியர்களும் வீட்டிலிருந்து பணியாற்ற கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். "உங்களில் யாராவது அல்லது உங்கள் குடும்பத்தினருக்கு சளி அறிகுறிகள் இருந்தால், காய்ச்சலுடன் இருமலும் இருந்தால் மருத்துவ ஆலோசனையைப் பெறவும்." என்று SAP அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது.

2000 பேர்
உலக சுகாதார அமைப்பின் (WHO) அறிக்கைப்படி, எச்1 என்1 அறிகுறிகளில் காய்ச்சல், சளி மற்றும் தொண்டை புண் ஆகியவை அடங்கும். பன்றிக்காய்ச்சல் என்பது எச்1என்1 வைரஸால் பரவும் நோயாகும், இது பொதுவாக குளிர்காலத்தில் இந்தியாவைத் தாக்கும். 2014-15 ஆம் ஆண்டில், 31000 க்கும் மேற்பட்டோர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்ப்டடனர். இந்தியாவில் அப்போது, 2000க்கும் மேற்பட்ட உயிர்களைப் பறித்த கொடிய வியாதி இது.

முன்னெச்சரிக்கை
சீனாவிலிருந்து உலகம் முழுக்க கொரோனா வைரஸ் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், பெங்களூரில் எச்1என்1 நோய் பரவியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக N95 வகை மாஸ்க் பயன்படுத்துவது பன்றிக்காய்ச்சல் வைரஸ் பரவுவதை தடுக்கும். வெயில் காலம் ஆரம்பித்ததும், அந்த நோய் தாக்கம் குறைந்துவிடும் அல்லது முற்றிலும் ஒழிந்துவிடும் என்பதால், மக்கள் அதுவரை முன்னெச்சரிக்கையாக இருக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications