ஹிஜாப் அணிய அனுமதி கேட்ட சிறுமிகள் விவரங்களை ட்விட்டரில் வெளியிட்ட பாஜக.. எதிர்ப்பால் டெலிட்!
பெங்களூர்: ஹிஜாப் விவகாரத்தில் காங்கிரஸை விமர்சிக்க மாணவிகளின் விபரங்களை வெளியிட்டு பாஜக சர்ச்சையில் சிக்கியுள்ளது.
கர்நாடகத்தில் ஹிஜாப், காவி ஷால் போராட்டம் இந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உடுப்பியில் துவங்கிய இந்த பிரச்சனை பிற மாவட்டங்களிலும் விஸ்வரூபம் எடுத்தது. சில கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. மேலும் பள்ளி, கல்லூரிகளில் சீருடையை கட்டாயமாக்க வேண்டும் என கர்நாடக அரசு உத்தரவிட்டது.
ஹிஜாப் தடையை எதிர்த்து உடுப்பி மாவட்ட கல்லூரிகளில் பயிலும் மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். கர்நாடக தலைமை நீதிபதி ரித்து ராஜ் அஸ்வதி, நீதிபதிகள் கிருஷ்ணா தீட்சித், ஜெஎம் காஸி அமர்வு வழக்கை விசாரித்து வருகிறது.

பள்ளி, கல்லூரிகள் திறப்பு
மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளை திறக்க வேண்டும். வழக்கு நிலுவையில் உள்ளதால் மதம் சார்ந்த ஆடைகளை மாணவ-மாணவிகள் அணிய கூடாது என இடைக்கால உத்தரவை நீதிபதிகள் பிறப்பித்திருந்தனர். அதனடிப்படையில் பிப்.,14 முதல் கர்நாடகத்தில் 10ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. இன்று பியூ, டிகிரி கல்லூரிகள் திறக்கப்பட்டன. பதற்றம் நிலவும் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் உடுப்பி, பெங்களூர், சிவமொக்கா, தும்கூர் உள்பட 9 மாவட்டங்களில் கல்லூரிகளை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பெயர், விபரத்துடன் பாஜக ட்வீட்
இந்நிலையில் ஹிஜாப் தடையை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள மாணவிகளின் விபரங்களை கர்நாடக பாஜக ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. இதுகுறித்து, ‛‛ஹிஜாப் விவகாரத்தில் உள்ள 5 மாணவிகள் அனைவரும் மைனர்கள் (18 வயது நிரம்பாதவர்கள்). அரசியலில் தங்களை நிலைநிறுத்தி கொள்ள இந்த மைனர் பெண்களை காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல் , பிரியங்கா பயன்படுத்துவதில் குற்ற உணர்வு இல்லையா? தேர்தலில் வெற்றி பெற எவ்வளவு கீழ்தரமான செயலில் இறங்குகிறார்கள்'' என பதிவிடப்பட்டது. இதில் மாணவிகளின் பெயர், முகவரி உள்ளிட்ட விபரங்கள் இடம்பெற்றிருந்தன.

சிவசேனா எம்பி எதிர்ப்பு
இதற்கு சிவசேனா எம்பி பிரியங்கா சதுர்வேதி உடனடியாக ட்வீ ட் பதிவு செய்தார். அதில், ‛‛இது உணர்வற்றது'' என குறிப்பிட்டு இருந்தார். மேலும் அந்த பதிவை போலீஸ், ட்விட்டர் நிறுவனம், எலக்ட்ரானிக், தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கு டேக் செய்திருந்தார். அத்துடன் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு கமிஷன் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். மேலும் இன்னொரு ட்வீ ட்டில், ‛‛18 வயது நிரம்பாதவர்களின் பெயர், விபரங்களை குறிப்பிடுவது கிரிமினல் குற்றமாகும். இதை ஏற்றுக்கொள்ள முடியாது'' என தெரிவித்திருந்தது.

‛டெலிட்’
18 வயது நிரம்பாதவர்களின் பெயர், விபரங்களை பொதுவெளியில் பகிரங்கமாக தெரிவிப்பது சட்டப்படி குற்றமாகும். இதனால் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து அந்த ட்வீ ட் உடனடியாக டெலிட் செய்யப்பட்டது. ஹிஜாப் விவகாரத்தில் பாஜகவின் இந்த செயல்பாடு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications