பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதவந்த‌ மாணவிகள்.. அனுமதிக்காத ஆசிரியர்கள் - மீண்டும் வெடிக்கும் சர்ச்சை!

By
Google Oneindia Tamil News

பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில், ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத வந்த மாணவிகளை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள். இந்த சம்பவம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

    ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதவந்த‌ மாணவிகள்.. அனுமதிக்காத ஆசிரியர்கள் - மீண்டும் வெடிக்கும் சர்ச்சை!

    கர்நாடக மாநிலம் உடுப்பி பியூ கல்லூரி முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்ததற்கு தடைவிதித்தது. ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வந்த மாணவிகளை ஆப்சென்ட் போட்டு அனுப்பியது கல்லூரி நிர்வாகம்.

     திமுகவில் முட்டி மோதும் 3 வி.ஐ.பி.க்கள்! யாருக்கு சிம்மாசனம்? பரபரக்கும் கோவை மேயர் ரேஸ்! திமுகவில் முட்டி மோதும் 3 வி.ஐ.பி.க்கள்! யாருக்கு சிம்மாசனம்? பரபரக்கும் கோவை மேயர் ரேஸ்!

    இந்நிலையில், ஹிஜாப் அணிந்து பரீட்சை எழுத வந்த மாணவிகளை, தேர்வு நடத்தும் அதிகாரிகள், தேர்வு எழுதவிடாமல் வெளியே நிற்க வைத்துள்ளார்கள். இதனால் மீண்டும் ஹிஜாப் விவகாரம் பூதாகரமாகி வருகிறது.

    தேர்வுக்கு அனுமதியில்லை

    தேர்வுக்கு அனுமதியில்லை

    இன்று காலை கர்நாடக மாநிலத்தில் இருக்கும் பிதார் நகரில், BRIMS கல்லூரியில் பி.எஸ்.சி நர்சிங் படிப்புக்கான தேர்வு நடைபெற்றது. மாணவர்களில், ஹிஜாப் அணிந்த முஸ்லிம் பெண்களும் தேர்வு எழுதவந்திருந்தனர். இந்நிலையில், ஹிஜாப் அணிந்து வந்ததால், மாணவிகளை தேர்வு எழுத அனுமதிக்கவில்லை அங்கிருந்த தேர்வு நடத்தும் அதிகாரிகள்.

    அனுமதி மறுப்பு

    அனுமதி மறுப்பு

    இதையடுத்து அந்தப் பெண்களின் உறவினர்கள் சிலர் ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போதும் ஹிஜாப் அணிந்திருந்த மாணவிகளை உள்ளே அனுமதிக்கவில்லை. அப்போது,அங்கிருந்த ஒருவர் இதை வீடியோ எடுக்க முயற்சி செய்தார். ஆனால், வீடியோ எடுக்க அனுமதிக்கவில்லை, ஆசிரியருக்குத் தெரியாமல் வீடியோ எடுத்தார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

    ஹிஜாப்

    ஹிஜாப்

    கர்நாடக மாநிலம் உடுப்பியில் ஹிஜாப் விவகாரம் நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டே போனது. அண்டை மாநிலங்கள் குரல் கொடுத்ததும், ஹிஜாப் விவகாரம் தேசிய பிரச்சனையானது. இப்போது சமூகநீதிக்காக குரல் கொடுக்கும் பிரபலங்கள் ஹிஜாப் விஷயத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதில் சில பெண்கள் ஹிஜாப் அணிந்து வர அனுமதி கேட்டு நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

    நீதிமன்றம்

    நீதிமன்றம்

    ஹிஜாப் வழக்கு தொடர்பாக நேற்று உத்தரவு ஒன்றைப் பிறப்பித்த கர்நாடக உயர் நீதிமன்றம், 'ஹிஜாப், காவித் துண்டு உள்ளிட்ட மத ரீதியான உடைகள் அணிய தடை விதிக்கப்படுகிறது. மாணவர்கள் சீருடை மட்டுமே அணிந்து வர வேண்டும். மாணவர்களின் கல்வியை பாதிக்கும் வகையில் போராட்டங்கள் நடத்தக் கூடாது. இவ்வழக்கு தொடர்பாக வரும் திங்கட்கிழமை விசாரணை நடத்தப்படும்' என்று தெரிவித்தது.

    பிரச்சனை வேண்டாம்

    பிரச்சனை வேண்டாம்

    இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்காக எடுத்துக்கொள்ள மனுதாக்கல் செய்யப்பட்டது. ஹிஜாப் விவகாரம் தொடர்பான மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதேவேளையில், ஹிஜாப் விவகாரத்தை தேசிய பிரச்சினையாக்க வேண்டாம் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

    English summary
    Exam officers stop Hijab- wearing students from entering the BSc nursing exam hall in BRIMS in Bidar, Karnataka
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X