வாய்க்காலில் அக்கிரமம்.. துடிதுடித்த 15 வயது பிஞ்சு.. கம்மல் வாங்கிதந்த அப்பா.. கடைசியில பார்த்தால்?
15 வயது மகளை வாய்க்கால் தண்ணீரில் மூழ்கடித்து கொன்றார் அப்பா
பெங்களூரு: "அப்பா.. அப்பா.." என்று கதறிக்கொண்டே மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்துவிட்டாள் அந்த 15 வயது சிறுமி.. என்ன நடந்தது?
கர்நாடக மாநிலத்தில் பல்லாரி மாவட்டத்தில் உள்ளது சித்தம்மனஹள்ளி என்ற கிராமம்.. இந்த கிராமத்தை சேர்ந்தவர் ஓம்கார கவுடா.. இவர் ஒரு தொழிலாளி.. 15 வயதில் இவருக்கு ஒரு மகள் இருக்கிறாள்.. அங்குள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தாள்.
இந்த மாணவிக்கு, நாகராஜ் என்ற இளைஞருடன் காதல் வந்துவிட்டது.. கோட்டூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ்.. பழங்குடியினத்தை சேர்ந்தவர்..

திடீர் லவ்
மாணவியும், நாகராஜும் பல்வேறு இடங்களில் சுற்றி திரிந்தனர்.. நெருக்கமாக பழகி வந்துள்ளனர்.. இவர்கள் காதல் விவகாரம் வீட்டுக்கு தெரியவந்துள்ளது.. நாகராஜ் பழங்குடியினத்தை சேர்ந்தவர் என்பதால், அவருடன் பழகக்கூடாது என்று ஓம்கார கவுடா மகளை கண்டித்துள்ளார்.. காதலை மறந்துவிடும்படியும் சொல்லி இருக்கிறார்... ஆனால் மாணவி நாகராஜுடன் பழகுவதை நிறுத்தவில்லை.. தொடர்ந்து காதலை வளர்த்து வந்துள்ளார்.. இதனால் ஆத்திரமடைந்த அப்பா, தன்னுடைய மகளை பலமுறை எச்சரித்தும் கேட்காததால், ஆணவக் கொலை செய்துவிட முடிவு செய்தார்... நாளையும் குறித்தார்.

ஷாப்பிங்
சம்பவத்தன்று மகளிடம் சென்று, சினிமாவுக்கு போகலாமா? என்று கூப்பிட்டுள்ளார்.. மகளும் சரி என்று சொல்ல, அப்போதே சினிமாவுக்கு மகளை அழைத்து சென்றுள்ளார்.. சினிமா முடிந்ததும், ஒரு ஹோட்டலுக்கு அழைத்து சென்றுள்ளார்.. என்னென்ன பிடிக்குமா, அத்தனையையும் மகளையே ஆர்டர் பண்ண சொல்லி சாப்பிட வைத்துள்ளார்.. பிறகு அங்கிருந்து நேராக, நகை கடைக்கு மகளை அழைத்து சென்றுள்ளார்.. மகளுக்கு பிடித்த தங்க கம்மல், மோதிரம் வாங்கி தந்துள்ளார்.. அதற்கு பிறகு சாயங்காலம், பசவேஸ்வரா கோயிலுக்கு அழைத்து சென்று, மகளை சாமி தரிசனம் செய்ய சொல்லி, ஸ்பெஷல் அர்ச்சனையும் செய்தார்.. அதற்குள் இருட்டிவிட்டது.

கால்வாய் தண்ணீர்
மகளை அழைத்து கொண்டு வீடு திரும்பியபோது, வழியில் உள்ள ஒரு கிராமத்தில், கால்வாய் ஓரம் பைக்கை நிறுத்தியுள்ளார்.. பிறகு, மகளை, தரவரவென்று இழுத்து சென்று, கால்வாய் தண்ணீரில் முகத்தை வைத்து அழுத்தி இருக்கிறார்... இதில் மூச்சு திணறி, அப்பா... அப்பா.. என்று மகள் கதறி உள்ளார்.. ஆனால், ஆவேசமாக, தண்ணீரில் வைத்து அழுத்தியபடியே இருந்ததால், கொஞ்ச நேரத்திலேயே மூச்சு திணறி மகள் பரிதாபமாக இறந்துவிட்டாள். சடலமும் கால்வாய் நீரிலேயே மிதந்து சென்றுவிட்டது.. மகளை கொன்று விட்டதும், தனது நண்பர் பீமப்பா என்பவரின் வீட்டுக்கு சென்று பைக்கை நிறுத்திவிட்டு, திருப்பதிக்கு தப்பி சென்றுவிட்டார் ஓங்கார கவுடா...

கண்ணீர் தண்ணீர்
ஆனால், தன் மீது சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக, முன்னதாக போலீசில் சென்று, மகளை காணவில்லை என்று புகார் ஒன்றையும் தந்துவிட்டார்.. எனினும், போலீஸ் விசாரணையில் எல்லா உண்மையும் வெளியே வந்துவிட்டது.. வேறு சாதி இளைஞரை காதலித்ததால் பெற்றோர்களே ஆணவ கொலை செய்திருப்பதும் உறுதியானது.. இதையடுத்து, கவுடாவை தேடிப்பிடித்து போலீசார் கைது செய்ததுடன், அவருக்கு உதவியதாக பீமப்பா என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இப்போது கால்வாயில் மாணவியின் சடலத்தை காணவில்லை என்பதால், போலீசார் தேடி கொண்டிருக்கிறார்கள்.

அட்ராசிட்டி
தமிழகத்தில்கூட சாதி ஆணவப்படுகொலைகள் எண்ணிக்கை அதிகரித்தபடியே வருகிறது.. கல்வி மட்டுமே அனைத்தையும் மாற்றும் என்ற நம்பிக்கை தழைத்தோங்கினாலும், சாதி கொடுமைகளும், சாதி படுகொலைகளும் குறைந்தபாடில்லை.. தமிழ்நாட்டில் சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்கும் வகையில் தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டும் என்ற குரல்களும் ஒலித்து கொண்டுதான் இருக்கின்றன.. ஆனால், அதற்கான பணிகளை மத்திய, மாநில அரசுகள் எப்போதுமே தொடங்குமோ? என்ற எதிர்பார்ப்பு தினமும எழுந்து கொண்டே இருக்கிறது நம்மிடம்..!!
-
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications