கர்நாடகா.. பாஜக, காங்கிரஸ், ஜேடிஎஸ்க்கு எந்தெந்த சாதியினர் அதிகம் வாக்களித்தனர் தெரியுமா? சர்வே முடிவு
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தல் சாதி, சமுதாயத்தின் அடிப்படையில் மக்கள் எந்தெந்த கட்சிக்கு ஓட்டளித்தனர் என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. இந்தியா டுடே -ஆக்சிஸ் சார்பில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் காங்கிரஸ், பாஜக, ஜேடிஎஸ் கட்சிக்கு எந்தெந்த சாதி, சமுதாயத்தினர் அதிகமாக வாக்களித்து உள்ளனர் என்பது பற்றிய முழுவிபரம் வெளியாகி உள்ளது.
கர்நாடகா சட்டசபை தேர்தல் கடந்த 10ம் தேதி நடந்து முடிந்தது. 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடந்தது. நாளை ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. நாளை மாலையில் கர்நாடகாவில் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என்பது உறுதியாகி விடும்.

கர்நாடகாவை பொறுத்தமட்டில் 113 தொகுதிகளில் வென்றால் மட்டுமே ஒரு கட்சியால் ஆட்சியை பிடிக்க முடியும். தேர்தலுக்கு பிந்தைய இந்தியா டுடே, சி வோட்டர் -ஆக்சிஸ் கருத்து கணிப்புகள் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும் என தெரிவித்துள்ளன. மாறாக பிற கருத்து கணிப்புகள் தொங்கு சட்டசபை அமையும் என தெரிவித்துள்ளன.
கர்நாடகாவை பொறுத்தமட்டில் பாஜக, காங்கிரஸ், ஜேடிஎஸ் ஆகிய 3 கட்சிகள் பிரதானமாக செயல்பட்டு வருகிறது. பிற கட்சிகள் இருந்தாலும் கூட இந்த 3 கட்சிகள் தான் மாறி மாறி முதல்வர் பதவியை அலங்கரிக்கின்றன. இந்நிலையில் தான் கர்நாடகாவில் உள்ள மக்கள் சாதிவாரியாக யாருக்கு அதிகம் ஓட்டு போட்டுள்ளனர் என்ற தகவலை ஒரு கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது.
அதாவது இந்தியாவை பொறுத்தமட்டில் சாதி அரசியல் எப்போதும் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக தேர்தல் சமயத்தல் பல தொகுதிகளில் அரசியல் கட்சியினர் சாதி பார்த்து தான் வேட்பாளர்களை நிறுத்துகின்றனர். இந்நிலையில் தான் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு ஒன்றை இந்தியா டுடே-ஆக்சிஸ் மை இந்தியா மேற்கொண்டு வெளியிட்டது.
இந்த கருத்து கணிப்பில் காங்கிரஸ் கட்சி 43 சதவீத ஓட்டுக்களை பெற்று 122 முதல் 140 தொகுதிகளில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாறாக பாஜக கடும் சறுக்கலை சந்திக்கும். பாஜக 62 முதல் 80 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் எனவும், ஜேடிஎஸ் கட்சி 25 தொகுதிகளில் மட்டுமே வெல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் தற்போது இந்த கருத்து கணிப்பின் இன்னொரு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது கட்சிகளுக்கு சாதிவாரியாக கிடைக்கும் ஓட்டுகளின் விபரங்கள் வெளியாகி உள்ளன. அதாவது கர்நாடகாவில் பெரும்பான்மை சமுதாயமாக உள்ள லிங்காயத் எப்போதும் பாஜகவின் வாக்கு வங்கியாக உள்ளது. இவர்கள் கடலோர கர்நாடகா மற்றும் பழைய மைசூர் பகுதிகளை தவிர்த்து மாநிலத்தின் பிற இடங்களில் பரவி வாழ்கின்றனர். குறிப்பாக மும்பை-கர்நாடகா மாவட்டங்களில் அதிகளவில் வசிக்கின்றனர்.
2018ம் ஆண்டில் நடந்த தேர்தலில் 3ல் 2 பங்கு லிங்காயத்துகள் பாஜகவுக்கு ஓட்டளித்தனர். அதாவது லிங்காயத்துகளில் 64 சதவீத ஓட்டுகள் பாஜகவுக்கு கிடைக்கும். மாறாக 20 சதவீத ஓட்டுக்கள் காங்கிரஸ் கட்சிக்கும், 10 சதவீத ஓட்டுகள்ஜேடிஎஸ் கட்சிக்கும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக குருபா, ஒக்கலிகர் சமுதாயத்தை தவிர்த்து ஓபிசி பிரிவில் உள்ள மாரத்தா உள்ளிட்ட சில சமுதாயத்தினர் பாஜகவுக்கு ஆதரவாக தான் உள்ளது. கர்நாடகாவில் மொத்தம் வாக்காளர்களில் 45 சதவீதம் பேர் பாஜகவுக்கு ஆதரவாகவும், 31 சதவீதம் பேர் காங்கிரஸ் பக்கமும், 15 சதவீதம் பேர் ஜேடிஎஸ்க்கு ஆதரவாகவும் உள்ளனர். கடந்த தேர்தலைபோல் இந்த முறையும் இந்த சமுதாயத்தினர் பாஜகவுக்கு தான் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதேபோல் ஒக்கலிகர் சமுதாயத்தினரை எடுத்து கொண்டால் ஜேடிஎஸ்க்கு 46 சதவீத ஓட்டும், பாஜகவுக்கு 25 சதவீத ஓட்டும், காங்கிரஸ் கட்சிக்கு 24 சதவீத ஓட்டும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஜேடிஎஸ் கட்சியின் தலைவர் குமாரசாமி, காங்கிரஸ் மாநில தலைவர் டிகே சிவக்குமார் ஒக்கலிகர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தான். இந்த சமுதாய மக்கள் பழைய மைசூர் பகுதிகளில் வாழ்ந்து வருகிறார்.
இதற்கு அடுத்தடியாக முஸ்லிம் ஓட்டுகளை பொறுத்தமட்டில் காங்கிரஸ் கட்சிக்கு 88 சதவீதமும், ஜேடிஎஸ் கட்சிக்கு 8 சதவீதமும், பாஜகவுக்கு வெறும் 2 சதவீதமும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சி்யின் முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா சார்ந்த குருபா சமுதாயத்தினரில் 63 சதவீதம் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கு 22 சதவீதமும், 10 சதவீதம் ஜேடிஎஸ் கட்சிக்கம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு ஆதிதிராவிடர் பிரிவை பொறுத்தமட்டில் 60 சதவீத மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான நிலைப்பாட்டிலும், பாஜகவுக்கு ஆதரவாக 22 சதவீதம் பேரும், 14 சதவீதம் பேர் ஜேடிஎஸ் கட்சிக்கு ஆதரவாகவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பழங்குடியின பிரிவு மக்கமிலக 44 சதவீதம் பேர் காங்கிரஸ் கட்சிக்கும், 33 சதவீதம் பேர் பாஜகவுக்கு ஆதரவாகவும், 14 சதவீதம் பேர் ஜேடிஎஸ் கட்சிக்கு ஆதரவாகவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications