ஆமா.. பெங்களூர் தண்ணீர் பஞ்சம் செயற்கையாக ஏற்படுத்தப்படுவதா சொல்றாங்களே உண்மையா?
பெங்களூர்: கர்நாடக தலைநகர் பெங்களூர் மிக மோசமான தண்ணீர் பஞ்சத்தை சந்தித்துள்ளது. வீடுகளுக்குக் கூட தண்ணீர் கிடைக்காத சூழல் ஏற்பட்டதால் பலரும் கனவு நகரமான பெங்களூரை காலி செய்து விட்டு தற்காலிகமாக சொந்த ஊருக்கு சென்று விடலாமா என்று யோசித்து கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில், கர்நாடக மாநில அணைகளில் தற்போது நீர் இருப்பு எவ்வளவு உள்ளது. இந்த தண்ணீர் பஞ்சம் இயற்கையானதா? அல்லது செயற்கையாக தண்ணீர் பஞ்சம் உருவாகியுள்ளதா என்று பார்க்கலாம்.
தென்மேற்குப் பருவமழை பொய்த்துப்போனதால் கர்நாடகா கடுமையான வறட்சியை சந்தித்து உள்ளதாக அம்மாநில ஆட்சியாளர்கள் கூறி வருகின்றனர். தமிழ்நாட்டு பங்காக காவிரி நீரை திறந்து விட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்ட போது கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், கர்நாடகத்தில் கடும் வறட்சி பஞ்சம் நிலவுவதால், தமிழகத்திற்கு நீர் திறக்க இயலாது என்று உறுதியாக கூறினார். கடந்த 6 மாத காலத்தில் கர்நாடகாவில் பெருமழை எதுவும் பெய்யவில்லை. இதன் காரணமாக நீர் இருப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.

கர்நாடக அணையின் நீர்மட்டம் இன்று 8 மார்ச் 2024 நிலவரப்படி ( ஆதாரம் கர்நாடக மாநில நீர்வளத்துறை) https://waterresources.karnataka.gov.in/
கிருஷ்ணராஜ சாகர்: கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் அமைந்துள்ள கிருஷ்ண ராஜ சாகர் அணை, மாநிலத்தின் மிக முக்கியமான நீர்த்தேக்கங்களில் ஒன்று. முழு கொள்ளளவு 124.8 அடி. தண்ணீரைத் தேக்கி வைக்கும் திறன் 49.48 ஆயிரம் மில்லியன் கன அடி (டிஎம்சி) ஆகும். தற்போது நீர் இருப்பு 89.55 அடி மட்டுமே உள்ளது. அதாவது 15672 M.Cft மட்டுமே தற்போது நீர் இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் 104.03 அடி 26372 M.Cft நீர் இருப்பு இருந்துள்ளது. தற்போது விநாடிக்கு 746 கனஅடி வெளியேற்றப்பட்டு வருகிறது.
கபிணி அணை: கேரளாவின் வயநாடு மற்றும் மைசூர், கர்நாடகாவின் அழகிய வனாந்தரத்தில் அமைந்துள்ளது கபினி அணை. 19.52 டிஎம்சி கொள்ளளவு கொண்ட இந்த அணையின் முழு கொள்ளளவு 65 அடியாகும். தற்போது 50.2 அடி தண்ணீர் உள்ளது. 11295 M.Cft நீர் இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் 46.26 அடி நீர் இருந்துள்ளது. அதாவது 9484 M.Cft தண்ணீர் இருப்பு இருந்துள்ளது. விநாடிக்கு 700 கனஅடி தண்ணீர் தற்போது வெளியேற்றப்படுகிறது.
ஹாரங்கி அணை: குடகு மாவட்டத்தில் ஹாரங்கி ஆற்றின் மீது அமைந்துள்ள 129 அடி கொண்ட ஹாரங்கி அணை 8.5 டிஎம்சி கொள்ளளவு கொண்டது. விவசாயம் முதல் குடிநீர் விநியோகம் வரை இங்கிருந்து சப்ளை செய்யப்படுகிறது. இந்த அணையில் தற்போது நீர் இருப்பு 100.39 அடி 3359 M.Cft நீர் இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் 97.85 அடி 3229 நீர் இருப்பு இருந்தது.
விநாடிக்கு 200 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
ஹேமாவதி அணை: ஹாசன் மாவட்டத்தில் அமைந்துள்ள ஹேமாவதி நீர்த்தேக்கம் 117 அடி கொண்டது. 37.10 டிஎம்சி கொள்ளளவு கொண்ட முக்கியமான நீர் சேமிப்பு வசதியாகும். தற்போது இந்த அணையில் 83.44 அடி நீர் இருப்பு உள்ளது. 13173 M.Cft மட்டுமே தற்போது உள்ளது. கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் 97 அடி 21015 நீர் இருப்பு இருந்துள்ளது. தற்போது 375 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
தண்ணீர் பஞ்சம்: காவிரியிலிருந்து பெங்களூர் 24 டிஎம்சி தண்ணீரை பயன்படுத்தும் என்று கர்நாடக அரசு கடந்த ஆண்டு அறிவித்திருந்தது. மேலே குறிப்பிட்ட, காவிரி அணைக் கட்டுகளில் தண்ணீர் இன்னும் உள்ளதே. இருப்பினும் ஏன் பெங்களூர் தவிக்கிறது என்ற கேள்வியை மக்கள் எழுப்புகிறார்கள்.
கடந்த ஆண்டு பருவமழை பொய்த்துப்போனதால் தற்போது பெங்களூருவில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் தண்ணீர் கேன்களுடன் வரிசையில் காத்திருக்கின்றனர். பலகோடி ரூபாய் கொடுத்து வீடு வாங்கியவர்கள் கூட தண்ணீர் கிடைக்காமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
டாக்டர் தீபக் கிருஷ்ணமூர்த்தி, என்பவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பெங்களூருவில் வீடு வாங்குபவர்கள் பில்டர்/பிபிஎம்பியுடன் தண்ணீர் ஒப்பந்தம் செய்ய வலியுறுத்த வேண்டும். எந்த நேரத்திலும், அடுத்த 99 ஆண்டுகளுக்கு பில்டர்/பிபிஎம்பி தண்ணீர் வழங்க வேண்டும். இல்லையெனில், கோடிக் கணக்கில் கொட்டிக் கொடுத்து, வீடுகளை வாங்குவதில் அர்த்தமில்லை. ஏற்கனவே வீடுகள் உள்ளவர்களுக்கு அரசு போதுமான தண்ணீர் வழங்க முடியாவிட்டால் சொத்து வரி செலுத்துவதை நிறுத்த வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
கோடையில் மோசமாகும்: மார்ச் மாதத்தின் துவக்கத்திலேயே தண்ணீருக்காக பெங்களூர்வாசிகள் தடுமாறி வருகின்றனர். தென்மேற்குப் பருவமழை காலம் மே இறுதியில்தான் தொடங்கும். அதுவரை அணைகளில் இருக்கும் தண்ணீரை வைத்து எந்த அளவிற்கு சமாளிக்க முடியும் என்று எதிர்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றனர். வருணபகவான் மனது வைத்து கோடை மழை பெய்தால் மட்டுமே தண்ணீர் பிரச்சினையை சமாளிக்க முடியும் என்பது பெங்களூர்வாசிகளின் வேண்டுதலாக உள்ளது.
மக்களின் மனநிலை: பெங்களூர் நகரம் பலரது கனவு நகரமாகும். ஐடி துறையில் வேலை செய்யும் பலரும் பெங்களூர் சென்று வேலை செய்ய விரும்புவார்கள். சொந்த வீடு வாங்கி செட்டிலானவர்கள் பலர் உள்ளனர். தற்போது ஏற்பட்டுள்ள தண்ணீர் பஞ்சம் சொந்த ஊருக்கே சென்று விடலாமா என்று பலரையும் யோசிக்க வைத்திருக்கிறது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications