கர்நாடகாவில் பகீர்! ஜெயின் துறவியை கொன்று.. துண்டு துண்டாக வெட்டி ஆழ்துளை கிணற்றில் வீசிய கொடூரம்
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் ஜெயின் துறவி ஒருவர் நள்ளிரவில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட ஷாக் சம்பவம் அரங்கேறியுள்ளது. இது தொடர்பாக இரண்டு பேரை அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்காம் மாவட்டம் ஹிரேகோடி கிராமத்தில் நந்திபர்வத மடம் என்ற மடம் ஒன்று இருக்கிறது. அது ஜெயின் மதத்திற்குச் சொந்தமான ஆசிரமம் ஆகும். சுற்றியுள்ள ஜெயின் மக்கள் பலரும் இங்கே வருவார்கள்.
இந்த மடத்தில் ஜெயின் துறவியாக ஆச்சார்யா ஸ்ரீ 108-வதுகாமகுமார நந்தி மகாராஜா என்பவர் இருந்து வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென மாயமானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், திடீர் திருப்பம் அரங்கேறியுள்ளது..

ஜெயின் துறவி: அங்கே உள்ளூரில் ஜெயின் மதத்தினர் மத்தியில் ரொம்பவே புகழ்பெற்ற துறவிகளில் ஒருவராக இருந்தவர் ஆச்சார்யா காமகுமார் நந்தி மகாராஜ். இவர் கடந்த 15 ஆண்டுகளாகவே அதே இடத்தில் தான் இருந்து வந்துள்ளார். கடந்த வியாழக்கிழமை வழக்கம் போல மடத்தில் தனது பணிகளைச் செய்து வந்துள்ளார். அன்றைய தினம் இரவு வழக்கம் போல அவர் தனது அறைக்கு திரும்பியுள்ளார்.
இருப்பினும், மறுநாள் அவரை தனது அறையில் இருந்து வெளியே வரவில்லை. திடீரென அவர் மாயமாகியிருந்தார். இதனை அங்கு வந்த அவரது பக்தர்கள் கவனித்துள்ளனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை தேடியுள்ளனர். அங்கே எங்குத் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாத நிலையில், இது தொடர்பாக அவர்கள் சிக்கோடி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். அதன்படி வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை ஆரம்பித்தனர்.
துண்டு துண்டாக வெட்டி: இதற்கிடையே மாயமான அந்த ஜெயின் துறவி ஆச்சார்யா காமகுமார் நந்தி மஹராஜின் உடல் நேற்று சனிக்கிழமை மாலை பெல்காம் மாவட்டத்தில் உள்ள கடக்பாவியில் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். மேலும், அவரது உடலை வெட்டி அங்கிருந்த 400 அடி ஆழ்துளைக் கிணற்றிலும் வீசியுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து 2 பேரை போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் அங்குள்ள கடக்பாவி கிராமத்தைச் சேர்ந்த ஹசன் தலயத் மற்றும் நாராயண் மாலி என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இருவரும் சேர்ந்து துறவியைக் கொன்று, அவரது உடலைத் துண்டு துண்டாக வெட்டி ஆழ்துளைக் கிணற்றில் வீசியதை ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். அந்த துறவியிடம் இருந்து இருவரும் கடன் வாங்கியுள்ளனர். கொடுத்த கடனை அந்த துறவி திரும்பக் கேட்ட நிலையில், அப்போது ஏற்பட்ட மோதலில் இருவரும் இணைந்து இந்த கொடூர கொலையைச் செய்துள்ளனர்.

என்ன நடந்தது: வழக்கு விசாரணையின் போது கடக்பாவி கிராமத்திற்கு நேரடியாகச் சென்ற போலீசார், இரவு முழுவதும் அங்குச் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது காவல் கண்காணிப்பாளர் சஞ்சீவ் பாட்டீல் மற்றும் தடயவியல் அதிகாரிகள் உடனிருந்தனர். அந்த ஜெயின் துறவி மாயமானதற்கு முந்தைய நாளில் ஆசிரமத்திற்குச் சென்ற அனைத்து பொதுமக்களின் தகவல்களையும் அதிகாரிகள் சேகரித்து விசாரணை நடத்தினர். அப்போது தான் இந்த இருவர் மீது அதிகாரிகளுக்குச் சந்தேகம் வந்துள்ளது.
இதையடுத்து இருவரையும் சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து போலீசார் விசாரித்துள்ளனர். போலீசார் கேட்ட கேள்விகளுக்கு முன்னுக்குப் பின் முரணாகப் பதில் சொன்னதால் சந்தேகம் அதிகரித்துள்ளது. போலீசார் தங்கள் விசாரணையைத் தீவிரப்படுத்திய நிலையில், துறவியைக் கொலை செய்ததை அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications