“இவர்கள் தலையிட்டிருந்தால்.. மணிப்பூரில் அப்படி நடந்திருக்காது!”.. கொதித்து எழுந்த இரோம் ஷர்மிளா
பெங்களூர்: மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் இருவர் நிர்வாணமாக ஊர்வலம் அழைத்து செல்லப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இச்சம்பவம் குறித்து சமூக செயற்பாட்டாளர் இரோம் ஷர்மிளா கருத்து தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆதாயத்திற்காக மணிப்பூரில் பழங்குடி அல்லா மெய்டெய் சமூக மக்களுக்கு பழங்குடி அங்கீகாரம் வழங்கப்படும் என பாஜக அறிவித்திருந்தது. இதே வாக்குறுதியை வைத்து 53 சதவிகித மெய்டெய் மக்களின் வாக்குகளை பெற்று பாஜக தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டது. ஆனால் பழங்குடி சமூகத்தை சேர்ந்த குக்கி மக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இப்படியா இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது.

இந்த மோதலில் அரசின் அதிகாரப்பூர்வ கணக்குப்படி 160க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். பல பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அதேபொல 5,036 தீவைப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன, வன்முறைகள் தொடர்பாக 5,889 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 144 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாநிலத்தில் சுமார் 36,000 பாதுகாப்புப் படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர், 40 இந்திய காவல் சேவை (ஐபிஎஸ்) அதிகாரிகள் மற்றும் 20 மருத்துவக் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். எனினும், இப்போது வரை மணிப்பூரில் அமைதி திரும்பவில்லை. 300-க்கும் மேற்பட்ட முகாம்களில் 60 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் தங்கியுள்ளனர். 350 தேவாலயங்களும், சுமார் 20 கோயில்களும் பிற வழிபாட்டுத்தலங்களும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில் கடந்த மே 4ம் தேதி குக்கி மற்றும் ஜோ பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் வன்முறையாளர்களால் நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். இது தொடர்பான வீடியோ நேற்று வெளியாகி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோவையடுத்து மணிப்பூரில் அமைதி திரும்ப மத்திய அரசும் பிரதமர் நரேந்திர மோடியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து சமூக செயற்பாட்டாளர் இரோம் ஷர்மிளா கருத்து தெரிவித்துள்ளார். "மணிப்பூரில் நடந்த சம்பவங்கள் குறித்து நான் மிகவும் வருந்துகிறேன். இந்த சம்பவங்கள் என்னை மிகவும் தொந்தரவு செய்கிறது. இது வெறும் குறிப்பிட்ட இரண்டு சமூகங்களை பற்றியது மட்டுமல்ல. மாறாக இது மனிதாபிமானம் சம்பந்தப்பட்டது. இச்சம்பவங்கள் மனிதாபிமானமற்றது. மத்திய அரசு தலையிட்டிருந்தால் இது நடந்திருக்காது. இந்த குற்ற செயலில் ஈடுபட்டவர்களுக்கு பரோல் இல்லாத ஆயுள் தண்டனை வழங்கப்பட வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட அத்துமீறல்களுக்கு எதிராக, ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தொடர்ச்சியாக 16 ஆண்டுகள் வரை இரோம் ஷர்மிளா உண்ணாவிரதம் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications