“சுட்டுக் கொல்வோம்”.. கர்நாடகாவில் இந்து பற்றி தவறாக பேசினால் “யோகி மாடல்” -பாஜக எம்எல்ஏ பரபர பேச்சு
பெங்களூரு: கர்நாடகாவில் இந்து மதம் பற்றியோ, இந்தியா பற்றியோ தவறாக பேசினால் சுட்டுக்கொல்வோம் என்று பாஜக எம்.எல்.ஏ. பசனகவுடா பேசி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விஜயபுரா பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு தெரிவித்து இருக்கிறார்.
கர்நாடகாவில் இன்னும் 8 நாட்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அங்கு தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. காங்கிரஸ் கட்சி கர்நாடகாவில் இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்க பிரச்சாரம் செய்து வருகிறது. மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி மாநில கட்சியின் ஆட்சியை கர்நாடகாவில் அமைக்க முயன்று வருகிறது.

அதே நேரம் ஆளும் பாஜக கர்நாடகாவில் ஆட்சியை தக்கும் வைக்க முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக பல்வேறு வியூகங்களை கையில் எடுத்து அக்கட்சி செயல்படுத்தி வருகிறது. மத்திய அரசு மூலம் புதிய திட்டங்களை தொடங்கி வைப்பது, மாநில அரசின் புதிய உத்தரவுகள் என பல்வேறு நடபடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
அதேபோல் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய அமைச்சர்கள், பாஜக மூத்த தலைவர்கள், முன்னணி பேச்சாளர்கள் என பல்வேறு தரப்பினர் பிரச்சாரத்தில் களமிறங்கி இருக்கிறார்கள். இதில் சில தலைவர்களின் பேச்சுக்கள் பெரும் சர்ச்சைகளையும் கிளப்பி வருகின்றன. அந்த வகையில்தான் தற்போது பாஜக எம்.எல்.ஏ பேச்சும் அமைந்து இருக்கிறது.

விஜயபுராவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் பசனகவுடா, உத்தரப்பிரதேச சமாஜ்வாடி முன்னாள் எம்பி அதீக் அகமது, அவரது சகோதரர் மற்றும் மகன் சுட்டுக்கொல்லப்பட்டது பற்றி பேசினார். அப்போது அவர், "நீங்கள் எங்கள் நம்பிக்கை பற்றியோ, இந்தியா அல்லது இந்துக்கள் பற்றியோ தவறாக பேசினால் சுட்டுக்கொல்வோம். சிறையில் அடைக்க மாட்டோம்.
சாலையில் என்கவுண்டர் நடக்கும். யோகி ஆதித்நாத் மாடல் அரசை கர்நாடகாவில் அமைப்போம். அனைத்து முடிவுகளையும் சாலையிலேயே எடுப்பொம்." என்று தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. என்கவுண்டர் என்பது சட்டவிரோதமான செயலாக பார்க்கப்படும் சூழலில் பாஜக எம்.எல்.ஏவே அதை ஊக்குவிக்கும் வகையில் பேசி இருப்பது சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications