பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இன்னும் சம்பவம் முடியல! பெங்களூரில் அடுத்த 2 நாட்கள் கனமழை! வானிலை மையம் வார்னிங்! மிரளும் மக்கள்

Google Oneindia Tamil News

பெங்களூர்: தலைநகர் பெங்களூரில் கடந்த சில நாட்களாகவே கனமழை வெளுத்து வாங்கும் நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் முக்கிய வார்னிங்கை கொடுத்துள்ளது.

கோடைக் காலம் முடிந்தது முதலே இந்தியா முழுக்க பரவலாக நல்ல பருவ மழை பெய்து வருகிறது. இதனால் நாட்டில் பல பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.

நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக, கர்நாடக தலைநகர் பெங்களூரில் பல இடங்களில் மிக மோசமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

சரியா போச்சு.. பெங்களூரில் மேலும் 5 நாட்களுக்கு கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! சரியா போச்சு.. பெங்களூரில் மேலும் 5 நாட்களுக்கு கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

பெங்களூர்

பெங்களூர்

இந்தியாவின் ஐடி தலைநகரமாகக் கருதப்படும் பெங்களூரில் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. சில ஐடி நிறுவனங்கள் வீட்டில் இருந்து வேலை செய்யும்படி ஊழியர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இருந்த போதிலும், கனமழை காரணமாக சுமார் 200 முதல் 250 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டு உள்ளதாக ஐடி நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன. இதனால் அங்கு வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளன.

அடுத்த இரு நாட்கள்

அடுத்த இரு நாட்கள்

நேற்று பெங்களூரில் சில பகுதிகளில் வெள்ள நீர் வடியத் தொடங்கி உள்ளது. இதனால் பெங்களூர்வாசிகள் சற்றே நிம்மதி அடைந்துள்ள நிலையில், இந்தியா வானிலை ஆய்வு மையம் பெங்களூருக்கு முக்கிய வார்னிங் ஒன்றைக் கொடுத்துள்ளது. அதாவது பெங்களூருக்கு மோசமான நிலை இன்னும் முடிந்து விடவில்லை. அடுத்த இரண்டு நாட்களுக்குப் பெங்களூர் நகரம் உட்பட மாநிலத்தின் தெற்கு உள்பகுதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 வரலாறு காணாத மழை

வரலாறு காணாத மழை

இன்றும் நாளையும் (செப்டம்பர் 8-9) கடலோர மற்றும் தெற்கு உள் கர்நாடகத்தில் ஒரு சில இடங்களிலும், செப்டம்பர் 9-10 அன்று உள்துறை கர்நாடகாவிலும் கனமழை முதல் மிகக் கனமழை பெய்யும் எனக் கூறப்பட்டுள்ளது. மோசமான மழைநீர் வடிகால் அமைப்பு மற்றும் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் தான் பெங்களூரில் ஏற்பட்ட வெள்ளத்திற்குக் காரணம் என்று வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். அதேநேரம் பெங்களூரில் வரலாறு காணாத அளவுக்குப் பெய்த மழையும் வெள்ளத்திற்கு முக்கிய காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

மிக அதிகம்

மிக அதிகம்

இன்றும் நாளையும் (செப்டம்பர் 8-9) கடலோர மற்றும் தெற்கு உள் கர்நாடகத்தில் ஒரு சில இடங்களிலும், செப்டம்பர் 9-10 அன்று உள்துறை கர்நாடகாவிலும் கனமழை முதல் மிகக் கனமழை பெய்யும் எனக் கூறப்பட்டுள்ளது. மோசமான மழைநீர் வடிகால் அமைப்பு மற்றும் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் தான் பெங்களூரில் ஏற்பட்ட வெள்ளத்திற்குக் காரணம் என்று வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். அதேநேரம் பெங்களூரில் வரலாறு காணாத அளவுக்குப் பெய்த மழையும் வெள்ளத்திற்கு முக்கிய காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

ஏர்போர்ட்

ஏர்போர்ட்

பெங்களூர் விமான நிலையத்திலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. பெங்களூர் ஏர்போர்டில் கடந்த 4 நாட்களில் 271.2 மிமீ மழைப் பதிவாகியுள்ளது, இதில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 123.8 மிமீ மழை பெய்துள்ளது. இது குறித்து பருவ நிலை வல்லுநர் கூறுகையில், "பெங்களூர் மட்டும் என்று இல்லை தமிழ்நாடு, வடக்கு மற்றும் தெற்கு கர்நாடகாவின் உள் பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது" என்றார்.

 என்ன காரணம்

என்ன காரணம்

ஒரே இடத்தில் திடீரென அதிகப்படியான கருமேகங்கள் உருவாகும் போது அதை convergence line என்று அழைக்கிறார்கள். மிகவும் நிலையானதாக இருக்கும் இந்த மேகக்குழு சிறிய பகுதியில் அதிக அளவு மழையை உருவாக்க முடியும். இப்படி உருவான மேகக் கூட்டங்கள் தான் கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி இரவு பெங்களூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழையை உருவாக்கியது.

English summary
worst is not over for Bangalore as IMD issued new warning: Heavy rain is ahead for Bangalore and its surrounding parts.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X