இவரெல்லாம் ஒரு பெண்ணா? மாமியாரை ஒரே எத்து.. கடைசியில என்னாச்சு தெரியுமா? இந்த மகராசி பெயர் "லட்சுமி"
பெங்களூர்: நேற்றிலிருந்து ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி, பதற வைத்து வருகிறது.. இந்த வீடியோவை பார்க்கும்போது, நமக்கு ஈரக்குலையே நடுங்கிவிடுகிறது..!!
4 மாதங்களுக்கு முன்பு கேரளா மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் ஒரு கொடுமை நடந்தது.. தாமஸ் என்பவர் மனைவி மஞ்சுமோள்.. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் இருக்கிறார்கள்.. தாமஸின் அம்மா எலியம்மா வர்கீஸ்.. இவருக்கு 80 வயதாகிறது.. தன்னுடனேயே அம்மாவையும் வீட்டில் வைத்து கவனித்து வருகிறார் தாமஸ்.

தாமஸ் குழந்தை: சம்பவத்தன்று, எலியம்மா ஹாலில், சேரில் உட்கார்ந்து டிவி பார்த்து கொண்டிருந்தபோது, தாமஸின் குழந்தை, தான் உட்காருவதற்கு சேர் கேட்டது.. ஆனால், குழந்தை கேட்பதை எலியம்மா கவனிக்காமல் டிவி பார்த்தபடியே இருந்தார்..
இதைப்பார்த்த மருமகள் மஞ்சுமோள், "என்னுடைய மகள் உட்காருவதற்கு சேர் தரமாட்டியா?" என்று கோபமாக மாமியாரை திட்டி, சேரில் உட்கார்ந்து இருந்த மாமியாரை, இரு கைகளாலும் பிடித்து கொடூரமாக கீழே தள்ளிவிட்டார். தொப்பென்று கீழே விழுந்த எலியம்மாளுக்கு கால் முட்டி, கைகளில் பலமாக அடிபட்டது. வலியால் அழுதுகொண்டே விரல்களால் தேய்த்து கொண்டார் அந்த எலும்பும் தோலுமாய் காணப்பட்ட எலியம்மாள்.
வீடியோ: இந்த கொடுமையை வீடியோ எடுத்ததே எலியம்மாளின் மகன் தாமஸ்தான். தன்னுடைய கணவர் இதை வீடியோ எடுக்கிறார் என்று தெரிந்தும்கூட, மஞ்சுமோள் அசரவேயில்லை..
மாறாக, தன்னுடைய மேலாடை உயர்த்தி காட்டி, "இப்போது வீடியோ எடு" என்று கெத்தாக நின்றார்.. இதெல்லாமே வீடியோவில் பதிவாகியிருந்தது.. தன்னுடைய அம்மாவை கொடுமைப்படுத்த வேண்டாம் என்று தாமஸ் பலவருடமாக கெஞ்சி வந்துள்ளார்.. ஆனால், மாமியாரை அடித்தும் உதைத்தும் வந்துள்ளார் மஞ்சுமோள்.
பெண் போலீஸ்: கடைசியில் இப்படி ஒரு வீடியோவை எடுத்து, ஆதாரத்துடன் நேராக போலீசுக்கும் சென்று, தன்னுடைய மனைவி மீதே புகார் தந்தார் தாமஸ்.. கடைசியில், பெண் போலீசார் நேரடியாக வீட்டுக்கே வந்து, அந்த மகராசியை ஸ்டேஷனுக்கு அள்ளிக் கொண்டு போனார்கள். இத்தனைக்கும், 37 வயதான மஞ்சுமோள், ஒரு பள்ளியில் ஆசிரியராம்..!!
இதோ இப்போது ஒரு கொடுமை கர்நாடகாவில் நடந்துள்ளது பாருங்கள்.. அடுத்த கொடுமை: கர்நாடகா மாநிலம், சிக்கபள்ளாபூர் மாவட்டத்தில், கொண்டப்பகரிபள்ளி என்ற கிராமம் உள்ளது..
வயதான பாட்டி: இங்கு வசித்து வருகிறார் வெங்கடலட்சுமம்மா.. இவருக்கு 80 வயதாகிறது.. நேற்று, இந்த பாட்டி தன்னுடைய வீட்டின் முன்பு தூங்க கொண்டிருந்தார். அப்போது அவரது மருமகள் லட்சுமிதேவம்மா அங்கு வந்து, மாமியார் வெங்கடலட்சுமம்மாவை தரதரவென்று இழுத்து சென்று குப்பைக் கிடங்கில் வீசியெறிந்தார்.. பிறகு மிகக்கொடுமையாக அவரை தாக்கினார்.
இதெல்லாம் பார்த்து அந்த பகுதி மக்கள் பதறிப்போய்விட்டார்கள்.. லட்சுமிதேவம்மாவை கண்டித்தார்கள்.. அப்போதும் லட்சுமியின் ஆவேசம் அடங்கவேயில்லை.. இதனால், அங்கிருந்தவர்கள் இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து சோஷியல் மீடியாவிலும் பதிவிட்டுவிட்டனர். இதைப்பார்த்த நெட்டிசன்கள் கொதித்து போயிருக்கிறார்கள்..
ஆவேசம்: மாமியாரை எதுக்காக குப்பை தொட்டியில் வீச வேண்டும்? எதற்காக 80 வயது பாட்டியை கொடுமையாக தாக்க வேண்டும்? ஆசிரமத்திலாவது அந்தம்மாவை சேர்த்து விட்டிருக்கலாமே? என்று ஆதங்கத்தில் கூறுகிறார்கள்.. அத்துடன், அந்த மருமகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேணடும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
பெண்கள் என்றாலே "கருணையின் வடிவம், மனிதானிமானத்தின் மறுஉருவம்" என்றெல்லாம் காலம் காலமாக உயர்த்தி சொல்லப்பட்டதெல்லாம், இன்றைய நவீனயுகத்தில் கரைந்து காணாமல் போய்க்கொண்டிருக்கிறது..!!
கொடுமை: எத்தனையோ பெண்கள், தங்கள் மாமியார்களை, பெற்ற தாய் போல பாவித்து வருவதை மறுக்க முடியாது... ஆனாலும், லட்சுமி போலவும் சில "மகராசிகள்" நம்மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள்... நாம என்னதான் செய்யறது???












Click it and Unblock the Notifications