வெலவெலத்துப்போன நியூ தமிழ் காலனி.. மகள் சடலத்துடன் 4 நாட்கள் வீட்டுக்குள்ளேயே அழுது புரண்ட தாய்!
பெங்களூர்: கர்நாடக மாநிலம் மண்டியாவில் இறந்துபோன மகளின் பிணத்தோடு, உடல் நலம் பாதிக்கப்பட்ட தாய் 4 நாட்களாக தங்கியிருந்து அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலம் மண்டியா நகரில் ஹாலஹள்ளி பகுதி உள்ளது. இங்கு நியூ தமிழ் காலனியில் வசித்து வந்தவர் நாகம்மா (வயது 55). இவரது மகள் ரூபா (32). இவர் ஊர்க்காவல் படையில் பணியாற்றி வந்தார்.
ரூபாவுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சீனிவாஸ் என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ரூபா தனது கணவர் மற்றும் குழந்தைகளை பிரிந்தார்.

தாயுடன் வசித்த மகள்
இதையடுத்து அவர் மண்டியா நியூ தமிழ் காலனியில் தாய் நாகம்மாவுடன் வசித்து வந்தார். இந்த வேளையில் தாய்-மகள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இருப்பினும் அடுத்த சில மணிநேரங்களில் இருவரும் பிரச்சனையை மறந்து பேசுவதை வாடிக்கையாக வைத்திருந்தனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இருவரும் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

வீட்டில் துர்நாற்றம்
இந்நிலையில் கடந்த 4 நாட்களாக வீட்டை விட்டு ரூபா வெளியே வரவில்லை. இதுபற்றி தெரிந்தாலும் அக்கம்பக்கத்தினர் அதனை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. மாறாக வெளியூர் சென்றதாக அவர்கள் நினைத்தனர். இந்நிலையில் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் இன்று வீட்டுக்குள் சென்று பார்த்தனர்.

அழுகிய நிலையில் பிணம்
அப்போது ரூபாவின் உடல் அழுகிய நிலையில் இருந்தது. அதன் அருகே நாகம்மா அழுதபடி இருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மண்டியா கிழக்கு போலீசார் விரைந்து வந்து ரூபாவின் உடலை பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பிணத்துடன் 4 நாள்
ரூபாவின் தாய் நாகம்மா எதுவும் பேசவில்லை. இதனால் ரூபா எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை. உடல்நலக்குறைவால் அவர் இறந்து இருக்கலாம் எனவும், 4 நாட்களாக நாகம்மா மகளின் பிணத்தோடு வசித்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். இருப்பினும் பிரதே பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் அவரது சாவுக்கான உண்மை காரணம் தெரியவரும் என்றனர். இதுபற்றி மண்டியா கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications