100 பவுன் நகை + ரூ.1.12 கோடி ரொக்கம்.. ஓசூரில் பாஜக எம்எல்ஏ உதவியாளரின் மருமகன் வீட்டில் IT ரெய்டு
பெங்களூர்: பெங்களூர் பாஜக எம்எல்ஏவிடம் உதவியாளராக பணியாற்றி வருவோரின் மருமகனுக்கு சொந்தமான ஓசூர் வீட்டில் இன்று வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 100 பவுன் நகை, ரூ.1.20 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் முதற்கட்டமாக ஏப்ரல் 19 ம் தேதியே தேர்தல் நடந்து முடிகிறது. கர்நாடகாவை பொறுத்தமட்டில் ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பறக்கும் படையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். குறிப்பாக தமிழ்நாடு-கர்நாடகா எல்லையில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் கடந்த 28 ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சோதனை சாவடியில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு காரில் ஆவணங்கள் இன்றி ரூ.10 லட்சம் எடுத்து செல்லப்படுவது தெரியவந்தது. இதையடுத்து காரில் இருந்தவரிடம் பறக்கும்படையினர் விசாரித்தனர். அப்போது அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சீதாராம் மேடு ஜலகண்டேஸ்வரர் நகரை சேர்ந்த லோகேஷ் குமார் (வயது 35) என்பது தெரியவந்தது.
மேலும் அவர் பேரண்டபள்ளி பகுதியில் கிரஷர் கம்பெனி நடத்தி வருவதாக தெரிவித்தார். அதுமட்டுமின்றி பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க அந்த பணத்தை பெங்களூரில் உள்ள தொழிலதிபரிடம் இருந்து வாங்கி செல்வதாக தெரிவித்தார். ஆனாலும் உரிய ஆவணங்கள் இல்லாததால் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
‛பிராமணர்கள் இல்லை’..தமிழக பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளில் எந்த ஜாதிக்கு அதிக வேட்பாளர்கள் தெரியுமா?
இதற்கிடையே தான் இன்று காலையில் ஓசூர்ஜலகண்டேஸ்வரர் நகரில் உள்ள லோகேஷ் குமாரின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக நுழைந்து சோதனை மேற்கொண்டனர். ஓசூர் வருமான வரித்துறை துணை இயக்குனர் விஷ்ணு பிரசாத் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் இந்த சோதனையை தொடங்கினர். லோகேஷ் குமாரின் வீடு முழுவதும் தேடப்பட்டது.
அப்போது அவரது வீட்டில் இருந்து 100 பவுன் நகை மற்றும் ரூ.1.20 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனை அதிகாரிகள் சூட்கேஸில் வைத்து தூக்கி சென்றனர். இதுதொடர்பாக வருமான வரித்துறையினர் தீவிர விசாரணையை தொடங்கி உள்ளனர். இதற்கிடையே தான் வருமான வரித்துறை ரெய்டில் சிக்கிய லோகேஷ் குமார் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
பாமக பண்ண வேலையை பார்த்தீங்களா.. பாஜக தலைமைக்கு போன புகார்.. எல்லாம் தருமபுரியால்?
அதாவது பெங்களூர் கேஆர் புரம் சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக பைரதி பசவராஜ் உள்ளார். முதலில் காங்கிரஸ் கட்சியில் செயல்பட்டு வந்த இவர் தற்போது பாஜக எம்எல்ஏவாக உள்ளார். மேலும் முந்தைய பாஜக அரசில் அமைச்சராக இருந்தார். இவரிடம் உதவியாளராக மஞ்சுநாத் என்பவர் பணியாற்றி வருகிறார். அந்த மஞ்சுநாத்தின் மருமகன் தான் இந்த லோகேஷ் குமார் என்பதும் தெரியவந்துள்ளது. இதனால் வருமான வரித்துறையினர் விசாரணையை இன்னும் தீவிரப்படுத்தி உள்ளனர்.












Click it and Unblock the Notifications