பாமக பண்ண வேலையை பார்த்தீங்களா.. பாஜக தலைமைக்கு போன புகார்.. எல்லாம் தருமபுரியால்?
சென்னை: வரும் லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில் தருமபுரியில் அன்புமணி ராமதாஸின் மனைவி சவுமியா அன்புமணி போட்டியிட உள்ளார். இந்நிலையில் தான் பாமக உள்ளடி வேலையில் ஈடுபடுவதாக பாஜக மேலிடத்துக்கு பரபரப்பான புகார் சென்றுள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பாஜக கூட்டணியில் பாமக போட்டியிடுகிறது. பாஜக கூட்டணியில் பாமகவுக்கு மொத்தம் 10 லோக்சபா தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதன்படி, திண்டுக்கல், மயிலாடுதுறை, கடலூர், அரக்கோணம், தருமபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், காஞ்சிபுரம் என 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதில் தருமபுரி தொகுதியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த தொகுதியில் பாமகவுக்கு நல்ல செல்வாக்கு உள்ளதோடு, கடந்த 2014 தேர்தலில் அன்புமணி ராமதாஸ் வெற்றி பெற்றிருந்தார். இருப்பினும் கடந்த 2019ல் அவர் தோற்ற நிலையில் மீண்டும் அன்புமணி ராமதாஸ் களமிறங்குவார் என கூறப்பட்டது.
ஆனால் அன்புமணி ராமதாசுக்கு பதில் அரசாங்கம் என்பவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அதன்பிறகு அரசாங்கம் மாற்றப்பட்டதோடு, அன்புமணி ராமதாசின் மனைவி சவுமியா அன்புமணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதன்மூலம் வரும் லோக்சபா தேர்தல் தர்மபுரி தொகுதியில் பாஜக கூட்டணியில் பாமக வேட்பாளராக சவுமியா அன்புமணி போட்டியிடுகிறார். அவர் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ள நிலையில் தீவிர பிரசாரத்தை தொடங்கி உள்ளார்.
இந்நிலையில் தான் தற்போது பாமகவின் செயல்பாட்டால் பாஜகவின் கூட்டணியில் உள்ள பிற கட்சியினர் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பாமகவின் செயல்பாடு குறித்து கூட்டணி கட்சியான பாஜக தலைமைக்கு பரபரப்பான புகார் சென்றுள்ளது. அதாவது தேர்தல் சமயங்களில் கூட்டணியில் இருந்தாலும் கூட சில நிர்வாகிகள் தங்களின் கட்சிகளை விட்டுவிட்டு பிற கட்சிகளுக்கு பணி செய்வது இல்லை. இது காலம் காலமாக நடந்து வருகிறது.
இத்தகைய செயலுக்கு தற்போதைய லோக்சபா தேர்தலும் விதிவிலக்கல்ல. திமுக கூட்டணிக்குள் நடப்பது போலத்தான் பாஜக கூட்டணிக்குள்ளும் நடக்கிறது. அதாவது, பாஜக கூட்டணியில் பாமக 10 இடங்களில் போட்டியிடுகிறது. இக்கட்சியின் வி.வி.ஐ.பி. வேட்பாளரான டாக்டர் அன்புமணியின் மனைவி சவுமியா அன்புமணி தர்மபுரியில் போட்டியிடுகிறார். இவரின் வெற்றிக்காக தேர்தல் பணிகளை முன்னெடுக்க வட தமிழகத்திலுள்ள பாமக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஒரு பெரும் படையே தர்மபுரிக்குள் இறங்கியுள்ளது.
இதனால், வட தமிழகத்தில் போட்டியிடும் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சியான ஜிகே வாசனின் தமாகாவுக்கு களப்பணி செய்ய அவர்கள் சம்மந்தப்பட்ட தொகுதிகளில் பாமகவினர் இல்லாதது அக்கட்சிகளை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. இந்த விவகாரத்தை பாஜக தலைவர் அண்ணாமலை, கட்சியின் தேசிய தலைமைக்கு தெரியப்படுத்தியிருக்கிறாராம். இதுகுறித்து அன்புமணியிடம் பஞ்சாயத்து வைத்துள்ளது பாஜக தலைமை. இதெல்லாம் சாதாரணம், தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் நிறைய உள்ளடி கூத்துகளை எதிர்கொள்ளவிருக்கிறது பாஜக.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications