இந்தியாவில் தொடரும் ஓமிக்ரான் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு- மொத்த எண்ணிக்கை 170 ஆக அதிகரிப்பு!
பெங்களூரு: கேரளாவில் மேலும் 4 பேருக்கு இன்று ஓமிக்ரான் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இந்தியா முழுவதும் ஓமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 170 ஆக உயர்ந்திருக்கிறது. இன்று மட்டும் 9 பேருக்கு ஓமிக்ரான் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு பிறநாடுகளை ஒப்பிடுகையில் கணிசமாக குறைந்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 6,563 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நேற்று மட்டும் 132 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

தற்போதைய நிலையில் இந்தியாவில் 82,267 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கையானது கடந்த 572 நாட்களில் மிக குறைவானது. இதனிடையே ஓமிக்ரான் எனப்படும் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது.
கர்நாடகாவில் மேலும் 5 பேருக்கு இன்று ஓமிக்ரான் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. உடுப்பியில் 2 பேருக்கும் தார்வார்ட், பத்ராவதி, மங்களூருவில் தலா ஒருவருக்கும் ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டதாக கர்நாடகா சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து கர்நாடகாவில் மட்டும் மொத்தம் 19 பேருக்கு ஓமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் கேரளாவில் இன்று 4 பேருக்கும் ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்தியாவில் ஓமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 170 ஆக அதிகரித்திருக்கிறது. மாநிலங்கள் வாரியாக ஓமிக்ரான் பாதிப்பு நிலவரம்: மகாராஷ்டிரா- 54; டெல்லி- 26; ராஜஸ்தான் -17; கர்நாடகா- 19; தெலுங்கானா- 20; குஜராத்-11; கேரளா-15; ஆந்திரா-1; சண்டிகர்-1; தமிழ்நாடு-1; மேற்கு வங்கம்-4; உ.பி.-2
-
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
மதுரையை சேர்ந்தவர்.. கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாரின் செயலாளராக தமிழர் நியமனம்.. யார் இவர்? -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications