செம ட்விஸ்ட்.. வந்த முதல் எக்சிட் போல் பாஜக அடித்து நொறுக்கும் என்கிறதே.. கடலோர கர்நாடகாவில்
பெங்களூர்: கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன. இந்தியா டுடே மை ஆக்ஸிஸ் கருத்து கணிப்பு முடிவு வெளியாகியிருக்கிறது. இதில் கடலோர கர்நாடகாவில் பாஜக மேலோங்கியுள்ளது.
கர்நாடகாவில் தற்போதைய சட்டப்பேரவையின் பதவிக் காலம் வரும் 24 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இதனால் அம்மாநில சட்டப்பேரவைக்கு இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதன்படி, கர்நாடகாவில் உள்ள 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே 10 (இன்று) ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் மாதம் 29 ஆம் தேதி அறிவித்தது.

வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 13 ஆம் தேதி தொடங்கி 20 ஆம் தேதி நிறைவு பெற்றது. தேர்தல் இன்று நடைபெற்றது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை விறு விறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. கர்நாடக தேர்தல் களத்தில் மொத்தம் 2,615 வேட்பாளர்கள் உள்ளனர். ஆளும் பாஜக சார்பில் 224 வேட்பாளர்களும், காங்கிரஸ் கட்சி சார்பில் 223 வேட்பாளர்களும் ஜேடிஎஸ் கட்சி சார்பில் 209 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.
கர்நாடகாவில் பாஜக, காங்கிரஸ், ஜேடிஎஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. கர்நாடகாவில் பாஜக தற்போது 116 இடங்களுடன் தனிபெரும்பான்மையுடன் ஆட்சி நடத்தி வரும் நிலையில், அடுத்து யார் ஆட்சி என்ற வாக்காளர்களின் தீர்ப்பு வரும் 13 ஆம் தேதி தெரியும்.
வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன. இந்தியா டுடே மை ஆக்சிஸ் இந்தியா கருத்து கணிப்புகளின் விவரம் வருமாறு:-
கடலோர கர்நாடகாவில் பாஜக அதிக இடங்களில் வெல்லும் என கணிப்பு வெளியாகியுள்ளது. பாஜக: 16, காங்கிரஸ்: 3 இடங்களிலும் வெல்லும் என கணிப்பு வெளியாகி இருக்கிறது. ஜேடி(எஸ்) கட்சிக்கு ஏமற்றமே மிஞ்சுகிறது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications