நன்றாக பேசிக்கொண்டு இருந்த ஐபிஎல் Host.. திடீரென மயங்கி விழுந்தது எப்படி? யார் இந்த ஹக் எட்மைட்ஸ்?
பெங்களூர்; 2022 ஐபிஎல் ஏலத்தில் வீரர்களை ஏலம் விட்டு வந்த ஹக் எட்மைட்ஸ் திடீரென மயங்கி. அங்கு என்ன நடந்தது என்பது பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளது.
Recommended Video
2022 ஐபிஎல் ஏலம் தீவிரமாக நடந்து வந்தது. இதுவரை பல முக்கிய வீரர்கள் ஏலம் விடப்பட்டுள்ளன.
ரெய்னா, ஸ்மித் போன்ற வீரர்கள் ஆச்சர்யமாக ஏலம் எடுக்கப்படவில்லை. பல அதிரடி திருப்பங்களுடன் ஏலம் நடந்து கொண்டு இருக்கிறது .

ஹக் எட்மைட்ஸ்
ஐபிஎல் தொடங்கியதில் இருந்தே ரிச்சர்ட் மேட்லி என்ற நபர்தான் இந்த ஏலத்தை நடத்தி வந்தார். 10 ஆண்டுகளாக தொடர்ந்து இவர் ஏலம் நடத்தி வந்தார். ஆனால் பிசிசிஐ அமைப்பிற்கும் இவருக்கும் சில கருத்து மோதல் வந்தது. இதனால் அவரின் ஒப்பந்தத்தை பிசிசிஐ ரத்து செய்தது. இதன்பின் பிசிசிஐ அணி ஹக் எட்மைட்ஸை எடுத்தது. ஏலத்துறையில் நீண்ட அனுபவம் கொண்டவர் ஹக் எட்மைட்ஸ்.

ஏலம்
2018ல் இருந்து ஹக் எட்மைட்ஸ் ஐபிஎல் ஏலத்தை மேற்கொண்டு வருகிறார். 36 வருடமாக இந்த துறையில் ஹக் எட்மைட்ஸ் இருக்கிறார். உலகம் முழுக்க 2500க்கும் மேற்பட்ட ஏல நிகழ்வுகளை இவர் தொகுத்து வழங்கி உள்ளார். உலக அளவில் கார்கள், ஓவியங்கள், கலைப்பொருட்களை ஏலம் விட்டு இருக்கிறார். சாதாரண பொருட்களை கூட அதிக விலைக்கு ஏலம் விட கூடிய ஆற்றல் கொண்டவர் இவர்.

யார் இவர்?
அதிகபட்சமாக கலை பொருட்களை ஹக் எட்மைட்ஸ் ஏலம் விடுத்து உள்ளார். 2004ல் இவர் Eric Clapton என்பவருக்கு சொந்தமான 88 கிட்டர்களை ஒரே ஏலத்தில் விட்டு $7,438,624 சம்பாதித்து சாதனை படைத்தார். இதேபோல் உலக அளவில் பிரபலமான பல ஏலங்களை ஹக் எட்மைட்ஸ் விட்டுள்ளார். அதேபோல் தொண்டு நிறுவன அமைப்புகளுக்காக ஹக் எட்மைட்ஸ் நிறைய ஏலங்களை விட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன நடந்தது?
இன்று நன்றாக சிரித்தபடி ஹக் எட்மைட்ஸ் ஏலம் விட்டுக்கொண்டு இருந்தார். முக்கியமாக இன்னைக்கு ஏலம் எடுப்பீர்களா.. இல்லை நாளைக்கு எடுப்பீர்களா என்று ஜாலியாக சிரித்து பேசியபடி ஏலம் விட்டுக்கொண்டு இருந்தார். கடைசியாக ஹஸரங்காவை ஏலம் விட்ட போது ஹக் எட்மைட்ஸ் மயங்கி விழுந்தார். அதற்கு முன்புதான் விரைவில் மதிய உணவு சாப்பிட செல்லலாம் என்று ஹக் எட்மைட்ஸ் குறிப்பிட்டார்.

மயங்கினார்
ஆனால் அதன்பின் பேசிக்கொண்டே இருக்கும் போது ஹக் எட்மைட்ஸ் மயங்கி விழுந்தார். மேடையில் இருந்து மைக் வைத்து இருந்தே ஸ்டேஜோடு சேர்ந்து ஹக் எட்மைட்ஸ் கீழே விழுந்தார். இதை பார்த்த அணி நிர்வாகிகள் அதிர்ச்சியாக எழுந்து நின்றனர். இதையயடுத்து அவருக்கு அவசர முதலுதவி வழங்கப்பட்டு வருகிறது . தற்போது உணவு இடைவேளை விடப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications