ஒருநாள் தள்ளிப்போன பிளான்! சந்திரயான் 3 லேண்டர், ரோவரை நாளை இயக்க முடிவு! திட்டத்தை மாற்றிய இஸ்ரோ
பெங்களூர்: நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கி ஆய்வுகளை முடித்துக்கொண்டு உறக்க நிலைக்கு சென்றிருக்கும் சந்திரயான் 3 பிரக்யான் ரோவரை மீண்டும் உயிர்ப்பிக்கும் பணிகள் தொடங்கி வருகின்றன. இந்நிலையில் லேண்டரையும், ரோவரையும் இயக்கும் பணிகள் நாளை நடைபெறும் என்று இஸ்ரோ கூறியுள்ளது.
நிலவின் தென் துருவத்தில் உள்ள பள்ளத்தாக்குகளில் பல பில்லியன் ஆண்டுகளாக சூரிய ஒளியே படாமல் இருக்கிறது. இந்நிலையில் இங்கு நீர் இருப்பதற்கான சாத்தியங்களை சந்திரயான்-1 விண்கலம் கண்டுபிடித்து சொன்னது. 312 நாட்களாக நிலவை 3,400 சுற்றுகளை சுற்றிய பின்னர்தான் இதை சந்திரயான் 1 உறுதி செய்தது. அதன் பின்னர் நிலவை யார் ஆக்கிரமிக்கப்போகிறார்கள் என்கிற போட்டி தொடங்கியது. இதனையடுத்து நிலவில் ரோவரை இறக்கி அதில் அதன் மூலம் ஆய்வு செய்ய கடந்த 2019ம் ஆண்டு சந்திரயான்-2 திட்டத்தை செயல்படுத்தியது இஸ்ரோ.

ஆனால் இந்த திட்டத்தில் ஏற்பட்ட சிறிய தொழில்நுட்ப தவறால் நிலவில் தரையிறங்க இருந்த ரோவர் கட்டுப்பாட்டை இழந்து நிலவில் வேகமாக மோதி உடைந்தது. இருப்பினும் இதனை கொண்டு சென்ற ஆர்பிட்டர் தற்போது வரை செயல்பட்டு வருகிறது. எனவே மீண்டும் மற்றொரு ரோவரை அனுப்புவது என்று முடிவெடுத்து சந்திரயான்-3 திட்டம் செயல்படுத்தப்பட்டது.
அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி பூமியிலிருந்து ஏவப்பட்ட சந்திரயான் -3 விண்கலம் கடந்த 23ம் தேதியன்று மாலை 6.04 மணிக்கு திட்டமிட்டபடி நிலவில் மெல்ல தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்தது. விண்வெளி துறையின் முன்னோடியான ரஷ்யா அனுப்பிய லூனா 25 விண்கலம் கூட நிலவின் தென் துருவ பகுதியில் தரையிறங்க முடியாமல் நிலவில் மோதி செயலிழந்த நிலையில், இந்தியாாவின் சந்திரயான் 3 வெற்றிகரமாக தரையிறங்கி இருப்பது உலக நாடுகள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
திட்டமிட்டபடி தனது வேலையை முடித்துக்கொண்ட பிரக்யான் ரோவர், தற்போது உறக்க நிலையில் இருக்கிறது. இதனை மீண்டும் எழுப்பும் பணிகள் நேற்று முதல் தொடங்கியுள்ளன. நிலவை பொறுத்த அளவில் பகலில் 175 டிகிரி செல்ஸியல் வெப்பம் பதிவாகி இருக்கும். இது கொதிநிலையை விட அதிகம். இருப்பினும் இந்த வெப்பத்திலிருந்து ரோவரின் கருவிகளை பாதுகாக்க சில வசதிகள் செய்யப்பட்டுள்ளது. ஆனால், குளிரிலிருந்து ரோவரை காக்க நாம் எதையும் செய்யவில்லை. கடந்த 21ம் தேதியுடன் நிலவில் இரவு காலம் முடிவடைந்தது.
21ம் தேதி காலை 10.45 மணியளவில் நிலவில் சூரியன் உதிக்க தொடங்கியது. அன்று முதல் விஞ்ஞானிகள் ரோவரையும், லேண்டரையும் எழுப்ப முயன்று வருகின்றனர். இன்று எப்படியாவது இரண்டையும் எழுப்பிவிடலாம் என்று விஞ்ஞானிகள் திட்டமிட்டிருந்த நிலையில், இந்த முயற்சி நாளை தள்ளி போயுள்ளது. இது குறித்து விண்வெளி பயன்பாட்டு மையத்தின் இயக்குனர் நிலேஷ் தேசாய் கூறுகையில், "இன்று மாலையில் பிரக்யான் ரோவர் மற்றும் விக்ரம் லேண்டரை மீண்டும் செயல்படுத்த திட்டமிட்டோம், ஆனால் சில காரணங்களால் அதை நாளை செயல்படுத்த இருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.
ஆனால் அறிவியல் வட்டாரங்களில் விசாரிக்கையில், "ரோவரும், லேண்டரும் இன்று உயிர்ப்பிக்கபட்டிருக்க வேண்டும். இன்று காலை நிலவில் ரோவர் இருக்கும் தென் துருவத்தில் 20 டிகிரி அளவு சூரியன் மேலே வந்திருக்கும். இதே நாளை 40 டிகிரிக்கு மேல் வந்திருக்கும். இப்படி இருக்கையில் இன்று தவறிவிட்டால் அடுத்தடுத்த நாட்களில் அதை உயிர்ப்பிப்பது கடினமாகிவிடும். இதனால் நமக்கு இழப்பு ஏதும் கிடையாது. ஏனெனில் இது உயிர்த்தெழுந்தாலும் மீண்டும் புதிய ஆய்வுகளை மேற்கொள்ள சாத்தியம் இல்லை" என்று கூறியுள்ளனர். எப்படி இருப்பினும் சந்திரயான் 3 ரோவர் மீண்டும் செயல்படுவதை உலகமே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications