எஸ்கேப்பான பிரஜ்வல்.. தந்தை ரேவண்ணா அதிரடி கைது.. மாஜி பிரதமர் தேவகவுடாவின் வீட்டில் தூக்கிய எஸ்ஐடி
பெங்களூர்: பெண்ணை கடத்தி சிறை வைத்த வழக்கில் முன்ஜாமீன் கோரிய முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகன் ரேவண்ணா எம்எல்ஏவின் மனு தள்ளுபடியான நிலையில் அவரை எஸ்ஐடி போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்று கைது செய்தனர். பெங்களூரில் உள்ள தேவகவுடாவின் இல்லத்தில் நுழைந்து ரேவண்ணாவை தூக்கிய சம்பவம் போலீசார் அழைத்த சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கர்நாடகாவை சேர்ந்த முன்னாள் பிரதமர் தேவகவுடா ஜேடிஎஸ் என்ற கட்சியை நடத்தி வருகிறார். இவரது மூத்த மகன் ரேவண்ணா ஹாசன் மாவட்டம் ஹோலேநரசிப்புரா எம்எல்ஏவாக உள்ளார். ரேவண்ணாவின் மகன் பிரஜ்வல் ரேவண்ணா ஹாசன் எம்பியாக உள்ளார்.

பிரஜ்வல் ரேவண்ணா ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணியில் ஜேடிஎஸ் வேட்பாளராக போட்டியிட்டுள்ளார். அவரது ஆபாச வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் ஜெர்மனி சென்றுவிட்டார். இந்த ஆபாச வீடியோ தொடர்பாக சிறப்பு விசாரணை குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே தான் ரேவண்ணா வீட்டில் வேலை செய்த பணிப்பெண் ரேவண்ணா மற்றும் பிரஜ்வல் மீது பாலியல் புகாரளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இருவரையும் விசாரணைக்கு அழைத்து எஸ்ஐடி நோட்டீஸ் வழங்கி உள்ளது. ஆனால் அவர்கள் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
இதற்கிடையே தான் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான பெண் ஒருவரை விசாரணைக்கு செல்ல விடாமல் ரேவண்ணா கடத்தி சிறை வைத்ததாக மைசூர் மாவட்டம் கேஆர் நகர் போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது ரேவண்ணாவுக்கு கூடுதல் சிக்கலை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ரேவண்ணா மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனுவை இன்று விசாரணை நடத்திய நீதிமன்றம் அந்த மனுவை அதிரடியாக தள்ளுபடி செய்தது. இதையடுத்து இன்று மாலையில் ரேவண்ணா பெங்களூர் பத்மநாபநகரில் உள்ள தனது தந்தையும், முன்னாள் பிரதமருமான தேவகவுடாவின் இல்லத்தில் இருந்தார். இதுபற்றி அறிந்த போலீசார் தேவகவுடாவின் இல்லத்துக்குள் நுழைந்து ரேவண்ணாவை விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
இந்த விசாரணையின் முடிவில் ரேவண்ணா கைது செய்யப்படலாம் என கூறப்பட்டது. அதன்படி இரவில் ரேவண்ணாைவை எஸ்ஐடி போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவரது மகன் பிரஜ்வல் தொடர்ந்து வெளிநாட்டில் உள்ளார். அவரை போலீசார் தேடிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications