ஒன்னு இல்ல, ரெண்டு இல்ல.. ரூ.40 கோடி தருகிறது பாஜக.. கர்நாடக மஜத எம்எல்ஏ பகீர்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கட்சி மாற தனக்கு ரூ.40 கோடி தர பாஜக முன் வந்ததாக மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் எம்எல்ஏ மகாதேவ் கூறியுள்ள குற்றச்சாட்டு கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் காங்கிரஸ்-மஜத கூட்டணி ஆட்சி நடக்கிறது. குமாரசாமி முதல்வராக பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில், இரு தினங்கள் முன்பாக திடீரென, ஆனந்த் சிங் மற்றும் ரமேஷ் ஜார்கிகோலி ஆகிய இரு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெவ்வேறு காரணத்தை கூறி ராஜினாமா செய்தனர்.

JDS MLA accusing offered rs 40 crore, Congress points at BJP

ஆபரேஷன் கமலாவை பாஜக கையில் எடுத்துவிட்டதா என்ற சந்தேகம் எழுந்த நிலையில், அதை உண்மை என நிரூபிக்கும் வகையில், மஜத எம்எல்ஏ மகாதேவ் ஒரு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தால் தனக்கு ரூ.40 கோடி தர பாஜக தூது விட்டதாக அவர் கூறியுள்ளார்.

மேலும், ரமேஷ் ரார்கிகோலி, காங்கிரசிலேயே தொடர ரூ.80 கோடி லஞ்சம் கேட்டதாகவும் அவர் தெரிவித்துள்ள பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, மத்திய அரசு ஊழல் மூலம் சம்பாதித்த பணத்தை, எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பயன்படுத்துவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

இதனிடையே, பாஜக துணை செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் கூறுகையில், கூட்டணிக்குள் நடக்கும் குழப்பத்தை திசை திருப்ப பாஜக மீது பழி போடுகிறார்கள். இந்த குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்றார் பிரகாஷ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+