முஸ்லீம், தலித்தை முதல்வராக்குவோம்.. கர்நாடகாவில் பாஜகவுக்கு எதிராக குமாரசாமி எடுக்கும் அஸ்திரம்!
பெங்களூர் : 2023 கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், ஒரு முஸ்லீமை முதல்வராக்க கட்சி தயாராக இருப்பதாக ஜேடிஎஸ் தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
ஜேடிஎஸ் ஆட்சிக்கு வந்தால் தலித் ஒருவருக்கும், பெண் ஒருவருக்கும் துணை முதல்வர் பதவி அளிக்கப்படும் என்றும் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் பாஜக ஆட்சியில், இஸ்லாமியர்கள் தொடர்பான சர்ச்சைகள் நிலவி வரும் நிலையில், இஸ்லாமியரை முதல்வர் ஆக்கத் தயார் எனக் கூறி, அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் குமாரசாமி.

கர்நாடகா
கர்நாடகாவில் தற்போது பசவராஜ் பொம்மை தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. 224 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு 2023ஆம் ஆண்டில் தேர்தல் நடைபெற உள்ளது. கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் உள்ள நிலையில், தேர்தலில் மதச்சார்ப்பற்ற ஜனதா தளம் கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், ஒரு முஸ்லீமை முதல்வராக்க கட்சி தயாராக இருப்பதாக மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

முஸ்லீம் முதல்வர்
மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் பஞ்சரத்ன யாத்திரையில் பங்கேற்ற ஜேடிஎஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான ஹெச்.டி.குமாரசாமி பேசுகையில், 2023 கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் மதச்சார்ப்பற்ற ஜனதா தளம் கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், ஒரு முஸ்லிம் அல்லது தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவரை முதல்வராக்க கட்சி தயாராக உள்ளது. எதிர்வரும் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் 123 தொகுதிகளில் வெற்றி பெறுவதுதான் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் இலக்கு.

துணை முதல்வர்கள்
வசந்தநரசபுரத்தில் ஒரு தலித் இளைஞர் என்னைச் சந்தித்து அவர்களின் பிரச்சனைகளைச் சொன்னார். இதைத் தொடர்ந்து, எனது கட்சி ஆட்சிக்கு வந்தால், தலித் ஒருவருக்கு துணை முதல்வர் பதவி உருவாக்கப்படும் என அறிவித்தேன். பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை போதுமான அளவு செயல்படவில்லை. பெண்களின் மேம்பாட்டுக்காக ஒரு பெண்ணை துணை முதல்வராக நியமிப்பேன்.

பெண்கள், தலித்துகள்
தற்போது கர்நாடகாவில் உள்ள பாஜக அரசு தலித்துகள் அல்லது பெண்களின் பிரச்சனைகளை கேட்கத் தயாராக இல்லை. ஜேடிஎஸ் ஆட்சிக்கு வந்தால் மட்டுமே, பெண்கள், தலித்துகளின் பிரச்சனைகள் தீரும். எதிர்வரும் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் 100 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி வெளியிடும் எனத் தெரிவித்தார்.

அஸ்திரம்
கர்நாடகாவில் ஹிஜாப் தடை, ஹலால் இறைச்சி, பஜ்ரங்தள் செயற்பாட்டாளர் ஹர்ஷா கொலை மற்றும் திப்பு சுல்தான் தொடர்பான சர்ச்சை போன்ற பிரச்சினைகள் மாநிலத்தயே உலுக்கி வருகின்றன. இந்நிலையில், ஒரு முஸ்லிம் அல்லது தலித்தை முதல்வராக்க தயாராக இருப்பதாக மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவர் குமாரசாமி தெரிவித்து இருப்பது அரசியல் கட்சிகளை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
-
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications