வாஷ்ரூமுக்குள் நுழைந்த சீரியல் நடிகை.. பின்னாலே சென்று ஆபாசமாக வீடியோ எடுத்த நபர்.. பெங்களூரில் ஷாக்
பெங்களூர்: பெங்களூரில் நட்சத்திர கிரிக்கெட் போட்டியின் போது கன்னட டிவி நடிகை வாஷ்ரூமுக்குள் சென்றார். அப்போது அவர் பின்னால் சென்று ஆபாசமாக வீடியோக்கள் எடுத்து அதனை வைத்து பணம் கேட்டு மிரட்டிய மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கன்னட சீரியல்களில் நடித்து புகழ்பெற்றவர் 32 வயது நிரம்பிய நடிகை. இவர் ரியாலிட்டி ஷோவிலும் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் தான் கடந்த 7 ம் தேதி பெங்களூர் கோரமங்களாவில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் நடந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றார்.

வாஷ்ரூம் போன நடிகை
போட்டிக்கு நடுவே அந்த நடிகை உள்விளையாட்டு அரங்கில் உள்ள வாஷ்ரூமுக்கு சென்றார். அப்போது அவரை பாலோ செய்தபடி மர்மநபர் சென்றுள்ளார். அதனை அந்த நடிகை கவனிக்கவில்லை.
ஆபாச வீடியோ
நடிகை வாஷ்ரூமில் நுழைந்த நிலையில் அந்த நபர் அவருக்கு தெரியாமல் அவரை ஆபாசமாக வீடியோ எடுத்துள்ளார். அதன்பிறகு அந்த நடிகையின் தோழிக்கு இன்ஸ்டாகிராமில் 4 ஆபாச வீடியோக்களை அனுப்பிய நபர், ‛‛ஆபாச வீடியோ என்னிடம் உள்ளது. இந்த வீடியோக்களை வெளியிட்டு விடுவேன். வெளியிடாமல் இருக்க பணம் வேண்டும்'' என்று மெசேஜ் அனுப்பி உள்ளார்.
இன்ஸ்டாவில் மிரட்டல்
தனது தோழியான நடிகையின் ஆபாச வீடியோக்களை பார்த்து அவர் அதிர்ந்து போனார். அதன்பிறகு சில நிமிடங்கள் கழித்து இன்ஸ்டாகிராமில் போன் செய்து பேசிய இந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடாமல் இருக்க பணம் தர வேண்டும்.
இல்லையெனில் அனைத்து வீடியோக்களையும் சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த நடிகையின் தோழி சம்பவம் தொடர்பாக நடிகையிடம் தெரிவித்தார்.அதை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த நடிகை சம்பவம் குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
போலீஸ் வழக்கு
மர்மநபரை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினார். அவரது புகாரின் பேரில் போலீசார் தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 77ன்படி (சட்டவிரோதமாக ஒருவரை ஆபாசமாக பார்ப்பதுடன் அதனை வீடியோவாக எடுத்தல்), 308 (பணம் கேட்டு மிரட்டல்) உள்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
சிசிடிவி கேமரா ஆய்வு
மேலும் அந்த நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். முதற்கட்டமாக கிரிக்கெட் போட்டி நடந்த கோரமங்களா உள்விளையாட்டு அரங்கில் உள்ள உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி, மர்மநபரை அடையாளம் காணும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.
நடிகை சொல்வது என்ன?
இதுபற்றி பாதிக்கப்பட்ட நடிகை கூறுகையில், ‛‛ஆபாச வீடியோ வைத்து மிரட்டும் நபர் என்னுடைய ஐடி என்று நினைத்து எனது தோழியின் ஐடிக்கு வீடியோக்களை அனுப்பி பணம் கேட்டு மிரட்டி உள்ளார். இதுபற்றிய புகாரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த நபரை தேடிவருகின்றனர்.
-
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
கேரளா Amusement park-ல் ஆகாய ஊஞ்சல் உடைந்து தமிழர்கள் உள்பட 7 பேர் காயம்! நடந்தது என்ன? -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்!












Click it and Unblock the Notifications