பெங்களூரு இல்லத்தில் பிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை.. சிக்கியது 4 பக்கத்தில் எழுதிய பரபரப்பு கடிதம்
பெங்களூரு: கன்னட டிவி நடிகை சௌஜன்யா இன்று காலை பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கிட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். அவர் தனது தற்கொலைக்கான காரணத்தை 4 பக்கங்களில் கடிதமாக எழுதி வைத்துள்ளார். அந்த கடிதத்தை கைப்பற்றி உள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கன்னட தொலைக்காட்சி நடிகை சௌஜன்யா இன்று பெங்களூருவில் உள்ள அவரது வீட்டில் இறந்து கிடந்தார். 25 வயதாகும் சௌஜன்யா தற்கொலை செய்யும் முன் கைப்பட எழுதியிருந்த கடிதம் கைப்பற்றப்பட்டுள்ளது,.
அவருடைய உண்மையான பெயரான சவி மடப்பா என்ற பெயருடன் கடிதம் இருந்தது. அவர் தனது தற்கொலைக்கு திரைத்துறையில் தனக்கு ஏற்பட்ட பிரச்சனை மற்றும் மன அழுத்தம் தான் காரணம் என்று கூறியுள்ளார்.

தற்கொலை
கர்நாடகாவின் குடகு மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர் சவி மடப்பா என்ற சௌன்யா, இவர் பெங்களூருவில் வசித்து வந்தார். இவர் இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினார்கள். அவர்கள் கைப்பற்றிய தற்கொலை கடிதத்தில், தனது பெற்றோர் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களிடம் பலமுறை மன்னிப்பு கேட்டுள்ளார்.

தற்கொலை ஏன்
அந்த கடிதம் மூன்று நாட்களுக்கு முன்பு எழுதப்பட்டதாகத் தெரிகிறது. சௌஜன்யா தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையில் உள்ளதாக கூறி கடிதம் எழுதி இருக்கிறார். அந்த கடிதத்தில் பல உருக்கமான தகவல்களை எழுதி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

வேறு வழியில்லை
சௌஜன்யா எழுதிய கடிதத்தில், "இதற்கு நான் மட்டுமே பொறுப்பு ... எனவே குடும்பம், தயவுசெய்து என்னை மன்னியுங்கள் ... நான் என் வாழ்க்கையில் இதுபோன்ற முட்டாள்தனமான செயலை செய்ய மாட்டேன் என்று உறுதியளித்திருந்தேன். ஆனால் எனக்கு வேறு வழியில்லை. நான் மன ரீதியாக செத்துக்கொண்டிருக்கிறேன். நாளுக்கு நாள், நான் மிகவும் தாழ்வாக போய்க் கொண்டிருந்தது. முன்பு போல் என்னை நான் பார்த்ததில்லை "என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

கொரானா ஊரடங்கு
கொரோனா ஊரடங்கு மற்றவர்களைப் போலவே, தொலைக்காட்சி மற்றும் திரைப்படத் துறையில் பணிபுரிபவர்களுக்கு கடினமாக இருந்தது. பலர் பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர். பலர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டனர். வேலை இல்லாமல், வருமானம் இல்லாமல் கடன் காரணமைக மிக கடினமான சூழலை சந்தித்தார்கள்.

பிக்பாஸ்
இந்த ஆண்டு ஜனவரியில், நடிகையும் கன்னட பிக் பாஸ் போட்டியாளருமான ஜெயஸ்ரீ ராமையா தற்கொலை செய்து கொண்டார். கன்னட திரை உலகு என்று இல்லை இந்தியிலும், தமிழிலும் மிக பிரபல தெலைக்காட்சி நடிகைகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் கடந்த இரண்டு வருடங்களில் நிகழ்ந்துள்ளது. தற்கொலை செய்யும் எண்ணம் இருந்தால் அதை தயவு செய்து மாற்றிக்கொள்ளுங்கள். உங்களுக்கு அப்படியான ஒரு மன அழுத்தம் இருந்தால், அரசின் இலவச எண்ணான 104க்கு அழைத்து ஆலோசனை பெறுங்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications