Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பறந்து போன செல்ல கிளி. . கண்டுபிடித்து கொடுத்தவருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்.. இவ்வளவு ஆயிரமா?

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் மாயமான கிளியை கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்த நபருக்கு சன்மானமாக ரூ 85 ஆயிரம் கிடைத்துள்ள சம்பவம் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

பொதுவாக மக்கள் தங்களுக்கு பிடித்தமான விலங்குகள், பறவைகளை வீட்டில் ஒருவர் போல ஆசையுடன் வளர்ப்பர். அதற்கு ஆசையாய் பெயர் ஒன்று வைத்து செல்லமாக அழைத்து வருவர்.

அப்படித்தான் கர்நாடக மாநிலம் துமங்குரு மாவட்டத்தில் ஒரு குடும்பத்தினர், தங்கள் வீட்டில் ஒரு நபர் போல ஆசை ஆசையாய் ஒரு கிளி ஒன்றை வளர்த்து வந்துள்ளனர். அவரது வீட்டில் வளர்ந்து வரும் இந்த கிளிக்கு 30 மாதம் ஆகிறது. தங்கள் குடும்பத்தில் கிளியும் ஒரு நபர் தான் என்கின்ற வகையில் அதனை வளர்த்து வந்துள்ளனர். அதற்கு பிடித்தமான உணவுகளை வாங்கி கொடுப்பது, அவற்றுடன் பேசி மகிழ்வது என கிளியை நன்கு பராமரித்து வந்துள்ளனர்.

 வீட்டை விட்டி ஓடிய கிளி

வீட்டை விட்டி ஓடிய கிளி

ஆப்பிரிக்க வகையை சார்ந்த இந்த கிளிக்கு குடும்பத்தினர் வைத்த பெயர் ருஸ்டன். தன்னை நன்றாக பராமரித்து, கவனித்து வரும் குடும்பத்தினருக்கு கிளியும் விஸ்வாசத்துடனேயே இருந்து வந்தது. தனக்கு தெரிந்த பாஷையில் குடும்பத்தினருடன் பேசி மகிழ்வித்து வந்தது. இந்த நிலையில், குடும்பத்தினர் யாரும் எதிர்பாராத வகையில், கடந்த 16-ந் தேதி அந்த கிளி வீட்டை விட்டு பறந்து சென்றது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் கலக்கமடைந்தனர். எப்போதும் தங்களுடன் வீட்டில் இருந்த நபர், திடீரென இல்லாதது மிகவும் கவலை அளிப்பதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

 போஸ்டர் ஒட்டி தேடல்

போஸ்டர் ஒட்டி தேடல்

இந்த நிலையில் கிளியை கண்டுபிடிக்க வீட்டின் உரிமையாளர் ஒரு திட்டம் போட்டார். பொதுவாக வீட்டில் வசிக்கும் நபர் யாரும் தொலைந்து போனால் அல்லது வீட்டை விட்டு ஓடி சென்றால் போஸ்டர் ஒட்டி அவரை தேடுவோம். ஊர் முழுக்க போஸ்டர் ஒட்டுவது, சமூக வலைத்தளத்தில் அவர்களின் புகைப்படத்தை வெளியிட்டு காணவில்லை என தேடுவது வழக்கம் இல்லையா.. அதேபோல தான் அந்த நபரும் செய்தார். ஆம் கிளியை காணவில்லை என அந்த ஊரை சுற்றி போஸ்டர் அடித்து ஒட்டினார்.

 கண்டுபிடித்தால் ரூ.50 ஆயிரம்

கண்டுபிடித்தால் ரூ.50 ஆயிரம்

மேலும் அதில் கூடுதல் விஷேசம் என்னவென்றால், எங்கள் வீட்டில் வசித்து வந்த செல்ல கிளி காணாமல் போய்விட்டது. இதனை கண்டுபிடித்து ஒப்படைப்பவர்களுக்கு சன்மானமாக ரூபாய் 50ஆயிரம் தருவதாக தெரிவித்து முகவரியை குறிப்பிட்டிருக்கிறார். என்னது கிளியை கண்டுபிடித்தால் 50 ஆயிரம் ரூபா சன்மானமா? என்ற பூரிப்பில் அங்குள்ள கிராமத்தினரும் கிளியை தேடிவந்தனர்.

 ரூ.85 ஆயிரம் கொடுத்தார்

ரூ.85 ஆயிரம் கொடுத்தார்

இந்த நிலையில், அவர் வசிக்கும் 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஸ்ரீநிவாஸ் என்பவரது வீட்டில் இந்த கிளி பிடிபட்டது. கிளியை பிடித்து வைத்திருந்த ஸ்ரீநிவாஸ், கிளி காணாமல் போனது குறித்து வீட்டின் உரிமையாளர் ஓட்டியிருந்த போஸ்டரை வைத்து உரியவரிடம் ஒப்படைத்தார். மேலும் அந்த கிளி மிகவும் சோர்வடைந்துள்ளதாகவும், பயப்படுவதாகவும் கூறி உரியவரிடம் ஒப்படைத்தார். அந்த நபரும் கிளி கிடைத்த சந்தோஷத்தில் கிளியை கண்டுபிடித்து கொடுத்த நபருக்கு சொன்னதை விட அதிக சன்மானம் கொடுத்து மகிழ்ச்சிப்படுத்தினார். ஆம் எக்ஸ்டிராவாக ரூ.35 ஆயிரம் என மொத்தம் அந்த நபருக்கு ரூ.85 ஆயிரம் கொடுத்தார்.
கிளியை கண்டுபிடித்த நபருக்கு ரூ.85 ஆயிரம் கொடுத்துள்ள சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+