கர்நாடகாவில் களமிறங்கும் பாஜக பெரும் படை.. ராஜ்நாத்சிங், யோகி, நிர்மலா சீதாராமன் இன்று பிரசாரம்!
பெங்களூர்: கர்நாடகாவில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், நிர்மலா சீதாராமன் மற்றும் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொள்கின்றனர்.
கர்நாடகா சட்டசபை தேர்தல் களத்தில் அகில இந்திய தலைவர்கள் அணிவகுத்து பிரசாரம் செய்து வருகின்றனர். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் ஏற்கனவே பாஜகவுக்காக பிரசாரம் செய்தனர். இந்த வரிசையில் பாஜக மூத்த தலைவர்கள் அடுத்தடுத்து களமிறக்கப்படுகின்றனர்.

மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், நிர்மலா சீதாராமன் மற்றும் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் இன்று கர்நாடகாவில் தேர்தல் பிரசாரம் செய்கின்றனர். லக்னோவில் இருந்து மைசூர் வருகை தரும் யோகி ஆதித்யநாத், மாண்டியாவில் தேர்தல் பிரசாரம் செய்கிறார். அதன்பின்னர் வட கர்நாடகா பகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்கிறார் யோகி.
உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தைப் பொறுத்தவரை கர்நாடகாவின் மிகப் பெரும் ஜாதிகளான ஒக்கலிகா, லிங்காயத் வாக்குகளை குறிவைத்து பிரசாரம் செய்யும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங், பெலகாவி- பாகல்கோட் பகுதிகளில் பிரசாரம் செய்கிறார். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலபுரகி பகுதியில் பிரசாரம் செய்ய உள்ளார். அங்கு வீடு வீடாக நிர்மலா சீதாராமன் பிரசாரம் செய்ய திட்டமிடப்பட்டிருக்கிறதாம்

இதேபோல மபி முதல்வர் சிவராஜ்சிங் சவுகானும் பிரசாரம் செய்ய உள்ளார். பெலகாவில் உள்ளிட்ட மாவட்டங்களில் சிவராஜ்சிங் சவுகான் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். மகாராஷ்டிரா துணை முதல்வரும் மூத்த பாஜக தலைவருமான தேவேந்திர பட்னாவிஸும் இன்று கர்நாடகாவில் தேர்தல் பிரசாரம் செய்கிறார். கர்நாடகா- மகாராஷ்டிரா எல்லையில் மராத்தியர்கள் பெரும்பான்மையினராக வாழும் பகுதிகளில் பட்னாவிஸ் பிரசாரம் செய்ய உள்ளார்.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications