5 ஏக்கர் நிலம்: மல்லிகார்ஜூன கார்கே குடும்பம் மீது லோக் ஆயுக்தாவில் 400 பக்க ஆவணத்துடன் பாஜக புகார்!
பெங்களூர்: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ரூ110 கோடி மதிப்பிலான 5 ஏக்கம் நிலம் ஒதுக்கீடு விவகாரத்தில் கர்நாடகா மாநில லோக் ஆயுக்தாவில் 400 பக்க ஆவணங்களுடன் பாஜக புகார் கொடுத்துள்ளது. முடா வழக்கில் சிக்கிய சித்தராமையா, தேர்தல் பத்திர வழக்கில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்கு ஆகியவற்றைத் தொடர்ந்து மல்லிகார்ஜூன கார்கே குடும்பத்தினர் மீது புகார் கொடுத்திருப்பதால் கர்நாடகாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முடா எனப்படும் மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் முதல்வர் சித்தராமையா மனைவிக்கு 14 வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. சித்தராமையா உள்ளிட்டோர் மீது லோக் ஆயுக்தா வழக்கு பதிவு செய்துள்ளது.

இதேபோல தேர்தல் பத்திர முறைகேடு வழக்கில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் மீதும் வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த பரபரப்புகளைத் தொடர்ந்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கர்நாடகா லோக் ஆயுக்தாவில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. பாஜகவைச் சேர்ந்த என்.ஆர்.ரமேஷ், 400 பக்க ஆவணங்களுடன் லோக் ஆயுக்தாவில் புகார் கொடுத்தார். அதில் மல்லிகார்ஜுன கார்கே, அவரது மகனும் கர்நாடகா அமைச்சருமான பிரியங்க் கார்கே, மற்றொரு மகன் ராகுல் கார்கே, மல்லிகார்ஜூன கார்கே மருமகனும் எம்பியுமான ராதாகிருஷ்ணா உள்ளிட்ட 7 பேர் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2014-ம் ஆண்டு மல்லிகார்ஜூன கார்கே குடும்பத்தின் தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு கர்நாடகா அரசு ஏற்கனவேர் 5 ஏக்கர் நிலத்தை 30 ஆண்டுகள் குத்தகைக்கு கொடுத்துள்ளது. தற்போது மீண்டும் 5 ஏக்கர் நிலத்தை கர்நாடகா அரசிடம் அந்த தொண்டு நிறுவனம் கேட்டிருந்தது. இந்த விண்ணப்பம் கொடுத்த 3 மாதத்தில் ரூ110 கோடி மதிப்பிலான 5 ஏக்கர் நிலத்தை கார்கே குடும்பத்தின் தொண்டு நிறுவனத்துக்கு கர்நாடகா அரசு வழங்கிவிட்டது. தொழில் தொடங்கும் தொழில் முனைவோர் பலரும் அரசிடம் இருந்து நிலம் பெறுவதற்கு காத்திருக்கும் நிலையில் அமைச்சர் பிரியங்க் கார்கேவின் நெருக்கடியால் அவரது குடும்பத்தின் தொண்டு நிறுவனத்துக்கு அரசு நிலம் ஒதுக்கப்பட்டது; ஆகையால் இதனை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பாஜக ரமேஷின் புகார். இதற்கான 400 பக்க ஆவண்மும் லோக் ஆயுக்தாவில் தாக்கல் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மதுரையை சேர்ந்தவர்.. கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாரின் செயலாளராக தமிழர் நியமனம்.. யார் இவர்? -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய்












Click it and Unblock the Notifications