அய்யய்யோ தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் போகுதே- பெங்களூரில் தண்ணீர் பஞ்சம்..பாஜக தேஜஸ்வி சூர்யா ஒப்பாரி
பெங்களூர்: காவிரி நீரை தமிழ்நாட்டுக்கு கர்நாடகா அரசு திறந்துவிட்டிருப்பதால் பெங்களூருக்கு குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுவிட்டதாக பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா குமுறியுள்ளார்.
காவிரியில் தமிழ்நாடு அரசு தமக்கான பங்கான 24,000 கன அடி நீரை கேட்டது. ஆனால் கர்நாடகா அரசு இதனைத் தர மறுத்தது. இதனையடுத்து நடந்த காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 5,000 கன அடிநீரை திறக்க உத்தரவிட்டப்பட்டது. இதனையும் கர்நாடகா ஏற்கவில்லை.

இதனால் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்துக்கு போனது. உச்சநீதிமன்றமும் காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை செயல்படுத்த கர்நாடகாவுக்கு உத்தரவிட்டது. ஆனால் கர்நாடகாமோ, போனால் போகிறதென சொற்ப நீரை திறந்துவிட்டது.
இதன்பினர் தமிழ்நாடு அரசு 12,500 கன அடி நீரை கேட்டது. இப்போதும் கர்நாடகா எதிர்த்தது. காவிரி ஒழுங்காற்று குழு வினாடிக்கு 3,000 கன அடிநீர் வீதம் 18 நாட்களுக்கு காவிரி நீரை திறந்துவிட சொன்னது. இதனையும் ஏற்க முடியாது; ஒரு சொட்டு நீரைக் கூட காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு தர முடியாது என்கிறது கர்நாடகா.
இதனிடையே மண்டியா பந்த், பெங்களூர் பந்த், கர்நாடகா பந்த் என வரிசையாக கன்னட அமைப்புகளும், கன்னட விவசாயிகளும் போராட்டம் நடத்துகின்றனர். கர்நாடகாவில் பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் இந்தப் போராட்டத்தை ஆதரிக்கின்றன. ஆளும் கர்நாடக காங்கிரஸ் அரசும் போராட்டங்களை ஒடுக்காமல் வேடிக்கை பார்க்கிறது.
இன்றும் கர்நாடகா தழுவிய பந்த் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பெங்களூரில் வாட்டாள் நாகராஜ் உள்ளிட்ட கன்னட அமைப்புகளின் தலைவர்கள் மறியல் போராட்டம் நடத்தி கைதாகினர். தமிழ்நாடு எல்லையான அத்திப்பள்ளியிலும் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர். பெங்களூர், மைசூரில் 144 தடை உத்தரவு அமலில் இருந்த போதும் இந்த போராட்டங்கள் நடைபெற்றன.
இந்நிலையில் பெங்களூரில் பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, தமிழ்நாட்டுக்கான காவிரி நீரை கர்நாடகா திறந்துவிட்டுவிட்டது. தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் போகுமானால் பெங்களூர் மாநகரத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும். காவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு முன்பாக கர்நாடகா அரசு தமது நிலையை தெரிவிக்க தவறிவிட்டது என்றார்.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்'












Click it and Unblock the Notifications