கர்நாடகா: அமலுக்கு வந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. நாளை முதல் போராட்டம் - பாஜக மிரட்டல்!
பெங்களூர்: கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் கடும் விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வந்தது. இந்த விலை உயர்வை உடனே வாபஸ் பெறாவிட்டால் போராட்டங்கள் வெடிக்கும் என பிரதான எதிர்க்கட்சியான பாஜக எச்சரிக்கை விடுத்துள்ளது.
கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசு பெட்ரோல், டீசல் மீதான விற்பனை வரியை திடீரென கடுமையாக உயர்த்தி அறிவித்தது. கர்நாடகாவில் பெட்ரோல் மீதான விற்பனை வரி 25.92% இருந்தது. இது தற்போது 29.84% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல டீசல் மீதான விற்பனை வரி 14.34% ஆக இருந்தது. இதுவும் 18.44% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது பெட்ரோல் மீதான விற்பனை வரி 3.92%; டீசல் மீதான விற்பனை வரி 4.1% உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விற்பனை வரி உயர்வு உடனடியாகவும் அமலுக்கு வந்தது.

கர்நாடகா அரசின் பெட்ரோல், டீசல் மீதான விற்பனை வரி உயர்வால், இம்மாநிலத்தில் பெட்ரோல், டீசல் விலையும் கிடுகிடுவென உயர்ந்தது. 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ.3 உயர்ந்து ரூ102.84 ஆகவும் டீசல் விலை ரூ.3.50 உயர்ந்து 1 லிட்டர் டீசல் ரூ89.43 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரேயடியாக பெட்ரோல், டீசல் விலை ரூ3 முதல் ரூ3.50 வரை உயர்ந்துள்ளதால் பெரும் அதிர்ச்சியை எதிர்கொண்டுள்ளனர் பொதுமக்கள்.
கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசு, சட்டசபை தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக கடுமையான நிதிச்சுமையை எதிர்கொண்டிருக்கிறது; இதனை சமாளிக்கவே பெட்ரோல், டீசல் மீதான விற்பனை வரியை உயர்த்தி இருக்கிறது.
கர்நாடகா காங்கிரஸ் அரசின் இந்த விலை உயர்வுக்கு பிரதான எதிர்க்கட்சியான பாஜக கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. கர்நாடகா மாநில அரசு உடனடியாக இந்த விலை உயர்வைத் திரும்பப் பெறாவிட்டால் திங்கள்கிழமை முதல் மாநிலம் தழுவிய போராட்டங்கள் நடத்தப்படும் எனவும் கர்நாடகா மாநில பாஜக தலைவர் விஜயேந்திரா எச்சரித்துள்ளார். பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெஜாத் பூனவாலா, காங்கிரஸின் உண்மை முகம் வெளியே வந்துவிட்டது கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் பொதுமக்களுக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறோம் என்ற பெயரில் கர்நாடகா அரசின் கஜானாவையே காலி செய்துவிட்டது காங்கிரஸ் அரசு எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
-
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications