பக்கா ஸ்கெட்ச்! ஹாஸ்டலுக்குள் காதலியை கூட்டிச்செல்ல பலே பிளான் போட்ட காதலன்! கடைசியில் ஒரு ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் பொறியியல் மாணவர் ஒருவர் தனது காதலியை விடுதிக்குள் அழைத்து வர எடுத்துள்ள முயற்சி அனைவரையும் திகைக்கச் செய்துள்ளது.

கர்நாடக மாநிலம் மணிப்பாலில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக விடுதி உள்ளன.

பெரும்பாலான கல்லூரி விடுதிகளைப் போல இங்குள்ள ஆண்கள் விடுதிக்குள் பெண்கள் செல்ல அனுமதி இல்லை. இருப்பினும், பொறியியல் மாணவர் ஒருவர் தனது காதலியை விடுதிக்குள் அழைத்து வர எடுத்துள்ள முயற்சி அனைவரையும் ஷாக் ஆக வைத்துவிட்டது.

 பொறியியல் கல்லூரி

பொறியியல் கல்லூரி

மணிப்பாலில் அமைந்துள்ள பொறியியல் கல்லூரி விடுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இரவு நேரத்தில் வழக்கம் போல டிராலியுடன் மாணவர் ஒருவர் விடுதிக்கு வந்துள்ளார். ஆனால், வழக்கத்திற்கு மாறாக அவர் எடுத்து வந்த டிராலி மிகப் பெரியதாக இருந்துள்ளது.

 உளறிக் கொட்டிய மாணவர்

உளறிக் கொட்டிய மாணவர்

இதனால் சந்தேகம் அடைந்த விடுதி வார்டன் டிராலியில் என்ன இருக்கிறது எனக் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த திடீர் கேள்வியால், ஸ்தம்பித்துப்போன அந்த மாணவர் முதலில் உளறியுள்ளார். பின்னர் ஒருவாரு சமாளித்து, வழக்கமான பொருட்கள் தான் என்றும் ஆன்லைனில் ஆர்டர் செய்த பொருட்கள் என்றும் கூறி கூறியுள்ளார்.

 உள்ளே மாணவி

உள்ளே மாணவி

இருப்பினும், என்ன இருக்கிறது என்ற சாதாரண கேள்விக்கு மாணவர் பதற்றமடைந்து உளறியது வார்டனுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து டிராலியை கண்டிப்பாகத் திறந்து காட்ட வேண்டும் என்று வார்டன் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார் இறுதியாக, சூட்கேஸ் திறக்கப்பட்ட போது உள்ளே இருந்து மாணவி ஒருவர் வெளியே வந்துள்ளார். இதைச் சற்றும் எதிர்பார்க்காத ஹாஸ்டல் வார்டன் உள்ளிட்ட அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றுவிட்டனர்.

 கல்லூரி நிர்வாகம்

கல்லூரி நிர்வாகம்

சுருண்டு நிலையில் டிராலி உள்ளே இருந்த மாணவியை ஆண்கள் விடுதிக்குள் ரகசியமாக அழைத்துச் செல்ல அந்த மாணவர் திட்டமிட்டிருந்தார். அந்த மாணவியும் அதே கல்லூரியில் தான் படித்து வருகிறார். இருவரும் காதலித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து இரண்டு பேரும் கல்லூரியில் விடுதியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இரண்டு பேரின் பெற்றோரை அழைத்து கல்லூரி நிர்வாகம் கண்டித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

 முதல்முறை இல்லை

முதல்முறை இல்லை

அதேநேரம் இதுபோல டிராலியில் வைத்து விடுதிக்குள் கூட்டிச் செல்ல முயலும் நிகழ்வு இது முதல் முறை இல்லை. ஏற்கனவே, கடந்த 2020இல் ஊரடங்கு சமயத்தில் மங்களூருவில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் தனிமையில் இருந்த இளைஞர் ஒருவர் தனது நண்பரை இதேபோல அழைத்துச் செல்ல முயன்றது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+