முதல்வர் பசவராஜ் பொம்மை சொந்த மாவட்டத்தில் காங்கிரசிடம் தோற்ற பாஜக! எடியூரப்பா கோஷ்டி உள்குத்து?
பெங்களூர்: கர்நாடகாவில் நடைபெற்ற இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. ஒரு தொகுதியில் காங்கிரசும், இன்னொரு தொகுதியில் பாஜகவும் வெற்றி பெற்றுள்ளது.
முதலமைச்சர் பசவராஜ் பொம்மையின் சொந்த மாவட்டத்தில், அதுவும் ஏற்கனவே பாஜக வசமிருந்த தொகுதி, காங்கிரசால் கைப்பற்றப்பட்டுள்ளது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
கர்நாடகாவில் பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா முதல்வர் பதவியிலிருந்து விலகிக் கொள்ளுமாறு பாஜக மேலிடத்தால் வலியுறுத்தப்பட்டு அந்தப் பதவிக்கு கொண்டு வரப்பட்டவர் பசவராஜ் பொம்மை.

முதல் முறை தேர்தல்
இவர் முதல்வராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக இரு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. எனவே இதில் பாஜக வெற்றி பெற்றால் பசவராஜ் பொம்மை தலைமையை மக்கள் ஏற்றுக்கொண்டு விட்டார்கள் என்று அர்த்தம். இரண்டிலும் தோல்வியடைந்தால் பசவராஜ் பொம்மைக்கு மக்கள் ஆதரவு கிடைக்கவில்லை என்று அர்த்தமாகி விடும் என்ற பேச்சு தேர்தலுக்கு முன்பே தொடங்கிவிட்டது.

இரு மாவட்டங்களில் இடைத் தேர்தல்
விஜயபுரா மாவட்டத்தில் உள்ள சிந்கி மற்றும் ஹாவேரி மாவட்டத்திலுள்ள ஹனகல் ஆகிய இரு தொகுதிகளிலும் அக்டோபர் 30ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இதில் ஹனகல் தொகுதி பசவராஜ் பொம்மையின் சொந்த மாவட்டத்திற்குள் இருக்கக்கூடிய தொகுதி என்பதால் கூடுதல் கவனம் பெற்றது.

தகர்த்த பாஜக கோட்டை
ஹனகல் தொகுதியின் எம்எல்ஏ வாக இருந்தவர் பாஜக மூத்த தலைவர் சிஎம் உதாசி. 85 வயதான இவர் கடந்த ஜூன் மாதம் மரணமடைந்தார். இதனால் அங்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. முதலமைச்சரின் சொந்த மாவட்டம் மற்றும் ஏற்கனவே பாஜக மூத்த தலைவர் எம்எல்ஏவாக இருந்த தொகுதி ஆகியவை இங்கு பாஜக வெல்வதற்கு எளிதான சூழலை உருவாக்கும் என்று எதிர்பார்க்கபட்டது. ஆனால் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. ஹனகல் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சீனிவாச மனே 7591 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பாஜகவுக்கு அதிர்ச்சியளித்துள்ளார்.

எதிர்க்கட்சி தொகுதி
அதே நேரம் சிந்கி தொகுதி மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி வசமிருந்த தொகுதியாகும். 85 வயதான அந்த கட்சியின் எம்எல்ஏ கடந்த ஜனவரி மாதம் மரணமடைந்தார். இதையடுத்து அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. வேறு ஒரு கட்சி எம்எல்ஏ பதவி வகித்த தொகுதியை வெல்வது என்பது சவாலான விஷயம்தான். ஆனால் அங்கு பாஜக வென்றுள்ளது. பாஜக வேட்பாளர் ரமேஷ் பூசனூர் 31,185 வாக்குகள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் 2வது இடமும், வெறும் 4,321 வாக்குகளுடன் மதசார்பற்ற ஜனதாதளம் வேட்பாளர் நாசியா அங்கடி 3வது இடத்தையும் பிடித்துள்ளனர். கை வசம் இருந்த தொகுதியை மோசமாக பறி கொடுத்துள்ளது மதசார்பற்ற ஜனதாதளம். இந்த இரு தொகுதிகளிலும் பாஜக, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. ஹனகல் தொகுதி பாஜகவின் கோட்டை. 30% லிங்காயத்து மக்கள் அங்கே இருக்கிறார்கள். அவர்கள் எடியூரப்பாவுக்காகத்தான் பாஜகவுக்கு ஓட்டு போட்டு வந்தனர். எடியூரப்பா கட்சியை விட்டு பிரிந்து தனிக்கட்சி நடத்தியபோது நடைபெற்ற ஒரு தேர்தலில் இங்கு பாஜக தோல்வியடைந்து. காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றார்.

லிங்காயத்து ஓட்டுகள்
இந்த இரு தொகுதிகளிலும் பாஜக, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவியது. ஒன்றில் பாஜகவும், மற்றொன்றில் காங்கிரசும் வென்றுள்ளது. தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதாதளத்திற்கு பூஜ்யம் கிடைத்துள்ளது. ஹனகல் தொகுதி பாஜகவின் கோட்டையாக இருந்தது. 30% லிங்காயத்து மக்கள் அங்கே இருக்கிறார்கள். அவர்கள் எடியூரப்பாவுக்காகத்தான் பாஜகவுக்கு ஓட்டு போட்டு வந்தனர். எடியூரப்பா கட்சியை விட்டு பிரிந்து தனிக்கட்சி நடத்தியபோது நடைபெற்ற ஒரு தேர்தலில் இங்கு பாஜக தோல்வியடைந்து. காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றார். இந்த நிலையில்தான், எடியூரப்பாவை முதல்வர் பதவியிலிருந்து நீக்கிய கோபத்தில் காங்கிரசுக்கு இம்முறை ஓட்டு போட்டு பசவராஜ் பொம்மைக்கு ஷாக் கொடுத்து விட்டனர் என்று கூறப்படுகிறது.

பசவராஜ் பொம்மை ஆதரவு
இப்போது எடியூரப்பா முதல்வர் பதவியில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் பாஜகவில் அவருக்கு உரிய மரியாதை கொடுக்கப்படுகிறது. முதல்வர் பசவராஜ் பொம்மையும், எடியூரப்பா போலவே, லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்தவர்தான். ஆனாலும், லிங்காயத்து வாக்குகளை காங்கிரஸ் ஈர்த்ததால் பாஜக தோற்றதாக கூறப்படுகிறது. எடியூரப்பா ஆதரவாளர்கள் உள்குத்து வேலை பார்த்து பாஜக தலைமைக்கு தங்கள் தலைவரின் பலத்தை காட்டியிருக்கலாம் என்ற பேச்சுக்கள் கர்நாடக அரசியலில் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications