முதல்வர் விஜய்-யின் 'தளபதி கச்சேரி'.. பங்குச்சந்தை வரை கேட்குமா?

Subscribe to Oneindia Tamil

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் பெருபான்மை இல்லாமல் கூட்டணி மூலம் ஆட்சி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

இதன் மூலம் நடிகராக இருந்த விஜய் தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சராக உருவெடுக்கும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. முதல் தேர்தலிலேயே மாபெரும் வெற்றி, எம்ஜிஆர்-ஐ காட்டிலும் அதிக வாங்குகள், அதிக இடங்களில் வெற்றி, கட்சியை துவங்கி குறுகிய காலத்தில் வெற்றி என பல வரலாற்று சாதனைகளை விஜய் இன்றைய வாக்கு எண்ணிக்கையில் நிகழத்தியுள்ளார்.

Vijay TVK Election politics 2026 Thalapathy Government Tamil Nadu Vijay CM Stock Market Impact TVK Election 2026 Tamil Nadu Industry Outlook Vijay Welfare Promises Business Thalapathy government Tamil Nadu Vijay TVK stock market impact Tamil Nadu assembly election 2026 market reaction TVK victory business sentiment Vijay chief minister economic policy Tamil Nadu GDP contribution industry auto electronics hub Tamil Nadu Swastika Investmart Santosh Meena Vijay welfare vs fiscal spending MSME startup promises Vijay Tamil Nadu manufacturing powerhouse cautious market reaction TVK governance perception Vijay Tamil Nadu renewable energy defence sector TVK strong showing investors 2026 vs

இந்த சிறப்புமிக்க வெற்றி இந்தியாவின் முக்கிய தொழில்துறை மாநிலமான தமிழ்நாட்டின் பொருளாதாரத்தையும், பங்குச் சந்தையையும் எப்படி பாதிக்கும் என்பது முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்துறையினர் மத்தியில் தற்போது முக்கிய விவாத பொருளாக மாறியுள்ளது.

விஜய் வருகையும்.. தமிழ்நாடும்..

தமிழ்நாடு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 8 முதல் 9 சதவீதம் பங்களிக்கும் மிக முக்கியமான மாநிலமாகும். நாட்டின் முக்கிய உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மையங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. தமிழ்நாடு மற்ற மாநிலங்களை போல் ஒரு துறையை மட்டும் சார்ந்து இருப்பது கிடையாது.

தமிழ்நாடு ஆட்டோமொபைல், எலக்ட்ரானிக்ஸ், செமிகண்டக்டர், பாதுகாப்பு உபகரணங்கள், டெக்ஸ்டைல், மோட்டார் பாகங்கள், ஐடி சேவை துறை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைகளில் உலகளாவிய நிறுவனங்களுக்கு முக்கிய தளமாக செயல்படுகிறது.

தேசிய அளவிலான தேர்தல் முடிவுகள் போல் பங்குச்சந்தை குறியீடுகளை உடனடியாக பாதிப்பதைப் போல தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் பங்குச்சந்தையை உடனடியாக ஆட்டம் காணச் செய்யாது என்றாலும், மாநிலத்தின் தொழில்துறை வலிமை காரணமாக, ஆட்சி மாற்றம் என்பது நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

தவெகவின் வெற்றி வர்த்தக துறையில் கலவையான உணர்வை ஏற்படுத்தும் என வல்லுனர்கள் கூறுகின்றனர். குறிப்பாக முதலீட்டாளர்கள் புதிய முதலீடுகளை தற்காலிகமாக நிறுத்தவும் வாய்ப்புள்ளது, காரணம் இதுவரையில் இருந்த திராவிட அரசுகளின் செயல்பாடுகள் தொழிற்துறைக்கு நன்கு அறியப்பட்டவை, ஆனால் விஜய் தலைமையிலான அரசு புதியது.

இதனால் கொள்கை மாற்றம், முதலீட்டு சந்தையை தற்காலிகமான மந்த நிலைக்கு தள்ளவும் வாய்ப்புள்ளது. விஜய்யின் வாக்குறுதிகளில் பெரும் பகுதி நலன் திட்டங்கள், சமூக நீதி மற்றும் ஊழல் ஒழிப்பு ஆகியவை முன்னிலைப் பெற்றுள்ளதால், குறுகிய காலத்தில் நிதிச் செலவு மற்றும் ஒழுங்குமுறை கண்காணிப்பு விஜய் அரசுக்கு முக்கியமானதாக மாறலாம்.

பங்குச் சந்தைக்கு உடனடி பாதிப்பு இல்லை

தற்போதைய நிலவரப்படி, இந்திய பங்குச் சந்தை விஜய்யின் தளபதி கச்சேரியால் எவ்விதமான பாதிப்பும் இல்லை என்று சந்தை ஆய்வாளர்கள் தெளிவுப்படுத்தியுள்ளனர். விஜய்யின் அரசு நலன் திட்டங்களுடன் பொருளாதார வளர்ச்சியை சமநிலைப்படுத்தி செயல்பட்டால், தமிழ்நாட்டின் தொழில்துறை மற்றும் முதலீட்டாளர்களுக்கு சாதகமாக அமையும் என்று சந்தை வட்டாரங்கள் நம்புகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+