பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தோளில் கை வைத்த தொண்டர்.. கடுப்பாகி 'பளார்' விட்ட கர்நாடகா காங்கிரஸ் தலைவர்.. வைரல் வீடியோ

Google Oneindia Tamil News

பெங்களூரு: கர்நாடகாவில் தோளில் கை வைத்த நிர்வாகி ஒருவரை அம்மாநில காங்கிரஸ் தலைவர் டி கே சிவக்குமார் அறைந்த சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. மேலும், இந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகியுள்ளது.

கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக அறியப்படுபவர் ஜி மெடகவுடா. முன்னாள் அமைச்சரும் எம்பியுமான மெடகவுடாவின் உடல்நிலை சமீபத்தில் மோசமானது.

பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மெடகவுடா கடந்த சில நாட்களுக்கு முன் தான் மாண்ட்யா மாவட்டத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

பயங்கரவாதிகளுடன் ரகசிய தொடர்பு.. காஷ்மீரில் 2காவலர்கள் உட்பட 11 அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ்.. பரபர தகவல்பயங்கரவாதிகளுடன் ரகசிய தொடர்பு.. காஷ்மீரில் 2காவலர்கள் உட்பட 11 அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ்.. பரபர தகவல்

காங்கிரஸ் நிர்வாகி

காங்கிரஸ் நிர்வாகி

இந்நிலையில், கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவர் டி கே சிவக்குமார் மெடகவுடாவை நேரில் சந்தித்து, அவரது உடல்நிலை பற்றிக் கேட்டறிய மாண்ட்யா மாவட்டத்திற்குச் சென்றிருந்தார். அங்குக் கட்சி நிர்வாகிகளுடன் அவர்கள் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது நிர்வாகி ஒருவர் டி கே சிவக்குமார் தோளில் கை வைக்க முயன்றுள்ளனர்.

பாளர்

பாளர்

இதனால் கோபமடைந்த டி கே சிவக்குமார், அந்த நிர்வாகியை பளார் எனக் கன்னத்தில் அறைந்துள்ளார். இந்தச் சம்பவத்தை அங்கிருந்த செய்தியாளர் ஒருவர் வீடியோ எடுத்தார். அதைப் பார்த்த டி கே சிவக்குமார் அறைந்த தொண்டரை நோக்கி, 'நீ தான் இதற்குக் காரணம்' என திட்டுகிறார். மேலும், செய்தியாளரிடம் வீடியோவை டெலிட் செய்யும்படியும் அவர் கேட்டுக்கொள்கிறார். இவை அனைத்தும் அந்த வீடியோவில் தெளிவாக பதிவாகியுள்ளது.

பாஜக தாக்கு

பாஜக தாக்கு

தோளில் கை வைக்க முயன்ற நிர்வாகியை டி கே சிவக்குமார் அறைந்த வீடியோ தான் இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. டி கே சிவக்குமாரின் செயலை, பாஜக தலைவர்கள் உட்படப் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த வீடியோவை பகிர்ந்த பாஜக பொதுச் செயலாளர் சிடி ரவி, "கட்சியின் நிர்வாகி ஒருவரையே கர்நாடகா காங்கிரஸ் தலைவர் அறைகிறார். அப்போது மற்றவர்களை என்ன செய்வார்" எனப் பதிவிட்டுள்ளார்.

புது விளக்கம்

இந்தச் சம்பவம் குறித்து கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் கூறுகையில், "நாட்டில் இப்போது கொரோனா பாதிப்பு இருப்பது அனைவருக்கும் தெரியும், அந்த நபர் சமூக இடைவெளி கடைப்பிடிக்காமல் இருந்தார். இதனாலேயே கோபமடைந்து அவரை அறைந்தேன்" என்று அவர் கூறியுள்ளார். சிவக்குமார் இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபடுவது இது முதல்முறை இல்லை. கடந்த 2018இல் பெல்லாரியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது அவருடன் செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞர் ஒருவர் சிவக்குமார் தாக்கியது குறிப்பிடத்தக்கது.

English summary
Karnataka Congress chief DK Shivakumar was caught on camera slapping a party worker who tried to put his hand on his shoulder. DK Shivakumar explains he slapped because the person doesn't follow Social distancing.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X