கர்நாடகா யாருக்கு? பாஜக, காங்கிரசுக்கு ஷாக்.. கருத்து கணிப்பு முடிவால் துள்ளி குதிக்கும் ஜேடிஎஸ்! ஆஹா
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தல் தொடர்பாக பல்வேறு கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில் தற்போது டெமாக்கிரஸி டைம்ஸ் நெட்வொர்க் சார்பில் புதிய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த முடிவால் ஆளும் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் ஷாக்காகி உள்ளன. மாறாக ஜேடிஎஸ் கட்சி மகிழ்ச்சியடைந்துள்ளது. இதுபற்றிய விபரம் வருமாறு:
கர்நாடகாவில் கடந்த 2018 ம் ஆண்டில் சட்டசபை தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ்-ஜேடிஎஸ் கட்சிகள் கூட்டணி அமைத்தன. இந்த கூட்டணி கவிழ்ந்த பிறகு பாஜக அதிகாரத்தை கைப்பற்றியது. தற்போது பாஜக ஆட்சி நடக்கிறது.

மே மாதம் 24ம் தேதியுடன் கர்நாடகா சட்டசபைக்கான 5 ஆண்டு பதவிக்காலம் முடிவடைய உள்ளது. இதனால் மீண்டும் சட்டசபை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மே மாதம் 10ம் தேதி கர்நாடகா சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மே 13ல் ஓட்டு எண்ணிக்கையை நடத்தி ரிசல்ட் அறிவிக்கப்பட உள்ளது.
கர்நாடகாவை பொறுத்தமட்டில் மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் ஒரு கட்சிக்கு 113 எம்எல்ஏக்கள் வேண்டும். இந்நிலையில் தான் கர்நாடகா சட்டசபை தேர்தலில் ஏராளமான கட்சிகள் போட்டியிடுகின்றன. தொடர்ந்து வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் கர்நாடகாவை பொறுத்தமட்டில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், ஜேடிஎஸ் மற்றும் ஆம்ஆத்மி இடையே தான் நேரடி போட்டி இருப்பதாக கருதப்படுகிறது.
அதிலும் ஆட்சியை யார் பிடிப்பது என்பதில் ஆம்ஆத்மி கட்சியை புறம்தள்ளப்பட்டு பாஜக, காங்கிரஸ், ஜேடிஎஸ் இடையே தான் போட்டி நிலவ உள்ளது. இந்நிலையில் தான் கர்நாடகா சட்டசபை தேர்தல் தொடர்பாக பல்வேறு கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன. சில கருத்து கணிப்புகள் பாஜக கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறும் எனவும், சில கருத்து கணிப்புகள் காங்கிரஸ் தான் அதிக தொகுதிகளை கைப்பற்றும் எனவும் தெரிவிக்கின்றன.
மேலும் பல கருத்து கணிப்புகள் மாநிலத்தில் தொங்கு சட்டசபை தான் உருவாகும். பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு தனித்து ஆட்சி அமைக்க தேவையான 113 தொகுதிகள் கிடைக்காது. இதனால் கர்நாடகாவில் ஆட்சியை நிர்ணயிப்பது என்பது முன்னாள் முதல்வர் குமாரசாமியின் ஜேடிஎஸ் கட்சி தான் என தெரிவிக்கின்றன. இருப்பினும் எப்படியாவது தனித்து ஆட்சியமைக்கும் வகையில் 113க்கும் அதிகமான தொகுதிகளில் வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் வியூகம் வகுத்துள்ளன.
இந்நிலையில் தான் தற்போது டெமாக்கிரஸி டைம்ஸ் நெட்வொர்க் சார்பில் கர்நாடகா சட்டசபை தேர்தல் தொடர்பாக கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. இந்த கருத்து கணிப்பின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி கர்நாடகாவில் காங்கிரஸ், பாஜக, ஜேடிஎஸ் ஆகியவற்றுக்கு தனிமெஜாரிட்டி கிடைக்காது என அந்த கருத்து கணிப்பு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது நடைபெற உள்ள தேர்தலில் பாஜக 96 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும், காங்கிரஸ் கட்சி 94 இடங்களில் வெற்றி பெறும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதேபோல் ஜேடிஎஸ் கட்சி 32 இடங்களிலும் மற்றவர்கள் 2 தொகுதிகளிலும் வெற்றி பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் காங்கிரஸ், பாஜக கட்சிகள் தனித்து ஆட்சியமைக்க முடியாது. ஜேடிஎஸ் கட்சியின் உதவி இருந்தால் மட்டுமே இருகட்சிகளும் ஆட்சி அரியணையில் ஏற முடியும் என இந்த கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது. இதனால் கா்நாடகாவில் ஆட்சியை நிர்ணயம் செய்வது ஜேடிஎஸ் கட்சியின் கையில் தான் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்து கணிப்பு முடிவால் ஜேடிஎஸ் கட்சியினர் மகிழ்ச்சியடைந்துள்ள நிலையில் காங்கிரஸ், பாஜகவினர் ஷாக்காகி உள்ளனர்.
*****
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications