திடீரென குறுக்கே வந்த அனுமன்.. பிரதமர் மோடி கொடுத்த ரியாக்சன்! சிலிர்த்த பெங்களூர்.. கவனிச்சீங்களா
பெங்களூர்: பெங்களூரில் இன்று 26 கிலோமீட்டர் தொலைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பிரமாண்டமான பேரணி சென்றார். இந்த வேளையில் குறுக்கே வந்த அனுமன் சிலையை பார்த்தவுடன் பிரதமர் மோடி கொடுத்த ரியாக்சனை பார்த்து தொண்டர்கள் சிலிர்த்து போய் உற்சாகமாக கோஷமிட்டனர்
கர்நாடகா சட்டசபை தேர்தல் இன்னும் 4 நாட்களில் நடைபெற உள்ளது. வரும் 10ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி கர்நாடகாவில் இறுதி கட்ட பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்று முதல் 3 நாள் சுற்றுப்பயணமாக கர்நாடகா சென்றுள்ள மோடி இன்று பெங்களூரில் பிரமாண்ட பேரணி மேற்கொண்டார்.

காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரை 26 கிலோமீட்டர் தொலைவுக்கு மோடி திறந்த வாகனத்தில் நின்று தொண்டர்களை நோக்கி உற்சாகமாக கையசைத்து ஓட்டு சேகரித்தார். மோடியை பார்த்த தொண்டர்கள் அவர் மீது மலர்களை தூவி வரவேற்றனர். மேலும் ‛‛மோடி... மோடி...'' என உற்சாகமாக கோஷமிட்டனர்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் பேரணியின்போது ஏராளமானவர்கள் பாஜக கொடிகளை உற்சாகமாக அசைத்தனர். அதோடு பஜ்ரங்தளம் அமைப்பின் கொடியும் பறந்தது. மேலும் பலர் அனுமன் வேடமிட்டு மோடியின் பேரணியில் பங்கேற்றதோடு, அனுமன் முகமூடியையும் ஏராளமானவர்கள் அணிந்திருந்தனர்.
அதாவது காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் பஜ்ரங் தளத்தை தடை செய்வதாக அறிவித்தது. அதற்கு பாஜக தலைவர்கள், பஜ்ரங்தளம் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பிரதமர் மோடியும் கண்டனத்தை பதிவு செய்ததோடு, ‛‛பஜ்ரங்பலி'' என பொதுக்கூட்டங்களில் கோஷம் எழுப்பினார். இதன் காரணமாக தான் இன்றைய மோடியின் பேரணியில் பஜ்ரங்தளத்தின் கொடியும் சேர்ந்து பறந்தது.

இத்தகைய சூழலில் தான் பிரதமர் மோடி இன்று பேரணி சென்றபோது திடீரென்று அவர் எதிரே அனுமன் சிலை தென்பட்டது. இதை பார்த்த பிரதமர் மோடி இரு கைகளையும் எடுத்து கும்பிட்டு வணங்கினார். பிரசார வாகனம் அனுமன் சிலையை கடந்து சென்றபோதும் கூட பிரதமர் நரேந்திர மோடி பின்னால் திரும்பி வணங்கியபடி வந்தார். இதனை பார்த்து பாஜகவினர் சிலிர்த்து போயினர். மேலும் ‛பஜ்ரங்பலி' என கோஷமிட்டனர்.
கர்நாடகாவில் பஜ்ரங்தளத்தை தடை செய்வதாக காங்கிரஸ் கட்சி அறிவித்ததை பாஜக பிரசார யுக்தியாக பயன்படுத்தி வருகிறது. இந்துக்களுக்கு விரோதமாக காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு உள்ளதாக பாஜகவினர் மேடைக்கு மேடை பேசி வருகின்றனர். இதனால் காங்கிரஸ் கட்சி தலைவர்களே பஜ்ரங்தள அமைப்புக்கு தடை விதிக்கப்படாது. அனுமன் கோவில் கட்டப்படும் என கூறி வருகின்றனர்.
இந்நிலையில் தான் அனுமன் சிலையை பார்த்து பிரதமர் மோடி வணங்கி உள்ளதோடு, அவரது பேரணி ஜெய் மோடி, ஜெய் அனுமன், பாரத் மாதகீ ஜெய், மோடி மோடி, பஜ்ரங்பலி என பல கோஷங்களால் அதிர்ந்து போனது. இதற்கிடையே பிரதமர் மோடி அனுமன் சிலையை பார்த்து கைகூப்பி வணங்கும் வீடியோ இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
-
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை












Click it and Unblock the Notifications