28 தொகுதி ரொம்ப முக்கியம்! பெங்களூரில் ராகுல்-பிரியங்கா இன்று பிரசாரம்! வாகனஓட்டிகளுக்கு ‛அட்வைஸ்’
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வெற்றி பெற வைக்க ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி தொடர்ந்து பிரசாரம் செய்து வந்தனர். இந்நிலையில் தான் இறுதிக்கட்டமாக அவர்கள் இருவரும் இன்று 28 தொகுதிகள் உள்ள பெங்களூரில் பொதுக்கூட்டம், பேரணி செல்ல உள்ளதால் அக்கட்சியினர் உற்சாகமடைந்துள்ள நிலையில் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீசார் முக்கிய ‛அட்வைஸ்' வழங்கி உள்ளனர்.
கர்நாடகா சட்டசபை தேர்தல் 10ம் தேதி நடைபெற உள்ளது. மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக அன்றயை தினம் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. அதன்பிறகு மே 13ல் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

தற்போது பாஜக ஆட்சி நடக்கும் நிலையில் இந்த தேர்தலில் வெற்றி பெறும் முனைப்பில் காங்கிரஸ் கட்சி உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக நேற்று சோனியா காந்தி தார்வார் மாவட்டம் உப்பள்ளி பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். மாறாக காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டவர்கள் கர்நாடகா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.
தேர்தலுக்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ளதால் இறுதிக்கட்ட பிரசாரம் விறுவிறுப்படைந்துள்ளது. அதன்படி பெங்களூர் நகரில் இன்று ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர். பெங்களூரில் மட்டும் 28 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் காங்கிரஸ் சார்பில் பொதுக்கூட்டம் மற்றும் பேரணிக்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி இன்று மாலை 3.30 மணிக்கு பெங்களூர் புறநகர் மாவட்டம் ஆனேக்கல்லில் ராகுல் காந்தி தெருமுனை பிரசார கூட்டத்தில் பேச உள்ளார். அதைத்தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு பெங்களூர் புலிகேசிநகரில் தெருமுனை பிரசார கூட்டத்தில் பங்கேற்கிறார். அதேபோல் பிரியங்கா காந்தி பெங்களூர் மகாதேபுராவில் திறந்த வாகனத்தில் பேரணி செல்ல .ள்ளார். அதன்பிறகு இரவு 7 மணிக்கு பெங்களூர் தெற்கு பகுதியில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேச உள்ளார். அதன்பிறகு இரவு 8.30 மணிக்கு பெங்களூர் சிவாஜிநகரில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் இணைந்து பொதுக்கூட்டத்தில் பேச உள்ளனர்.
இதனால் பெங்களூரில் உள்ள 28 சட்டசபை தொகுதிகளில் இருந்து ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள், நிர்வாகிகள், மக்கள் குவிய உள்ளனர். பிற மாவட்டங்களில் இருந்து காங்கிரஸ் கட்சியினர் வருகை தர வாய்ப்புள்ளது. இதனால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம். இந்நிலையில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரின் பிரசார நிகழ்ச்சிகளால் பெங்களூரில் 11 முக்கிய இடங்களை வாகன ஓட்டிகள் தவிர்க்க வேண்டும் என பெங்களூர் மாநக போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
அதன்படி மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை ஓல்டு மெட்ராஸ் ரோடு, சுரன்சன்தாஸ் ரோடு, மகாதேவபுரா மெயின் ரோடு, மாரத்தஹள்ளி மெயின் ரோடு, வர்த்தூர் கோடி ஆகியவற்றை மக்கள் தவிர்க்க வேண்டும். அதன்பிறகு மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை சிவாஜிநகர் ரஸ்ஸல் மார்க்கெட், டேனரி ரோடு பெரியார் சர்க்கிள் உள்ளிட்ட பகுதிகளையம், இரவு 7 மணி முதல் இரவு 9 மணி வரை ஒங்கசந்திரா, பொம்மனஹள்ளி ரோடு, பேகூர் ரோடு, ஓசூர் ரோடு உள்ளிட்டவற்றையும் தவிர்க்க வேண்டும் என பெங்களூர் மாநக போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications