Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரே போன்கால்.. ஆட்டத்தை துவங்கிய பாஜக! ‛ஆபரேஷன் தாமரை’யால் அலறும் காங்கிரஸ், ஜேடிஎஸ்! பரபர கர்நாடகா

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தொங்கு சட்டசபை அமைய வாய்ப்பு அதிகம் உள்ளது என கூறப்படும் நிலையில் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கட்சிகளின் வெற்றி வேட்பாளர்களை இழுக்க முயற்சிப்பதாக கூறப்படும் நிலையில் அங்குள்ள அரசியல் களம் தேர்தல் ரிசல்ட்டுக்கு முன்பே பரபரப்பை எட்டியுள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ளன. கடந்த 10 ம் தேதி தேர்தல் நடந்தது. இதில் பதிவான ஓட்டுக்கள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கி நடைபெற உள்ளது.

Karnataka Election Result: Fear of hung assembly BJP trying to pull winnig candidates from Congress and BJP?

மாநிலம் முழுவதும் மொத்தம் 36 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் கர்நாடகாவில் ஆட்சியை தக்கவைக்க பாஜக முயற்சித்து வருகிறது. அதேவேளையில் எப்படியாவது ஆட்சி கட்டிலில் அமர வேண்டும் என காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றன.

இந்நிலையில் தான் கடந்த 10ம் தேதி ஓட்டு எண்ணிக்கை முடிந்த பிறகு தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியானது. கர்நாடகாவில் செயல்பட்டு வரும் தொலைக்காட்சி நிறுவனங்கள் நடத்திய கருத்து கணிப்புகளில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும் கூட தனிப்பெரும்பான்மை கிடைக்காது எனவும், 2வது பெரிய கட்சியாக பாஜக வரும் எனவும் தெரிவித்துள்ளன. அதாவது மாநிலத்தில் ஆட்சியமைக்க தேவையான 113 இடங்கள் பாஜக, காங்கிரஸ் என 2 கட்சிகளுக்கும் கிடைக்காது என அந்த கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இதனால் தான் தற்போது தேர்தல் ரிசல்ட் வருவதற்கு முன்பே கர்நாடகா அரசியல் களம் பரபரப்பை எட்டியுள்ளது. அதாவது பெரும்பான்மை கிடைக்காவிட்டால் என்ன செய்வது? என காங்கிரஸ், பாஜகவினர் தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகின்றன. ஜேடிஎஸ் கட்சியுடன் சேர்ந்து ஆட்சியமைத்தால் குமாரசாமிக்கு முதல்வர் பதவியை விட்டு கொடுக்க வேண்டி இருக்கும். இதனால் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் அதனை விரும்பவில்லை. இருப்பினும் இறுதியில் வேறு வழியில்லாத பட்சத்தில் ஜேடிஎஸ் கட்சியுடன் கைகோர்க்கலாம் என அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இதற்கிடையே தான் ஒருவேளை பாஜக 100 இடங்களில் வெற்றி பெற்றால் சிக்கல் ஏற்பட்டு விடும் என காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சி நினைக்கிறது. கடந்த முறை காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சிகளில் இருந்து 17 எம்எல்ஏக்களை பாஜக இழுத்து கூட்டணி ஆட்சியை கலைத்து அதிகாரத்தை கைப்பற்றியது. இதனால் காங்கிரஸ்-ஜேடிஎஸ் கட்சியின் 5 ஆண்டு ஆட்சி கனவு ஓராண்டிலேயே சிதைந்தது.

அதேபோல் இந்த முறையும் பாஜக ‛ஆபரேஷன் தாமரை' திட்டத்தை கையில் எடுத்துள்ளதாக காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சிகள் நினைக்கின்றனர். குறிப்பாக பாஜகவின் மூத்த தலைவரும், அமைச்சருமான ஆர் அசோக், ‛‛காங்கிரஸ் கட்சி தனி மெஜாரிட்டி இன்றி அதிக இடங்களில் ஜெயித்தாலும் பாஜக தான் ஆட்சியை பிடிக்கும். இதற்காக பாஜக பிளான் பி வைத்துள்ளது'' என கூறியிருப்பது தான் தற்போது காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சி தலைவர்களை கலங்கடிக்க செய்துள்ளது.

இதனால் இருகட்சிகளும் நாளை வெற்றி பெறும் வேட்பாளர்களை தங்களின் நேரடி கட்டுப்பாட்டில் வைக்க முடிவு செய்துள்ளனர். மேலும் தற்போது பாஜக ‛ஆபரேஷன் தாமரை' மூலம் எம்எல்ஏக்களை தங்கள்பக்கம் வரும்படி போன் செய்து வருவதாக கூறப்படுகிறது. காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பு அதிகமுள்ளவர்களுக்கு பாஜக தலைவர்கள் தொடர்பு கொள்ள முடிவு செய்துள்ள நிலையில் சுயேச்சையாக போட்டியிட்டவர்களை தொடர்பும் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் கர்நாடகா அரசியலில் தற்போது பரபரப்பு தொற்றி கொண்டுள்ளது. முதற்கட்டமாக இன்று தேர்தலுக்கு முன்பே காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் டிகே சிவக்குமார், முன்னாள் முதல்வர் சித்தராமையா உள்ளிட்டவர்கள் தங்களது வேட்பாளர்களுக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளனர். பாஜக எந்த ஆசை காட்டினாலும் கட்சி தாவக்கூடாது. உங்களுக்கு தேவையான அனைத்தையும் நாங்களே செய்து தருவோம் என வாக்குறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை வெற்றி பெறும் அனைவரையும் ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் வைக்கவும் காங்கிரஸ் கட்சி திட்டம் வகுத்து வருகிறது.

அதேபோல் ஜேடிஎஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா வெற்றி வாய்ப்பு உள்ளவர்களை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இந்த வேளையில் மாநிலத்தில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது. இதனால் காங்கிரஸ், பாஜகவினர் அழைத்தால் போய்விட வேண்டாம். பெரும்பான்மை கிடைக்காத நிலையில் கிங்மேக்கராக நாம் தான் வருவோம். அப்போது பதவிகள் அனைத்தும் பகிர்ந்து வழங்கப்படும் என நம்பிக்கை கொடுத்துள்ளார். மேலும் குமாரசாமி தற்போது சிங்கப்பூரில் உள்ளார். அங்கிருந்தபடியே அவர் ஜேடிஎஸ் கட்சியில் வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்களை தொடர்பு கொண்டு தங்களுடனே இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+