பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கர்நாடக இடைத்தேர்தல்: காங்கிரஸ் - மஜத 4 தொகுதியில் வெற்றி.. ஒரு தொகுதியில் மட்டும் வென்ற பாஜக!

கர்நாடகாவில் நடைபெற்ற 3 நாடாளுமன்ற மற்றும் 2 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலின் முடிவுகள் வெளியாகி உள்ளது.

Google Oneindia Tamil News

பெங்களூர்: கர்நாடகாவில் நடைபெற்ற 3 நாடாளுமன்ற மற்றும் 2 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலின் முடிவுகள் வெளியாகி உள்ளது. இதில் 4 தொகுதிகளில் காங்கிரஸ் - மஜத கூட்டணி அதிரடியாக வெற்றிபெற்றுள்ளது.

கர்நாடக அரசியலில் அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இடைத்தேர்தலுக்கான முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. கடந்த நவம்பர் 3ம் தேதி அங்கு 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.

ஷிவமோகா, பெல்லாரி, மாண்டியா ஆகிய மூன்று நாடாளுமன்ற தொகுதிகளிலும், ராமநகர், ஜம்கண்டி ஆகிய சட்டசபை தொகுதிகளும் தேர்தல் நடந்தது. இந்த தேர்தல் மூலம் கர்நாடக சட்டசபையின் பலத்தில் நிறைய மாற்றம் ஏற்படும் என்பதால் இந்த தேர்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

நடந்து முடிந்த இந்த தேர்தலில் 65 சதவிகித வாக்குகள் பதிவானது. இதில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது. பாஜக தனியாக தேர்தலை சந்தித்தது.

பெரிய பின்னடைவு

பெரிய பின்னடைவு

இந்த நிலையில் இந்த தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகி உள்ளது. இதில் 4 தொகுதிகளில் காங்கிரஸ் - மஜத கூட்டணி அதிரடியாக வெற்றிபெற்றுள்ளது. இது பாஜகவிற்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தல், 5 மாநில சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில், இந்த முடிவுகள் பாஜகவிற்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

ஷிவமோகா

ஷிவமோகா

ஷிவமோகா நாடாளுமன்ற தொகுதிகளில் பாஜக கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் பிஒய் ராகவேந்திரா அந்த தொகுதியில் வெற்றிபெற்றுள்ளார். 39480 வாக்குகள் வித்தியாசத்தில் மஜத கட்சியை சேர்ந்த எஸ் மதுபங்கரப்பா தோல்வி அடைந்துள்ளார். இங்கு மட்டும்தான் பாஜக வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பெல்லாரி

பெல்லாரி

பெல்லாரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் - மஜத கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஎஸ் உகாரப்பா அந்த தொகுதியில் 1,98,307 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார். பாஜகவின் கோட்டையான பெல்லாரி தொகுதியை கைப்பற்றி உள்ளது காங்கிரஸ். பாஜகவின் வேட்பாளர் சாந்தாவை விட 1,98,307 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் வி.எஸ் உகரப்பா. இது பாஜகாவிற்கு பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது.

மாண்டியா

மாண்டியா

மாண்டியா நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் - மஜத கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. மஜத கட்சியை சேர்ந்த சிவராமேகவுடா அந்த தொகுதியில் 324943 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார். மாண்டியா தொகுதியையும் இழந்தது அந்த கட்சிக்கு பெரிய அதிர்ச்சி அளித்து இருக்கிறது.

ராமநகர் தொகுதி

ராமநகர் தொகுதி

ராமநகரம் சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் - மஜத கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. மஜத கட்சியை சேர்ந்த முதல்வர் குமாரசாமியின் மனைவி அனிதா குமாரசாமி அந்த தொகுதியில் 109137 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார். பாஜக வேட்பாளராக இருந்த சந்திரசேகர் ஏற்கனவே காங்கிரசில் சேர்ந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

ஜம்கண்டி தொகுதி

ஜம்கண்டி தொகுதி

ஜம்கண்டி சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் - மஜத கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆனந்த்சித்து யமகவுடா அந்த தொகுதியில் 39,480 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் ஸ்ரீகாந்த் குல்கர்னி தோல்வியை தழுவி உள்ளார்.

English summary
Karnataka By - Election Results: Congress- JDS takes initial lead in 4 Seats, BJP takes in 1 Seat.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X