கவுரி லங்கேஷ் கொலையாளிகளுக்கு ஜாமீன்- நடிகர் பிரகாஷ் ராஜுக்கும் குறிவைத்ததாக வாக்குமூலம் தந்தவர்கள்!
பெங்களூர்: 6 ஆண்டுகளுக்கு முன்னர் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார் மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ். இந்த கொலையில் தொடர்புடைய 3 குற்றவாளிகளுக்கு கர்நாடகா உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. பிரதமர் மோடி மற்றும் பாஜகவின் இந்துத்துவா கொள்கைகளை மிகக் கடுமையாக விமர்சித்தவர் கவுரி லங்கேஷ்.
2017-ம் ஆண்டு மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ், பெங்களூரில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. கவுரி லங்கேஷ் படுகொலையைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.

இந்தப் படுகொலை சம்பவத்தில் மோகன் நாயக் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு 6 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியான மோகன் நாயக்குக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கர்நாடகா உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்த வழக்கில் இறுதிக் குற்றப்பத்திரிகை இன்னமு தாக்கல் செய்யப்படவில்லை என்பதால் முக்கிய குற்றவாளி மோகன் நாயக்குக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
இதனடிப்படையில் தங்களுக்கும் ஜாமீன் வழங்கக் கோரி எஞ்சிய 3 குற்றவாளிகளும் கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் கலாபுரகி கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி விஸ்வஜித் ஷெட்டி 3 குற்றவாளிகளான அமித் திவேகர், நவீன் குமார், சுரேஷ் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
தற்போது ஜாமீன் பெற்றுள்ள நவீன்குமார்தான், பிரதமர் மோடிக்கு எதிராக கவுரி லங்கேஷுடன் இணைந்து செயல்பட்ட நடிகர் பிரகாஷ் ராஜையும் கொல்ல சதித் திட்டம் தீட்டி இருந்தோம் என ஒப்புதல் வாக்குமூலம் தந்தவர். கவுரி லங்கேஷைத் தொடர்ந்து நடிகர் பிரகாஷ் ராஜூக்கு குறி வைத்திருந்தோம். ஆனால் அதற்குள் எங்களை போலீசார் கைது செய்துவிட்டனர் எனவும் நவீன்குமார் வாக்குமூலம் கொடுத்திருந்தார்.
அப்போது இது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த நடிகர் பிரகாஷ் ராஜ், இதுகுறித்து பிரகாஷ்ராஜ் டிவிட் செய்துள்ளார். அதில் எதிர்க்கும் குரல்களை ஒடுக்க திட்டமிடுகிறார்கள். என்னுடைய குரல் இன்னும் வலுப்பெறும். இவ்வளவு வெறுப்பரசியலை செய்துவிட்டு நீங்கள் தப்பிக்கமுடியும் என்று நினைக்கிறீர்களா என கோபம் கொப்பளிக்க சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications